5281
கருணா நிதியர்என்று ஊதூது சங்கே 

கடவுள் அவனேஎன்று ஊதூது சங்கே 
அருள்நா டகத்தான்என்று ஊதூது சங்கே 

அம்பலச் சோதிஎன்று ஊதூது சங்கே   
5282
தன்னிகர் இல்லான்என்று ஊதூது சங்கே 

தலைவன் அவனேஎன்று ஊதூது சங்கே 
பொன்னியல் வண்ணன்என்று ஊதூது சங்கே 

பொதுநடம் செய்வான்என்று ஊதூது சங்கே   
5283
ஆனந்த நாதன்என்று ஊதூது சங்கே 

அருளுடை அப்பன்என்று ஊதூது சங்கே 
தானந்தம் இல்லான்என்று ஊதூது சங்கே 

தத்துவச் சோதிஎன்று ஊதூது சங்கே   
5284
பொய்விட் டகன்றேன்என்று ஊதூது சங்கே 

புண்ணியன் ஆனேன்என்று ஊதூது சங்கே 
மெய்தொட்டு நின்றேன்என்று ஊதூது சங்கே 

மேல்வெளி கண்டேன்என்று ஊதூது சங்கே   
திருச்சிற்றம்பலம் 
டீயஉம--------------------------------------------------------------------------------

 சின்னம் பிடி 

தாழிசை 
5285
அம்பலவர் வந்தார்என்று சின்னம் பிடி 

அற்புதம்செய் கின்றார்என்று சின்னம் பிடி 
செம்பலன் அளித்தார்என்று சின்னம் பிடி 

சித்திநிலை பெற்றதென்று சின்னம் பிடி