5346
உடைய நாயகன் பிள்ளைநான் 

ஆகில்எவ் வுலகமும் ஒருங்கின்பம் 
அடைய நான்அருட் சோதிபெற் 

றழிவிலா யாக்கைகொண் டுலகெல்லாம் 
மிடைய அற்புதப் பெருஞ்செயல் 

நாடொறும் விளைத்தெங்கும் விளையாடத் 
தடைய தற்றநல் தருணம்இத் 

தருணமாத் தழைக்கஇத் தனியேற்கே   
5347
கோது கொடுத்த மனச்சிறியேன் 

குற்றம் குணமாக் கொண்டேஇப் 
போது கொடுத்த நின்அருளாம் 

பொருளை நினைக்கும் போதெல்லாம் 
தாது கொடுத்த பெருங்களிப்பும் 

சாலா தென்றால் சாமிநினக் 
கேது கொடுப்பேன் கேட்பதன்முன் 

எல்லாம் கொடுக்க வல்லாயே   
5348
கன்றுடைய பசுப்போலே கசிந்துருகும் 

அன்பரெலாம் காணக் காட்டும் 
என்றுடைய நாயகனே எல்லாஞ்செய் 

வல்லவனே இலங்குஞ் சோதி 
மன்றுடைய மணவாளா மன்னவனே 

என்னிருகண் மணியே நின்னை 
அன்றுடையேன் இன்றுவிடேன் ஆணைஉன்மேல் 

ஆணைஉன்மேல் ஆணை ஐயா   
5349
திருநி லைத்துநல் அருளொடும் 

அன்பொடும் சிறப்பொடும் செழித்தோங்க 
உருநி லைத்திவண் மகிழ்வொடு 

வாழ்வுற உவந்துநின் அருள்செய்வாய் 
இருநி லத்தவர் இன்புறத் 

திருவருள் இயல்வடி வொடுமன்றில் 
குருநி லைத்தசற் குருஎனும் 

இறைவநின் குரைகழற் பதம்போற்றி   
5350
குற்றம் புரிதல் எனக்கியல்பே 

குணமாக் கொள்ளல் உனக்கியல்பே 
சிற்றம் பலவா இனிச்சிறியேன் 

செப்பும் முகமன் யாதுளது 
தெற்றென் றடியேன் சிந்தைதனைத் 

தெளிவித் தச்சந் துயர்தீர்த்தே 
இற்றைப் பொழுதே அருட்சோதி 

ஈக தருணம் இதுவாமே