5271
பொன்னடி தந்தான்என்று ஊதூது சங்கே 

பொன்னம் பலத்தான்என்று ஊதூது சங்கே 
இன்னல் அறுத்தான்என்று ஊதூது சங்கே 

என்னுள் அமர்ந்தான்என்று ஊதூது சங்கே   
5272
அச்சம் தவிர்த்தான்என்று ஊதூது சங்கே 

அம்பல வாணன்என்று ஊதூது சங்கே 
இச்சை அளித்தான்என்று ஊதூது சங்கே 

இன்பம் கொடுத்தான்என்று ஊதூது சங்கே   
5273
என்உயிர் காத்தான்என்று ஊதூது சங்கே 

இன்பம் பலித்ததென்று ஊதூது சங்கே 
பொன்உருத் தந்தான்என்று ஊதூது சங்கே 

பொற்சபை அப்பன்என்று ஊதூது சங்கே   
5274
சிவமாக்கிக்கொண்டான்என்று ஊதூது சங்கே 

சிற்றம் பலத்தான்என்று ஊதூது சங்கே 
நவநோக் களித்தான் என்று ஊதூது சங்கே 

நான்அவன் ஆனேன்என்று ஊதூது சங்கே   
5275
நாத முடியான்என்று ஊதூது சங்கே 

ஞானசபையான்என்று ஊதூது சங்கே 
பாத மளித்தான்என்று ஊதூது சங்கே 

பலித்தது பூசைஎன்று ஊதூது சங்கே