5526
என்னே உலகில் இறந்தார் எழுதல்மிக 
அன்னே அதிசயமென் றாடுகின்றார் - இன்னே 
திருவம் பலத்தான் திருநோக்கம் பெற்றார்க் 
குருவம் பலத்தேஎன் றுன்   
5527
ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை 
நாடாதீர் பொய்உலகை நம்பாதீர் - வாடாதீர் 
சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்தினிஇங் 
கென்மார்க்க மும்ஒன்றா மே   
5528
மார்க்கமெலாம் ஒன்றாகும் மாநிலத்தீர் வாய்மைஇது 
தூக்கமெலாம் நீக்கித் துணிந்துளத்தே - ஏக்கம்விட்டுச் 
சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திடுமின் சத்தியம்நீர் 
நன்மார்க்கம் சேர்வீர்இந் நாள்   
5529
இந்நாளே கண்டீர் இறந்தார் எழுகின்ற 
நன்னாள்என் வார்த்தைகளை நம்புமினோ - இந்நாள் 
அருட்பெருஞ் சோதி அடைகின்ற நாள்மெய் 
அருட்பெருஞ் சத்தியம்ஈ தாம்   
5530
ஏமாந் திருக்கும் எமரங்காள் இவ்வுலகில் 
சாமாந்தர் ஆகாத் தரம்பெறவே - காமாந்த 
காரத்தை விட்டுக் கருதுமினோ இத்தருணம் 
நீரத்தைச் சேர்வீர் நிஜம்