5276
தௌ;ளமு தானான்என்று ஊதூது சங்கே 

சிற்சபை அப்பன்என்று ஊதூது சங்கே 
உள்ளம் உவந்தான்என்று ஊதூது சங்கே 

உள்ள துரைத்தான்என்று ஊதூது சங்கே   
5277
என்னறி வானான்என்று ஊதூது சங்கே 

எல்லாம்செய் வல்லான்என்று ஊதூது சங்கே 
செந்நிலை தந்தான்என்று ஊதூது சங்கே 

சிற்சபை அப்பன்என்று ஊதூது சங்கே   
5278
இறவாமை ஈந்தான்என்று ஊதூது சங்கே 

எண்ணம் பலித்ததென்று ஊதூது சங்கே 
திறமே அளித்தான்என்று ஊதூது சங்கே 

சிற்றம் பலத்தான்என்று ஊதூது சங்கே   
5279
கரவு தவிர்ந்ததென்று ஊதூது சங்கே 

கருணை கிடைத்ததென்று ஊதூது சங்கே 
இரவு விடிந்ததென்று ஊதூது சங்கே 

எண்ணம் பலித்ததென்று ஊதூது சங்கே   
5280
எல்லாம்செய் வல்லான்என்று ஊதூது சங்கே 

எல்லார்க்கும் நல்லான்என்று ஊதூது சங்கே 
எல்லாம் உடையான்என்று ஊதூது சங்கே 

எல்லாமும் ஆனான்என்று ஊதூது சங்கே