5631
திருச்சிற்றம் பலத்தின்பத் திருஉருக்கொண் டருளாம் 

திருநடஞ்செய் தருளுகின்ற திருவடிகள் இரண்டும் 
அருச்சிக்கும் பேரன்பர் அறிவின்கண் அறிவாய் 

அவ்வறிவில் விளைந்தசிவா னந்தஅமு தாகி 
உருச்சிக்கும் பரநாதத் தலங்கடந்தப் பாற்சித் 

துருவுகடந் திருக்கும்என உணர்ந்தோர்சொல் வாரேல் 
பெருச்சித்தெல் லாம்வல்ல நடராஜப் பெருமான் 

பெருமையையாம் பேசுவதென் பேசாய்என் தோழி   
5632
நாதவரை சென்றுமறை ஓர்அனந்தம் கோடி 

நாடிஇளைத் திருந்தனஆ கமங்கள் பரநாத 
போதவரை போந்துபல முகங்கொண்டு தேடிப் 

புணர்ப்பறியா திருந்தனஎன் றறிஞர்புகல் வாரேல் 
பாதவரை வெண்ணீறு படிந்திலங்கச் சோதிப் 

படிவம்எடுத் தம்பலத்தே பரதநடம் புரியும் 
போதவரைக் காண்பதலால் அவர்பெருமை என்னால் 

புகலவச மாமோநீ புகலாய்என் தோழி   
5633
பரைஇருந்த வெளிமுழுதும் பரவிஅப்பால் பரையின் 

பரமாகி அப்பரத்தில் பரம்பரமாய் விளங்கித் 
திரைகடந்த திருவெளியில் ஆனந்தா தீதத் 

திருநடஞ்செய் யாதுசெயும் திருவடிகள் என்றே 
புரைகடந்தோர் புகல்கின்றார் கேட்கின்றோம் என்றால் 

புண்ணியர்என் தனித்தலைவர் புனிதநட ராஜர் 
வரைகடந்த திருத்தோள்மேல் திருநீற்றர் அவர்தம் 

வாய்மைசொல வல்லேனோ அல்லேன்காண் தோழி   
5634
ஏய்ப்பந்தி வண்ணர்என்றும் படிகவண்ணர் என்றும் 

இணையில்ஒளி உருவர்என்றும் இயல்அருவர் என்றும் 
வாய்ப்பந்தல் இடுதலன்றி உண்மைசொல வல்லார் 

மண்ணிடத்தும் விண்ணிடத்தும் மற்றிடத்தும் இலையே 
காய்ப்பந்த மரம்என்று கண்டுசொல்வ தன்றிக் 

காய்த்தவண்ணம் பூத்தவண்ணம் கண்டுகொள மாட்டாத் 
தாய்ப்பந்த உணர்வுடையேன் யானோசிற் சபையில் 

தனிமுதல்வர் திருவண்ணம் சாற்றவல்லேன் தோழி   
5635
கலைக்கடலைக் கடந்தமுனிக் கணங்களும்மும் மலமாம் 

கரிசகன்ற யோகிகளும் கண்டுகொள மாட்டா 
தலைக்கடலில் துரும்பாகி அலைகின்றார் மன்றுள் 

ஆடுகின்றார் என்பதலால் அவர்வண்ணம் அதுவும் 
நிலைக்குரிய திருச்சபையின் வண்ணமும்அச் சபைக்கண் 

நிருத்தத்தின் வண்ணமும்இந் நீர்மையன என்றே 
மலைக்குநிறை கண்டாலும் காணவொணா தம்ம 

வாய்ப்பதர்கள் தூற்றுவதில் வரும்பயன்என் தோழி