5456
பிச்சுலகர் மெச்சப் பிதற்றிநின்ற பேதையனேன் 
இச்சைஎலாம் எய்த இசைந்தருளிச் செய்தனையே 
அச்சம்எலாம் தீர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன் 
நிச்சலும்பே ரானந்த நித்திரைசெய் கின்றேனே   

திருச்சிற்றம்பலம் 
டீயஉம

--------------------------------------------------------------------------------

 சிற்சத்தி துதி 

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
5457
சோதிக் கொடியே ஆனந்த 

சொருபக் கொடியே சோதிஉருப் 
பாதிக் கொடியே சோதிவலப் 

பாகக் கொடியே() எனைஈன்ற 
ஆதிக் கொடியே உலகுகட்டி 

ஆளுங் கொடியே சன்மார்க்க 
நீதிக் கொடியே சிவகாம 

நிமலக் கொடியே அருளுகவே   
 () இடப்பாகக் கொடியே - பி இரா பதிப்பு   
5458
பொருணற் கொடியே மாற்றுயர்ந்த 

பொன்னங் கொடியே போதாந்த 
வருணக் கொடியே எல்லாஞ்செய் 

வல்லார் இடஞ்சேர் மணிக்கொடியே 
தருணக் கொடியே என்தன்னைக் 

தாங்கி ஓங்குந் தனிக்கொடியே 
கருணைக் கொடியே ஞானசிவ 

காமக் கொடியே அருளுகவே   
5459
நீட்டுக் கொடியே சன்மார்க்க 

நீதிக் கொடியே சிவகீதப் 
பாட்டுக் கொடியே இறைவர்வலப் 

பாகக் கொடியே() பரநாத 
நாட்டுக் கொடியே எனைஈன்ற 

ஞானக் கொடியே என்னுறவாம் 
கூட்டுக் கொடியே சிவகாமக் 

கொடியே அடியேற் கருளுகவே   
 () இடப்பாகக் கொடியே - பி இரா பதிப்பு   
5460
மாலக் கொடியேன் குற்றமெலாம் 

மன்னித் தருளி மரணமெனும் 
சாலக் கொடியை ஒடித்தெனக்குட் 

சார்ந்து விளங்கும் தவக்கொடியே 
காலக் கருவைக் கடந்தொளிர்வான் 

கருவும் கடந்து வயங்குகின்ற 
கோலக் கொடியே சிவஞானக் 

கொடியே அடியேற் கருளுகவே