5486
பெற்றேன் என்றும் இறவாமை 

பேதம் தவிர்ந்தே இறைவன்எனை 
உற்றே கலந்தான் நானவனை 

உற்றே கலந்தேன் ஒன்றானேம் 
எற்றே அடியேன் செய்ததவம் 

யாரே புரிந்தார் இன்னமுதம் 
துற்றே உலகீர் நீவிர்எலாம் 

வாழ்க வாழ்க துனிஅற்றே   

திருச்சிற்றம்பலம் 
டீயஉம--------------------------------------------------------------------------------

 சுத்த சிவநிலை 

நேரிசை வெண்பா 
5487
கண்ணிற் கலந்தான் கருத்திற் கலந்தான்என் 
எண்ணிற் கலந்தே இருக்கின்றான் - பண்ணிற் 
கலந்தான்என் பாட்டிற் கலந்தான் உயிரில் 
கலந்தான் கருணை கலந்து   
5488
எல்லா நலமும் எனக்கே கொடுக்கின்றான் 
எல்லாம் செயவல்லான் எம்பெருமான் - எல்லாமாய் 
நின்றான் பொதுவில் நிருத்தம் புரிகின்றான் 
ஒன்றாகி நின்றான் உவந்து   
5489
எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான் 
பண்ணுகின்றேன் பண்ணுவித்துப் பாடுகின்றான் - உண்ணுகின்றேன் 
தௌ;ளமுதம் உள்ளந் தெளியத் தருகின்றான் 
வள்ளல்நட ராயன் மகிழ்ந்து   
5490
சித்தியெலாந் தந்தே திருவம் பலத்தாடும் 
நித்தியனென் உள்ளே நிறைகின்றான் - சத்தியம்ஈ 
தந்தோ உலகீர் அறியீரோ நீவிரெலாம் 
சந்தோட மாய்இருமின் சார்ந்து