5641
தோற்றம்ஒன்றே வடிவொன்று வண்ணம்ஒன்று விளங்கும் 

சோதிஒன்று மற்றதனில் துலங்கும்இயல் ஒன்று 
ஆற்றஅதில் பரமாய அணுஒன்று பகுதி 

அதுஒன்று பகுதிக்குள் அமைந்தகரு ஒன்று 
ஏற்றமிக்க அக்கருவுள் சத்திஒன்று சத்திக் 

கிறைஒன்றாம் இத்தனைக்கும் என்கணவர் அல்லால் 
ஆற்றமற்றோர் அதிகாரி இல்லையடி மன்றில் 

ஆடும்அவர் பெருந்தகைமை யார்உரைப்பார் தோழி   
5642
ஒருமைபெறு தோற்றம்ஒன்று தத்துவம்பல் வேறு 

ஒன்றின்இயல் ஒன்றிடத்தே உற்றிலஇங் கிவற்றை 
இருமையினும் மும்மைமுதல் எழுமையினும் கூட்டி 

இலங்கியசிற் சத்திநடு இரண்டொன்றென் னாத 
பெருமைபெற்று விளங்கஅதின் நடுஅருள்நின் றிலங்கப் 

பெரியஅருள் நடுநின்று துரியநடம் புரியும் 
அருமைஎவர் கண்டுகொள்வர் அவர்பெருமை அவரே 

அறியாரே என்னடிநீ அறைந்தவண்ணம் தோழி   
5643
படைத்தபடைப் பொன்றதிலே பரம்அதிற்கா ரணமாம் 

பகுதிஅதில் பகுக்கின்ற பணிகள்பல பலவாம் 
புடைத்தஅவை புகுந்துலவும் புரம்ஒன்றப் புரத்தில் 

பூபதிஒன் றவர்க்குணர்த்தும் பூரணசித் தொன்று 
மிடைத்தஇவை எல்லாஞ்சிற் றம்பலத்தே நடிக்கும் 

மென்பதத்தோர் சிற்றிடத்து விளங்கிநிலை பெறவே 
அடைத்துமற்றிங் கிவைக்கெல்லாம் அப்புறத்தே நிற்பார் 

அவர்பெருமை எவர்அறிவார் அறியாய்நீ தோழி   
5644
சிருட்டிஒன்று சிற்றணுவில் சிறிததனில் சிறிது 

சினைத்தகர ணக்கருஅச் சினைக்கருவில் சிறிது 
வெருட்டியமான் அம்மானில் சிறிதுமதி மதியின் 

மிகச்சிறிது காட்டுகின்ற வியன்சுடர்ஒன் றதனில் 
தெருட்டுகின்ற சத்திமிகச் சிறிததனில் கோடித் 

திறத்தினில்ஓர் சிறிதாகும் திருச்சிற்றம் பலத்தே 
அருட்டிறத்தின் நடிக்கின்ற என்னுடைய தலைவர் 

அருட்பெருமை எவர்உரைப்பார் அறியாய்என் தோழி   
5645
நான்முகர்கள் மிகப்பெரியர் ஆங்கவரில் பெரியர் 

நாரணர்கள் மற்றவரின் நாடின்மிகப் பெரியர் 
வான்முகத்த உருத்திரர்கள் மற்றவரில் பெரியர் 

மயேச்சுரர்கள் சதாசிவர்கள் மற்றவரில் பெரியர் 
மீன்முகத்த விந்ததனில் பெரிததனில் நாதம் 

மிகப்பெரிது பரைஅதனில் மிகப்பெரியள் அவளின் 
ஆன்முகத்தில் பரம்பரந்தான் பெரிததனில் பெரிதாய் 

ஆடுகின்ற சேவடியார் அறிவார்காண் தோழி   
 () மற்றவர்கள் - ச மு க பதிப்பு