5666
வளம்பெறுவிண் அணுக்குள்ஒரு மதிஇரவி அழலாய் 

வயங்கியதா ரகையாய்இவ் வகைஅனைத்தும் தோற்றும் 
தளம்பெறுசிற் சொலிதபரா சத்திமயம் ஆகித் 

தனித்தசத்தி மான்ஆகித் தத்துவம்எல் லாம்போய் 
உளம்புகுத மணிமன்றில் திருநடம்செய் தருளும் 

ஒருதலைவன் சேவடிச்சிர் உரைப்பவர்எவ் வுலகில் 
அளந்தறிதும் எனமறைகள் அரற்றும்எனில் சிறிய 

அடிச்சியுரைத் திடப்படுமோ அறியாய்என் தோழி   
5667
பரவியஐங் கருவினிலே பருவசத்தி வயத்தே 

பரைஅதிட்டித் திடநாத விந்துமயக் கத்தே 
விரவியதத் துவஅணுக்கள் ஒன்றொடொன் றாய்ஒன்றி 

விளங்கஅவற் றடிநடுவீ றிவற்றினில்மூ விதமாய் 
உரவியலுற் றுயிர்இயக்கி அறிவைஅறி வித்தே 

ஓங்குதிரு அம்பலத்தில் ஒளிநடனம் புரியும் 
தரவியலிற் றிதுஎனயார் தெரிந்துரைப்பார் சிறிய 

தமியள்உரைத் திடுந்தரமோ சாற்றாய்என் தோழி   
5668
சோதிமலை ஒருதலையில் சோதிவடி வாகிச் 

சூழ்ந்தமற்றோர் தலைஞான சொரூபமய மாகி 
ஓதியவே றொருதலையில் உபயவண்ணம் ஆகி 

உரைத்திடும்ஐங் கருவகைக்கோர் முப்பொருளும் உதவி 
ஆதிநடு அந்தம்இலா ஆனந்த உருவாய் 

அம்பலத்தே ஆடுகின்ற அடிஇணையின் பெருமை 
வேதியனும் திருமாலும் உருத்திரரும் அறியார் 

விளைவறியேன் அறிவேனோ விளம்பாய்என் தோழி   
5669
பூஒன்றே முப்பூஐம் பூஎழுபூ நவமாம் 

பூஇருபத் தைம்பூவாய்ப் பூத்துமலர்ந் திடவும் 
நாஒன்று மணம்வேறு வணம்வேறு வேறா 

நண்ணிவிளங் குறவும்அதின் நற்பயன்மாத் திரையில் 
மேவொன்றா இருப்பஅதின் நடுநின்று ஞான 

வியன்நடனம் புரிகின்ற விரைமலர்ச்சே வடியின் 
பாஒன்று பெருந்தகைமை உரைப்பவர்ஆர் சிறியேன் 

பகர்ந்திடவல் லுநள் அல்லேன் பாராய்என் தோழி   

திருச்சிற்றம்பலம் 
டீயஉம--------------------------------------------------------------------------------

 தலைவி தலைவன் செயலைத் தாய்க் குரைத்தல் 

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
5670
அன்னப்பார்ப் பால்()அழ காம்நிலை யூடே 

அம்பலம் செய்துநின் றாடும் அழகர் 
துன்னப்பார்த் தென்னுயிர்த் தோழியும் நானும் 

சூதாடு கின்றஅச் சூழலில் வந்தே 
உன்னைப்பார்த் துன்னுள்ளே என்னைப்பா ராதே 

ஊரைப்பார்த் தோடி உழல்கின்ற பெண்ணே 
என்னைப்பார் என்கின்றார் என்னடி அம்மா 

என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா   
 () அன்னைப்பார்ப்பால் - ஆ பா பதிப்பு