5551
சமயம் ஓர்பல கோடியும் சமயங்கள் தோறும் 
அமையும் தெய்வங்கள் அனந்தமும் ஞானசன் மார்க்கத் 
தெமையும் உம்மையும் உடையதோர் அம்பலத் திறையும் 
அமைய ஆங்கதில் நடம்புரி பதமும்என் றறிமின்()   
 () அமைய அம்பலத்தாடும் பொற்பதமும் என்றறிமின் - முதற்பதிப்பு, 
பொ சு, பி இரா   
5552
ஆறு கோடியாம் சமயங்கள் அகத்தினும் அவைமேல் 
வீறு சேர்ந்தசித் தாந்தவே தாந்தநா தாந்தம் 
தேறும் மற்றைய அந்தத்தும் சிவம்ஒன்றே அன்றி 
வேறு கண்டிலேன் கண்டிரேல் பெரியர்காள் விளம்பீர்   
5553
கலைஇ ருந்ததோர் திருச்சிற்றம் பலத்திலே கருணை 
நிலைஇ ருந்தது நினைத்தவை யாவையும் பெறலாம் 
மலைஇ ருந்தென இருப்பிரேல் வம்மினோ அன்றிக் 
கொலைவி ரும்புவீர் எனிற்புறத் தேகுமின் குலைந்தே   
5554
கதிஇ ருக்கின்ற திருச்சிற்றம் பலத்திலே கருணை 
நிதிஇ ருக்கின்ற தாதலால் நீவீர்கள் எல்லாம் 
பதிய இங்ஙனே வம்மினோ கொலைபயில் வீரேல் 
விதியை நோமினோ போமினோ சமயவெப் பகத்தே   
5555
அருள்வி ளங்கிய திருச்சிற்றம் பலத்திலே அழியாப் 
பொருள்வி ளங்குதல் காண்மினோ காண்மினோ புவியீர் 
மருள்உ ளங்கொளும் வாதனை தவிர்ந்தருள் வலத்தால் 
தெருள்வி ளங்குவீர் ஞானசன் மார்க்கமே தெளிமின்   
திருச்சிற்றம்பலம் 
டீயஉம--------------------------------------------------------------------------------

 உலகர்க்கு உய்வகை கூறல் 

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்