5286
சிற்சபையைக் கண்டோ ம்என்று சின்னம் பிடி 

சித்திகள்செய் கின்றோம்என்று சின்னம் பிடி 
பொற்சபை புகுந்தோம்என்று சின்னம் பிடி 

புந்திமகிழ் கின்றோம்என்று சின்னம் பிடி   
5287
ஞானசித்திபுரம்என்று சின்னம் பிடி 

நாடகம்செய் இடம்என்று சின்னம் பிடி 
ஆனசித்தி செய்வோம்என்று சின்னம் பிடி 

அருட்சோதி பெற்றோம்என்று சின்னம் பிடி   
5288
கொடிகட்டிக்கொண்டோ ம்என்று சின்னம் பிடி 

கூத்தாடு கின்றோம்என்று சின்னம் பிடி 
அடிமுடியைக் கண்டோ ம்என்று சின்னம் பிடி 

அருளமுதம் உண்டோ ம்என்று சின்னம் பிடி   
5289
அப்பர்வரு கின்றார்என்று சின்னம் பிடி 

அற்புதம்செய் வதற்கென்று சின்னம் பிடி 
செப்பநிலை பெற்றதென்று சின்னம் பிடி 

சித்திபுரம்இடமென்று சின்னம் பிடி   
5290
தானேநான் ஆனேன்என்று சின்னம் பிடி 

சத்தியம்சத் தியம்என்று சின்னம் பிடி 
ஊனே புகுந்ததென்று சின்னம் பிடி 

ஒளிவண்ணம் ஆனதென்று சின்னம் பிடி