5491
அய்யாஎன் றோர்கால் அழைக்கின்றேன் அப்பொழுதே 
எய்யேன் மகனேஎன் றெய்துகின்றான் - ஐயோஎன் 
அப்பன் பெருங்கருணை யார்க்குண் டுலகத்தீர் 
செப்பமுடன் போற்றுமினோ சேர்ந்து   
5492
அப்பாஎன் றோர்கால் அழைக்கின்றேன் அப்பொழுதே 
அப்பா மகனேஎன் றார்கின்றான் - துப்பார் 
சடையான்சிற் றம்பலத்தான் தானேதான் ஆனான் 
உடையான் உளத்தே உவந்து   
5493
தானேவந் தென்உளத்தே சார்ந்து கலந்துகொண்டான் 
தானே எனக்குத் தருகின்றான் - தானேநான் 
ஆகப் புரிந்தானென் அப்பன் பெருங்கருணை 
மேகத்திற் குண்டோ விளம்பு   
5494
பாலும் கொடுத்தான் பதிதிறக்கும் ஓர்திறவுக் 
கோலும் கொடுத்தான் குணங்கொடுத்தான் - காலும் 
தலையும் அறியும் தரமும் கொடுத்தான் 
நிலையும் கொடுத்தான் நிறைந்து   
5495
வௌ;வினையும் மாயை விளைவும் தவிர்ந்தனவே 
செவ்வைஅறி வின்பம் சிறந்தனவே - எவ்வயினும் 
ஆனான்சிற் றம்பலத்தே ஆடுகின்றான் தண்அருளாம் 
தேன்நான் உண் டோ ங்கியது தேர்ந்து