5401
ஓவுறாத் துயர்செயும் உடம்புதான் என்றும் 
சாவுறா தின்பமே சார்ந்து வாழலாம் 
மாவுறாச் சுத்தசன் மார்க்க நன்னெறி 
மேவுறார் தங்களை விடுக நெஞ்சமே   
5402
பொத்திய மலப்பிணிப் புழுக்கு ரம்பைதான் 
சித்தியல் சுத்தசன் மார்க்கச் சேர்ப்பினால் 
நித்திய மாகியே நிகழும் என்பது 
சத்தியம் சத்தியம் சகத்து ளீர்களே   
 கொச்சகக் கலிப்பா   
5403
வானாகி வானடுவே மன்னும்ஒளி யாகிஅதில் 
தானாடு வானாகிச் சன்மார்க்கர் உள்ளினிக்கும் 
தேனாகித் தௌ;ளமுதாய்த் தித்திக்கும் தேவேநீ 
யானாகி என்னுள் இருக்கின்றாய் என்னேயோ   
5404
ஞானா கரச்சுடரே ஞான மணிவிளக்கே 
ஆனா அருட்பெருஞ்சிற் றம்பலத்தே ஆனந்தத் 
தேனார் அமுதாம் சிவமே சிவமேநீ 
நானாகி என்னுள் நடிக்கின்றாய் என்னேயோ   
5405
என்தரத்துக் கேலாத எண்ணங்கள் எண்ணுகின்றேன் 
முன்தரத்தின் எல்லாம் முடித்துக் கொடுக்கின்றாய் 
நின்தரத்தை என்புகல்வேன் நின்இடப்பால்() மேவுபசும் 
பொன்தரத்தை என்உரைக்கேன் பொற்பொதுவில் நடிக்கின்றோய்   
 () வலப்பால் - முதற்பதிப்பு, பொ சு ச மு க