5541
பத்தர்கள் பாடினர் பணிந்துநின் றாடினர் 
முத்தர்கள் மெய்ப்பொருள் முன்னி மகிழ்ந்தனர் 
சித்தர்கள் ஆனந்தத் தௌ;ளமு துண்டனர் 
சுத்த அருட்பெருஞ் சோதியார் தோன்றவே   
5542
ஏழுல கவத்தைவிட் டேறினன் மேனிலை 
ஊழிதோ றூழியும் உயிர்தழைத் தோங்கினன் 
ஆழியான் அயன்முதல் அதிசயித் திடஎனுள் 
வாழிஅ ருட்பெருஞ் சோதியார் மன்னவே   
5543
இருட்பெரு மலமுழு துந்தவிர்ந் திற்றது 
மருட்பெரும் கன்மமும் மாயையும் நீங்கின 
தெருட்பெருஞ் சித்திகள் சேர்ந்தன என்னுளத் 
தருட்பெருஞ் சோதிஎன் அன்பிற் கலந்ததே   

திருச்சிற்றம்பலம் 
டீயஉம--------------------------------------------------------------------------------

 அன்புருவமான சிவம் ஒன்றே உளதெனல் 

கலிநிலைத் துறை 
5544
அருட்பெ ருந்தனிச் சோதிஅம் பலத்திலே நடிக்கும் 
பொருட்பெ ருந்திரு நடமது போற்றுவீர் புலவீர் 
மருட்பெ ரும்பகை நீக்கிமெய் வாழ்வுபெற் றிடலாம் 
தெருட்பெ ரும்பதத் தாணைஈ தறிமினோ தெளிந்தே   
5545
வாரம் செய்தபொன் மன்றிலே நடிக்கும்பொன் அடிக்கே 
ஆரம் செய்தணிந் தவர்க்குமுன் அரிஅயன் முதலோர் 
வீரம் செல்கிலா தறிமினோ வேதமேல் ஆணை 
ஓரம் சொல்கிலேன் நடுநின்று சொல்கின்றேன் உலகீர்