5611
கட்டாலும் கனத்தாலும் களிக்கின்ற 

பேயுலகீர் கலைசோர்ந் தாரைப் 
பொட்டாலும் துகிலாலும் புனைவித்துச் 

சுடுகின்றீர் புதைக்க நேரீர் 
சுட்டாலும் சுடுமதுகண் டுமதுடம்பு 

துடியாதென் சொல்லீர் நும்மைத் 
தொட்டாலும் தோமுறும் விட்டாலும் 

கதியிலைமேல் சூழ்வீர் அன்றே   
5612
பரன்அளிக்கும் தேகம்இது சுடுவதப 

ராதம்எனப் பகர்கின் றேன்நீர் 
சிரம்நெளிக்கச் சுடுகின்றீர் செத்தவர்கள் 

பற்பலரும் சித்த சாமி 
உரனளிக்க எழுகின்ற திருநாள்வந் 

தடுத்தனஈ துணர்ந்து நல்லோர் 
வரனளிக்கப் புதைத்தநிலை காணீரோ 

கண்கெட்ட மாட்டி னீரே   
5613
புலைத்தொழிலே புரிகின்றீர் புண்ணியத்தைக் 

கருங்கடலில் போக விட்டீர் 
கொலைத்தொழிலில் கொடியீர்நீர் செத்தாரைச் 

சுடுகின்ற கொடுமை நோக்கிக் 
கலைத்தொழிலில் பெரியர்உளம் கலங்கினர்அக் 

கலக்கம்எலாம் கடவுள்நீக்கித் 
தலைத்தொழில்செய் சன்மார்க்கம் தலைஎடுக்கப் 

புரிகுவதித் தருணம் தானே   

திருச்சிற்றம்பலம் 
டீயஉம--------------------------------------------------------------------------------

 சன்மார்க்க உலகின் ஒருமைநிலை

நேரிசை வெண்பா 
5614
சித்திபுரத்தே தினந்தோறும் சீர்கொளருள் 
சத்திவிழா நீடித் தழைத்தோங்க - எத்திசையில் 
உள்ளவரும் வந்தே உவகை உறுகமதத் 
துள்ளல் ஒழிக தொலைந்து   
5615
ஒன்றே சிவம்என் றுணர்ந்திவ் வுலகமெலாம் 
நன்றே ஒருமையுற்று நண்ணியே - மன்றே 
நடம்புரியும் பாத நளினமலர்க் குள்ளம் 
இடம்புரிக வாழ்க இசைந்து