5336
நல்வினை சிறிதும் நயந்திலேன் என்பாள் 

நான்செயத் தக்கதே தென்பாள் 
செல்வினை ஒன்றுந் தெரிந்திலன் ஐயோ 

தெய்வமே தெய்வமே என்பாள் 
வெல்வினை மன்றில் நடம்புரி கின்றார் 

விருப்பிலர் என்மிசை என்பாள் 
வல்வினை உடையேன் என்றுளம் பதைப்பாள் 

வருந்துவாள் நான்பெற்ற மகளே   
 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்   
5337
நாதரருட் பெருஞ்சோதி நாயகர்என் தனையே 

நயந்துகொண்ட தனித்தலைவர் ஞானசபா பதியார் 
வாதநடம் புரிகருணை மாநிதியார் வரதர் 

வள்ளல்எலாம் வல்லவர்மா நல்லவர்என் இடத்தே 
காதலுடன் வருகின்றார் என்றுபர நாதம் 

களிப்புறவே தொனிக்கின்ற தந்தரதுந் துபிதான் 
ஏதமற முழங்குகின்ற தென்றுசொல்லிக் கொண்டே 

எழுகின்றாள் தொழுகின்றாள் என்னுடைய மகளே   
 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்   
5338
அன்பாடு திருப்பொதுவில் ஆடுகின்ற 
அரசேநின் அடிமேல் ஆணை 
என்பாடென் றிலைஎன்னால் துரும்பும்அசைத் 

திடமுடியா திதுகால் தொட்டுப் 
பொன்பாடெவ் விதத்தானும் புரிந்துகொண்டு 

நீதானே புரத்தல் வேண்டும் 
உன்பாடு நான்உரைத்தேன் நீஇனிச்சும் 

மாஇருக்க ஒண்ணா தண்ணா   
5339
முன்பாடு பின்பயன்தந் திடும்எனவே 

உரைக்கின்றோர் மொழிகள் எல்லாம் 
இன்பாடும் இவ்வுலகில் என்னறிவில் 

இலைஅதனால் எல்லாம் வல்லோய் 
அன்பாடு திருப்பொதுவில் ஆடுகின்றோய் 

அருட்சோதி அளித்துக் காத்தல் 
உன்பாடு நான்உரைத்தேன் எனக்கொருபா 

டுண்டோ நீ உரைப்பாய் அப்பா   
5340
உன்ஆணை உன்னைவிட உற்றதுணை 

வேறிலைஎன் உடையாய் அந்தோ 
என்நாணைக் காத்தருளி இத்தினமே 

அருட்சோதி ஈதல் வேண்டும் 
அந்நாள்நை யாதபடி அருள்புரிந்த 

பெருங்கருணை அரசே என்னை 
முன்னாள்நின் அடியவன்என் றுலகறிந்த 

இந்நாள்என் மொழிந்தி டாதே