5761
இன்பவடி வந்தருதற் கிறைவர் வருகின்றார் 

எல்லாஞ்செய் வல்லசித்தர் இங்குவரு கின்றார் 
அன்பர்உளத் தேஇனிக்கும் அமுதர்வரு கின்றார் 

அம்பலத்தே நடம்புரியும் ஐயர்வரு கின்றார் 
என்புருப்பொன் உருவாக்க எண்ணிவரு கின்றார் 

என்றுதிரு நாதஒலி இசைக்கின்ற தம்மா 
துன்பமறத் திருச்சின்ன ஒலிஅதனை நீயும் 

சுகம்பெறவே கேளடிஎன் தோழிஎனைச் சூழ்ந்தே   
5762
துரியபதம் கடந்தபெருஞ் சோதிவரு கின்றார் 

சுகவடிவந் தரஉயிர்க்குத் துணைவர்வரு கின்றார் 
பெரியபிர மாதியர்க்கும் அரியர் வருகின்றார் 

பித்தர்என மறைபுகலும் சித்தர்வரு கின்றார் 
இரிவகல்சிற் சபைநடஞ்செய் இறைவர்வரு கின்றார் 

என்றுதிரு நாதஒலி இசைக்கின்ற தம்மா 
உரிமைபெறும் என்தோழி நீயும்இங்கே சின்ன 

ஒலிகேட்டுக் களித்திடுவாய் உளவாட்டம் அறவே   
5763
ஈசர்என துயிர்த்தலைவர் வருகின்றார் நீவிர் 

எல்லீரும் புறத்திருமின் என்கின்றேன் நீதான் 
ஏசறவே அகத்திருந்தால் என்எனக்கேட் கின்றாய் 

என்கணவர் வரில்அவர்தாம் இருந்தருளும் முன்னே 
ஆசைவெட்கம் அறியாது நான்அவரைத் தழுவி 

அணைத்துமகிழ் வேன்அதுகண் டதிசயித்து நொடிப்பார் 
கூசறியாள் இவள்என்றே பேசுவர்அங் கதனால் 

கூறியதல் லதுவேறு குறித்ததிலை தோழீ   
5764
அரசுவரு கின்றதென்றே அறைகின்றேன் நீதான் 

ஐயமுறேல் உற்றுக்கேள் அசையாது தோழி 
முரசுசங்கு வீணைமுதல் நாதஒலி மிகவும் 

முழங்குவது திருமேனி வழங்குதெய்வ மணந்தான் 
விரசஎங்கும் வீசுவது நாசிஉயிர்த் தறிக 

வீதிஎலாம் அருட்சோதி விளங்குவது காண்க 
பரசிஎதிர் கொள்ளுதும்நாம் கற்பூர விளக்குப் 

பரிந்தெடுத்தென் னுடன்வருக தெரிந்தடுத்து மகிழ்ந்தே   
5765
தாழ்குழல்நீ ஆண்மகன்போல் நாணம்அச்சம் விடுத்தே 

சபைக்கேறு கின்றாய்என் றுரைக்கின்றாய் தோழி 
வாழ்வகைஎன் கணவர்தமைப் புறத்தணைந்தாள் ஒருத்தி 

மால்எனும்பேர் உடையாள்ஓர் வளைஆழிப் படையாள் 
ஆழ்கடலில் துயில்கின்றாள் மாமணிமண் டபத்தே 

ஆள்கின்றாள் ஆண்மகனாய் அறிந்திலையோ அவரைக் 
கேழ்வகையில் அகம்புணர்ந்தேன் அவர்கருணை அமுதம் 

கிடைத்ததுநான் ஆண்மகனா கின்றததி சயமோ