5256
வாமஸோதி சோமஸோதி வானஸோதி ஞானஸோதி 
மாகஸோதி யோகஸோதி வாதஸோதி நாதஸோதி 
ஏமஸோதி வியோமஸோதி ஏறுஸோதி வீறுஸோதி 
ஏகஸோதி ஏகஸோதி ஏகஸோதி ஏகஸோதி   
5257
ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே 
வாதிஞான போதனே வாழ்கவாழ்க நாதனே   

திருச்சிற்றம்பலம் 
டீயஉம--------------------------------------------------------------------------------

 கண்புருவப் பூட்டு 

தாழிசை 
5258
கையறவி லாதுநடுக் கண்புருவப் பூட்டு 

கண்டுகளி கொண்டுதிறந் துண்டுநடு நாட்டு 
ஐயர்மிக உய்யும்வகை அப்பர்விளை யாட்டு 

ஆடுவதென் றேமறைகள் பாடுவது பாட்டு   
5259
சிற்சபையும் பொற்சபையும் சொந்தமென தாச்சு 

தேவர்களும் மூவர்களும் பேசுவதென் பேச்சு 
இற்சமய வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு 

என்பிறப்புத் துன்பமெலாம் இன்றோடே போச்சு   
5260
ஐயர்அருட் சோதியர சாட்சிஎன தாச்சு 

ஆரணமும் ஆகமமும் பேசுவதென் பேச்சு 
எய்யுலக வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு 

என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு