5736
கூடியஎன் தனிக்கணவர் நல்வரத்தை நானே 

குறிக்கின்ற தோறும்ஒளி எறிக்கின்ற மனந்தான் 
நீடியபொன் மலைமுடிமேல் வாழ்வடைந்த தேவர் 

நீள்முடிமேல் இருக்கின்ற தென்றுரைக்கோ அன்றி 
ஆடியபொற் சபைநடுவே சிற்சபையின் நடுவே 

ஆடுகின்ற அடிநிழற்கீழ் இருக்கின்ற தென்கோ 
ஏடவிழ்பூங் குழலாய்என் இறைவரைக்கண் ணுற்றால் 

என்மனத்தின் சரிதம்அதை யார்புகல்வார் அந்தோ   
5737
அருளாளர் வருகின்ற தருணம்இது தோழி 

ஆயிரம்ஆ யிரங்கோடி அணிவிளக்கேற் றிடுக 
தெருளாய பசுநெய்யே விடுகமற்றை நெய்யேல் 

திருமேனிக் கொருமாசு செய்தாலும் செய்யும் 
இருள்ஏது காலைவிளக் கேற்றிடவேண் டுவதோ 

என்னாதே மங்கலமா ஏற்றுதலாங் கண்டாய் 
மருளேல்அங் கவர்மேனி விளக்கமதெண் கடந்த 

மதிகதிர்செங் கனல்கூடிற் றென்னினும்சா லாதே   
5738
என்னிருகண் மணிஅனையார் என்னுயிர்நா யகனார் 

என்உயிருக் கமுதானார் எல்லாஞ்செய் வல்லார் 
பொன்அணிபொற் சபையாளர் சிற்சபையார் என்னைப் 

புறம்புணர்ந்தார் அகம்புணர்ந்தார் புறத்தகத்தும் புணர்ந்தார் 
அன்னியர்அல் லடிஅவரே எனதுகுல தெய்வம் 

அருந்தவத்தால் கிடைத்தகுரு வாகும்அது மட்டோ 
மன்னுறும்என் தனித்தாயும் தந்தையும்அங் கவரே 

மக்கள்பொருள் மிக்கதிரு ஒக்கலும்அங் கவரே   
5739
தந்தைஎன்றாய் மகன்என்றாய் மணவாளன் என்றாய் 

தகுமோஇங் கிதுஎன்ன வினவுதியோ மடவாய் 
சிந்தைசெய்து காணடிநீ சிற்சபையில் நடிக்கும் 

திருவாளர் எனைப்புணர்ந்த திருக்கணவர் அவர்தம் 
அந்தநடு முதலில்லா அரும்பெருஞ்சோ தியதே 

அண்டசரா சரங்கள்எலாம் கண்டதுவே றிலையே 
எந்தவகை பொய்புகல்வேன் மற்றையர்போல் அம்மா 

வீறுமவர்() திருமேனி நானும்என அறியே   
 ( ) ஈங்கவர்தம் - முதற்பதிப்பு, பொசு, பி இரா, ச மு க   
5740
எல்லாமுஞ் செயவல்ல தனித்தலைவர் பொதுவில் 

இருந்துநடம் புரிகின்ற அரும்பெருஞ்சோ தியினார் 
நல்லாய்நல் நாட்டார்கள் எல்லாரும் அறிய 

நண்ணிஎனை மணம்புரிந்தார் புண்ணியனார் அதனால் 
இல்லாமை எனக்கில்லை எல்லார்க்கும் தருவேன் 

என்னுடைய பெருஞ்செல்வம் என்புகல்வேன் அம்மா 
செல்லாத அண்டமட்டோ அப்புறத்தப் பாலும் 

சிவஞானப் பெருஞ்செல்வம் சிறப்பதுகண் டறியே