5316
கள்ளத்தை அற்ற உள்ளத்தைப் பெற்றேன் 

கன்றிக் கனிந்தே மன்றில் புகுந்தேன் 
தௌ;ளத் தெளிந்த வெள்ளத்தை உண்டேன் 

செய்வகை கற்றேன் உய்வகை உற்றேன் 
அள்ளக் குறையா வள்ளற் பொருளை 

அம்பலச் சோதியை எம்பெரு வாழ்வை 
பள்ளிக்குட் பாடிப் படிக்கின்றேன் மேலும் 

படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே   
5317
காட்டைக் கடந்தேன் நாட்டை அடைந்தேன் 

கவலை தவிர்ந்தேன் உவகை மிகுந்தேன் 
வீட்டைப் புகுந்தேன் தேட்டமு துண்டேன் 

வேதாக மத்தின் விளைவெலாம் பெற்றேன் 
ஆட்டைப் புரிந்தே அம்பலத் தோங்கும் 

ஐயர் திருவடிக் கானந்த மாகப் 
பாட்டைப் படித்தேன் படிக்கின்றேன் மேலும் 

படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே   
 பாட்டும் திருத்தமும்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்   
5318
தேன்பாடல் அன்புடையார் செயப்பொதுவில் நடிக்கின்ற சிவமே ஞானக் 
கான்பாடிச் சிவகாம வல்லிமகிழ் கின்றதிருக் கணவா நல்ல 
வான்பாட மறைபாட என்னுளத்தே வயங்குகின்ற மன்னா நின்னை 
யான்பாட நீதிருத்த என்னதவஞ் செய்தேனோ எந்தாய் எந்தாய்   
5319
ஆன்பாலும் நறுந்தேனும் சர்க்கரையும் கூட்டியதௌ; ளமுதே என்றன் 
ஊன்பாலும் உளப்பாலும் உயிர்ப்பாலும் ஒளிர்கின்ற ஒளியே வேதம் 
பூம்பாடல் புனைந்தேத்த என்னுளத்தே ஆடுகின்ற பொன்னே நின்னை 
யான்பாட நீதிருத்த என்னதவஞ் செய்தேனோ எந்தாய் எந்தாய்   
 அம்பலத்தரசே அபயம்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்   
5320
பொருட்பெருந் தனிமெய்ப் போகமே என்னைப் 

புறத்தினும் அகத்தினும் புணர்ந்த 
தெருட்பெருஞ் சிவமே சுத்தசன் மார்க்கச் 

செல்வமே நான்பெற்ற சிறப்பே 
மருட்பெருங் கடலைக் கடத்திஎன் தன்னை 

வாழ்வித்த என்பெரு வாழ்வே 
அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே 

அம்மையே அப்பனே அபயம்