5266
வலதுசொன்ன பேர்களுக்கு வந்ததுவாய்த் தாழ்வு 

மற்றவரைச் சேர்ந்தவர்க்கும் வந்ததலைத் தாழ்வு 
வலதுபுஜம் ஆடநம்பால் வந்ததருள் வாழ்வு 

மற்றுநமைச் சூழ்ந்தவர்க்கும் வந்ததுநல் வாழ்வு   
5267
அம்பலத்தில் எங்கள்ஐயர் ஆடியநல் லாட்டம் 

அன்பொடுது தித்தவருக் கானதுசொல் லாட்டம் 
வம்புசொன்ன பேர்களுக்கு வந்ததுமல் லாட்டம் 

வந்ததலை யாட்டமின்றி வந்ததுபல் லாட்டம்   
5268
நாத்திகம்சொல் கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு 

நாக்குருசி கொள்ளுவதும் நாறியபிண் ணாக்கு 
சீர்த்திபெறும் அம்பலவர் சீர்புகன்ற வாக்கு 

செல்வாக்கு நல்வாக்கு தேவர்திரு வாக்கு   
டீயஉம--------------------------------------------------------------------------------

 ஊதூது சங்கே

தாழிசை 
5269
கைவிட மாட்டான்என்று ஊதூது சங்கே 

கனக சபையான்என்று ஊதூது சங்கே 
பொய்விடச் செய்தான்என்று ஊதூது சங்கே 

பூசைப லித்ததென்று ஊதூது சங்கே   
5270
தூக்கம் தொலைத்தான்என்று ஊதூது சங்கே 

துன்பம் தவிர்த்தான்என்று ஊதூது சங்கே 
ஏக்கம் கெடுத்தான்என்று ஊதூது சங்கே 

ஏம சபையான்என்று ஊதூது சங்கே