5601
உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே 

உறவன்அன்றிப் பகைவன்என உன்னாதீர் உலகீர் 
கற்றவரும் கல்லாரும் அழிந்திடக்காண் கின்றீர் 

கரணம்எலாம் கலங்கவரும் மரணமும்சம் மதமோ 
சற்றும்இதைச் சம்மதியா தென்மனந்தான் உமது 

தன்மனந்தான் கன்மனமோ வன்மனமோ அறியேன் 
இற்றிதனைத் தடுத்திடலாம் என்னொடும்சேர்ந் திடுமின் 

என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே   
5602
சன்மார்க்கப் பெருங்குணத்தார் தம்பதியை என்னைத் 

தாங்குகின்ற பெரும்பதியைத் தனித்தசபா பதியை 
நன்மார்க்கத் தெனைநடத்திச் சன்மார்க்க சங்க 

நடுவிருக்க அருளமுதம் நல்கியநா யகனைப் 
புன்மார்க்கர்க் கறிவரிதாம் புண்ணியனை ஞான 

பூரணமெய்ப் பொருளாகிப் பொருந்தியமா மருந்தை 
அன்மார்க்கம் தவிர்த்தருளி அம்பலத்தே நடஞ்செய் 

அருட்பெருஞ்சோ தியைஉலகீர் தெருட்கொளச்சார் வீரே   
5603
சார்உலக வாதனையைத் தவிர்த்தவர்உள் ளகத்தே 

சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தமசற் குருவை 
நேர்உறவே எவராலும் கண்டுகொளற் கரிதாம் 

நித்தியவான் பொருளைஎலா நிலைகளுந்தான் ஆகி 
ஏர்உறவே விளங்குகின்ற இயற்கைஉண்மை தன்னை 

எல்லாம்செய் வல்லபத்தை எனக்களித்த பதியை 
ஓர்உறவென் றடைந்துலகீர் போற்றிமகிழ்ந் திடுமின் 

உள்ளம்எலாம் கனிந்துருகி உள்ளபடி நினைந்தே   

திருச்சிற்றம்பலம் 
டீயஉம--------------------------------------------------------------------------------

 சமாதி வற்புறுத்தல் 

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
5604
ஆய்உரைத்த அருட்ஸோதி வருகின்ற 

தருணம்இதே அறிமின் என்றே 
வாய்உரைத்த வார்த்தைஎன்றன் வார்த்தைகள்என் 

கின்றார்இம் மனிதர்அந்தோ 
தாய்உரைத்த திருப்பொதுவில் நடம்புரிந்தென் 

உளங்கலந்த தலைவா இங்கே 
நீஉரைத்த திருவார்த்தை எனஅறியார் 

இவர்அறிவின் நிகழ்ச்சி என்னே   
5605
இறந்தவர்கள் பலரும்இங்கே எழுகின்ற 

தருணம்இதே என்று வாய்மை 
அறந்தழைய உரைக்கின்ற வார்த்தைகள்என் 

வார்த்தைகள்என் றறைகின் றாரால் 
மறந்தசிறி யேன்உரைக்க வல்லேனோ 

எல்லாஞ்செய் வல்லோய் உன்றன் 
சிறந்ததிரு வார்த்தைஎனத் தெரிந்திலர்இம் 

மனிதர்மதித் திறமை என்னே