5221
சஞ்சிதம் வீடும் நெஞ்சித பாதம் 
தஞ்சித மாகும் சஞ்சித பாதம் 
கொஞ்சித மேவும் ரஞ்சித பாதம் 
குஞ்சித பாதம் குஞ்சித பாதம்   
5222
எண்ணிய நானே திண்ணியன் ஆனேன் 
எண்ணிய வாறே நண்ணிய பேறே 
புண்ணியன் ஆனேன் அண்ணியன் ஆனேன் 
புண்ணிய வானே புண்ணிய வானே   
5223
தொத்திய சீரே பொத்திய பேரே 
துத்திய பாவே பத்திய நாவே 
சத்தியம் நானே நித்தியன் ஆனேன் 
சத்திய வானே சத்திய வானே   
5224
எம்புலப் பகையே எம்புலத் துறவே 
எம்குலத் தவமே எம்குலச் சிவமே 
அம்பினில் கனலே அந்தணர்க் கிறையே 
அம்பலத் தரசே அம்பலத் தரசே   
5225
இன்புடைப் பொருளே இன்சுவைக் கனியே 
எண்குணச் சுடரே இந்தகத் தொளியே 
அன்புடைக் குருவே அம்புயற் கிறையே 
அம்பலத் தமுதே அம்பலத் தமுதே   

திருச்சிற்றம்பலம் 
டீயஉம--------------------------------------------------------------------------------

 திருநட மணியே 

தாழிசை