5261
ஈசன்அரு ளால்கடலில் ஏற்றதொரு ஓடம் 

ஏறிக்கரை ஏறினேன் இருந்ததொரு மாடம் 
தேசுறும்அம் மாடநடுத் தெய்வமணி பீடம் 

தீபஒளி கண்டவுடன் சேர்ந்ததுசந் தோடம்   
5262
மேருமலை உச்சியில்வி ளங்குகம்ப நீட்சி 

மேவும்அதன் மேல்உலகில் வீறுமர சாட்சி 
சேரும்அதில் கண்டபல காட்சிகள்கண் காட்சி 

செப்பல்அரி தாம்இதற்கென் அப்பன்அருள் சாட்சி   
5263
துரியமலைமேல்உளதோர் சோதிவள நாடு 

தோன்றும்அதில் ஐயர்நடம் செய்யுமணி வீடு 
தெரியும்அது கண்டவர்கள் காணில்உயி ரோடு 

செத்தவர் எழுவார்என்று கைத்தாளம் போடு   
5264
சொல்லால் அளப்பரிய சோதிவரை மீது 

தூயதுரி யப்பதியில் நேயமறை ஓது 
எல்லாம்செய் வல்லசித்தர் தம்மைஉறும் போது 

இறந்தார்எழுவாரென்றுபுறந்தாரைஊது   
5265
சிற்பொதுவும் பொற்பொதுவும் நான்அறிய லாச்சு 

சித்தர்களும் முத்தர்களும் பேசுவதென் பேச்சு 
இற்பகரும்() இவ்வுலகில் என்னைஇனி ஏச்சு 

என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு   
 () இப்பெரிய விவ்வுலகில் - முதற்பதிப்பு, ச மு க பதிப்பு