5291
வேகாதகால்உணர்ந்து சின்னம் பிடி 

வேகாத நடுத்தெரிந்து சின்னம் பிடி 
சாகாததலைஅறிந்து சின்னம் பிடி 

சாகாத கல்விகற்றுச் சின்னம் பிடி   
5292
மீதான நிலைஏறிச் சின்னம் பிடி 

வெட்டவெளி நடுநின்று சின்னம் பிடி 
வேதாக மம்கடந்து சின்னம் பிடி 

வேதாந்தச் சித்தாந்த சின்னம் பிடி   
5293
பன்மார்க்க மும்கடந்து சின்னம் பிடி 

பன்னிரண்டின் மீதுநின்று சின்னம் பிடி 
சன்மார்க்கம் மார்க்கம்என்று சின்னம் பிடி 

சத்தியம்செய் கின்றோம்என்று சின்னம் பிடி   
5294
சித்தாடு கின்றார்என்று சின்னம் பிடி 

செத்தார் எழுவார்என்று சின்னம் பிடி 
இத்தா ரணியில்என்று சின்னம் பிடி 

இதுவே தருணம்என்று சின்னம் பிடி   

திருச்சிற்றம்பலம் 
டீயஉம--------------------------------------------------------------------------------

 முரசறைதல் 

தாழிசை 
5295
அருட்சோதி ஆனேன்என்று அறையப்பா முரசு 

அருளாட்சி பெற்றேன்என்று அறையப்பா முரசு 
மருட்சார்பு தீர்ந்தேன்என்று அறையப்பா முரசு 

மரணந்த விர்ந்தேன்என்று அறையப்பா முரசு   

திருச்சிற்றம்பலம் 
டீயஉம--------------------------------------------------------------------------------

 தனித் திருஅலங்கல் () 

() இத்தலைப்பின் கீழ்த் தொகுக்கப்பெற்றுள்ள  பாக்களும் தனிப்பாடல்கள் ஆறாந் 
திருமுறைக் காலத்தில் பல சமயங் களிற் பாடப் பெற்றவை முன் பதிப்புகளில் இவை தனிப் பாடல்கள் 
என்ற தலைப்பில் ஆறாந் திருமுறையின் பிற்பகுதியில் உள்ளன ஆ பா இவற்றைத் 
தனித்திருஅலங்கல்,ஈ ா௉஢௲ா஢௕௲ ஦ா஡ந஼, ா௉஢௲ா஢௕ ு஡ந௄ ற௉ ௣௽௚ 
கூறாக்கி முறையே ஆறாந்திருமுறை முன், இடை, முடிந்த பகுதிகளின் ஈற்றில் வைத்துள்ளார் 
இப்பதிப்பில் இவை ஒருவாறு பொருள் வரிசையில் முன் பின்னாக அமைக்கப் பெற்று 
இவண் வைக்கப்பட்டுள்ளன 

ஆன்மநேய ஒருமைப்பாடு () 

() இஃதும் இதுபோன்று பின்வரும் சிறுதலைப்புகளும் யாம் இட்டவை 

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

திருச்சிற்றம்பலம்