5531
வீணே பராக்கில் விடாதீர் உமதுளத்தை 
நாணே உடைய நமரங்காள் - ஊணாகத் 
தௌ;ளமுதம் இன்றெனக்குச் சேர்த்தளித்தான் சித்தாட 
உள்ளியநாள் ஈதறிமின் உற்று   
5532
போற்றி உரைக்கின்றேன் பொய்என் றிகழாதீர் 
நாற்றிசைக்கண் வாழும் நமரங்காள் - ஆற்றலருள் 
அப்பன்வரு கின்றான் அருள்விளையாட் டாடுதற்கென் 
றிப்புவியில் இத்தருணம் இங்கு   
5533
ஆளுடையான் நம்முடைய அப்பன் வருகின்ற 
நாள்எதுவோ என்று நலியாதீர் - நீள 
நினையாதீர் சத்தியம்நான் நேர்ந்துரைத்தேன் இந்நாள் 
அனையான் வருகின்றான் ஆய்ந்து   

திருச்சிற்றம்பலம் 
டீயஉம--------------------------------------------------------------------------------

 உலகப்பேறு 

கலிவிருத்தம் 
5534
இன்பால் உலகங்கள் யாவும் விளங்கின 
துன்பால் இறந்தவர் துன்பற்றுத் தோன்றினர் 
அன்பால் அடியவர் ஆடினர் பாடினர் 
என்பால் அருட்பெருஞ் சோதியார் எய்தவே   
5535
பாம்பெலாம் ஓடின பறவையுட் சார்ந்தன 
தீம்பலா வாழைமாத் தென்னை சிறந்தன 
ஆம்பலன் மென்மேலும் ஆயின என்னுளத் 
தோம்பல்என் அருட்பெருஞ் சோதியார் ஓங்கவே