5571
உடம்புவரு வகைஅறியீர் உயிர்வகையை அறியீர் 

உடல்பருக்க உண்டுநிதம் உறங்குதற்கே அறிவீர் 
மடம்புகுபேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தை 

வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழிதுறைகற் றறியீர் 
இடம்பெறுபொய் வாழ்க்கையிலே இன்பதுன்பம் அடுத்தே 

எண்ணிஎண்ணி இளைக்கின்றீர் ஏழைஉல கீரே 
நடம்புரிஎன் தனித்தந்தை வருகின்ற தருணம் 

நண்ணியது நண்ணுமினோ புண்ணியஞ்சார் வீரே   
5572
நரைமரண மூப்பறியா நல்லஉடம் பினரே 

நற்குலத்தார் எனஅறியீர் நானிலத்தீர் நீவிர் 
வரையில்உயர் குலம்என்றும் தாழ்ந்தகுலம் என்றும் 

வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக்காண் கின்றீர் 
புரையுறுநும் குலங்கள்எலாம் புழுக்குலம்என் றறிந்தே 

புத்தமுதம் உண்டோ ங்கும் புனிதகுலம் பெறவே 
உரைபெறும்என் தனித்தந்தை வருகின்ற தருணம் 

உற்றதிவண் உற்றிடுவீர் உண்மைஉரைத் தேனே   
5573
கனமுடையேம் கட்டுடையேம் என்றுநினைத் திங்கே 

களித்திறுமாந் திருக்கின்றீர் ஒளிப்பிடமும் அறியீர் 
சினமுடைய கூற்றுவரும் செய்திஅறி யீரோ 

செத்தநும தினத்தாரைச் சிறிதும்நினை யீரோ 
தினகரன்போல் சாகாத தேகமுடை யவரே 

திருவுடையார் எனஅறிந்தே சேர்ந்திடுமின் ஈண்டே 
மனமகிழ்ந்து கேட்கின்ற வரமெல்லாம் எனக்கே 

வழங்குதற்கென் தனித்தந்தை வருதருணம் இதுவே 
5574
வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் நுமது 

வாழ்க்கைஎலாம் வாழ்க்கைஎன மதித்துமயங் காதீர் 
மையகத்தே உறுமரண வாதனையைத் தவிர்த்த 

வாழ்க்கையதே வாழ்க்கைஎன மதித்ததனைப் பெறவே 
மெய்அகத்தே விரும்பிஇங்கே வந்திடுமின் எனது 

மெய்ப்பொருளாம் தனித்தந்தை இத்தருணந் தனிலே 
செய்அகத்தே வளர்ஞான சித்திபுரந் தனிலே 

சித்தாடல் புரிகின்றார் திண்ணம்இது தானே   
5575
கரணம்மிகக் களிப்புறவே கடல்உலகும் வானும் 

கதிபதிஎன் றாளுகின்றீர் அதிபதியீர் நீவிர் 
மரணபயம் தவிராதே வாழ்வதில்என் பயனோ 

மயங்காதீர் உயங்காதீர் வந்திடுமின் ஈண்டே 
திரணமும்ஓர் ஐந்தொழிலைச் செய்யஒளி வழங்கும் 

சித்திபுரம் எனஓங்கும் உத்தரசிற் சபையில் 
சரணம்எனக் களித்தெனையும் தானாக்க எனது 

தனித்தந்தை வருகின்ற தருணம்இது தானே   

திருச்சிற்றம்பலம் 
டீயஉம--------------------------------------------------------------------------------

 மரணமிலாப் பெருவாழ்வு 

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்