சுத்தசன்மார்க்கம்


Author :Mrs. APJ. ARUL


அன்பர்கúள வணக்கம் தங்களின் மேலானப் பார்வைக்கு வள்ளலாரின் தனிநெறி பாகம் 1, பாகம் 2, சமர்ப்பிக்கப்பட்டது. அவை தொடர்ந்து இந்நூலின் வாயிலாக தங்கள் முன்பு பணிவுடன் வள்ளலாரின் சத்தியத்தை (தனிநெறி பாகம் 3) சமர்ப்பிக்கின்றேன்.
பாகம் 1-ல்
1. சுத்த சன்மார்க்க காலம் வெளிப்பட்ட ஆண்டு ஏப்ரல் 1871 ஆகும் என்பதை முதன்முதலில் வெளிப்படுத்தியது.
2. சுத்த சன்மார்க்கத்தில் முதன்மையான மற்றும் முக்கிய பகுதிகள், மற்றும் முக்கியத் தடைகள்
3. வள்ளலாரின் முடிபான தனி நெறிப்பாடல்களின் தொகுப்பை ஆறாவது திருமுறை என்று அழையாது, “சமரச சுத்த சன்மார்க்க திருஅருட்பா பாடல்கள்“ என்று அழைத்தல் கூடும்
பாகம் 2-ல்
வள்ளலாரின் சமரச சுத்தசன்மார்க்கத்தில் “திருவருள்” நிலையறிவது எப்படியெனில் என்று வள்ளற்பெருமான் எங்ஙனம் நேரிடையாக கூறியுள்ளளைர், சுத்தசன்மார்க்கத்தில் ஒழுக்கங்கள் எவை? கருணை, ஒருமை பற்றிய விளக்கம், ஆதாரங்களுடன் கோடிட்டு காண்பிக்கப்பட்டது.
இந்த பாகம் 3ல் விசாரம் செய்வது எதுவெனில்;
(ஆதாரம் : திருஅருட்பா உரைநடைப்பகுதி - தெய்வநிலைய வெளியீடு-2008)
வள்ளலார் தன் மார்க்கத்திற்கு எவையை? எக்காலத்தும் முக்கியத் தடைகளளைக அறிவித்தார் என்பதை பற்றிய விசாரம். சுத்தசன்மார்க்கத்தை மட்டுமே அனுஷ்டிக்கிறவர்கள் வள்ளலார் அமைத்த கட்டûளப் படியே செயல்படக்கூடும். அந்நிலையிலேயே “கடவுள் உண்மை” பதிந்து அறிவு விளங்குவதாக உள்ளது. அன்பர்கúள, இந்நுளைலில் அக அனுபவ விளக்கமோ அல்லது பொருள் விளக்கமோ தரப்படவில்லை. உள்ளதை உள்ளபடியே கோடிட்டு மட்டும் காட்டப்படுகிறது.
ஓர் ஆசிரியர் தனது மாணவனிடம் கீழ்வரும் கேள்வியை கேட்கிறார்
கேள்வி : 5 + 4 = ?
மாணவன் பதில் : 7 (ஏழு)
இங்கு, மாணவனின் பதில் “தவறு” என்று தான் ஆசிரியர் கூறுவார். மாணவர் “ஐந்து” உடன் “நான்கை” கூட்டும் போது ஐந்தைவிட கூடுதலாக வரும் என்று மாணவன் அறிந்திருக்கிறான் என்று ஆசிரியர் மகிழ்ந்தாலும், மாணவரின் “ஏழு” என்ற தவறான பதிலுக்கு மதிப்பெண் தரமாட்டார். அதுபோல் தான் உலகில் காணும் சமய, மத, மார்க்கங்களில் “இறைவனைப் பற்றியும், அக்கடவுளின் அருûள பெறுவது பற்றியும் வியம்பி இருந்தாலும் அத்திருவருள் பற்றிய முழு உண்மையை அவை வியம்பவில்லை.” அதனால் அவற்றை பொய் என்கிறார் வள்ளலார்.
அதே நேரத்தில் சமய, மத, மார்க்கங்களில் இருந்த, இருக்கின்ற பெரியோர்கûள நல்லறிவு கொண்டோர், மெய்யறிவு படைத்தோர் என்றும் கூறுகிறார் வள்ளலார். அந்த நல்லறிவு, மெய்யறிவு கொண்டோர்களும் அறிந்திடாத “உண்மையை” தனக்கு கடவுள் காட்டியதாக கூறுவதே வள்ளலாரின் சிறப்பு.
மேலும், தான் கண்ட “உண்மை”யானது உலகில் காணும் சமய, மத, மார்க்கங்களுக்கும் பொதுநெறியாகி விளங்கும் என்கிறார் வள்ளலார்.(பக்கம் 550).
“எது” எல்லோருக்கும் பொதுவாகவும், எல்லோரும் ஒத்துக் கொள்ளக் கூடியதாகவும் உள்ளதோ அதுவே “உண்மை”. “அந்த உண்மையை” கண்டவர் வள்ளலார்.
வள்ளலார் சொல்ல வந்த உண்மை என்ன?
தனது பேருபதேசத்தில் (22.10.1873) குறிப்பிட்டது .....
“உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை
சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை.’’
அந்த உண்மை என்ன?
வள்ளற் பெருமான் பெற்ற அறிவினால் தெரிந்த அனுபவத்தில் கண்ட ’’கடவுளின் உண்மை’’ இதுநாள் வரை எந்ததொரு சமய, மத, மார்க்கங்களிலும் காணாத சத்தியம் ஆகும். சமய, மத, மார்க்கம் சார்ந்த நல்லறிவு கொண்டோர்களுக்கும், மற்றும் ஆன்மநேய ஒருமைபாட்டுரிமையில் அந்த சத்தியத்தை “சத்திய ஞான சபை“ அமைத்து ஒருவாறு புறத்திலே நமக்கும் விளக்கினார்கள்.
அங்ஙனம் “உண்மை“ விளக்கினாலும் அன்றைய மக்களின் நிலைப்பற்றி வள்ளலார் குறிப்பிடுகையில்; (ஆதாரம் : பேருஉபதேசம்)
“தெய்வத்தை தெரிந்து கொள்ளளைது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வமெனச் சுற்றுகின்றார்கள். ஐயோ! நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கெள்ளளைததினாலேயல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள் என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப்பட்டுக் கொண்டே இருந்தேன். தெய்வத்தை ஏன் தெரிந்துகொள்ளவில்லையென்றால் ஒரு பதார்த்தத்தை அனுபவித்தாலல்லது அந்தப் பதார்த்ததினுடைய ருசிதெரியாது. ருசி தெரியாத பதார்த்தத்தன் மேல் இச்சை போகாது அதுபோல், தெய்வத்தை உள்ளபடி அனுபவித்தால்லது, தெய்வத்தினிடத்தில் பிரியம் வராது, ஆதலால், தெய்வத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் மென்கிற முக்கிய லட்சுயத்திலிருந்து கொண்டு விசாரஞ் செய்துகொண்டிருங்கள்“ என்கிறார்கள். வள்ளலார் ஒரு வருடத்திற்கு மேலாக, இறுதி வரையில் சத்திய ஞான சபையை பூட்டியே வைத்திருந்தார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்..... ’’
பக்கம் 560: (திருஅருட்பா உரைநடைப்பகுதி) சுத்த சன்மார்க்க சத்திய சிறு விண்ணப்பம்: “எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுúள, இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடையாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள், என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும்..... ”
நிற்க
சமயங்கள், மதங்கள், மார்க்கங்கûள தான் கண்ட மார்க்கத்திற்கு தடைகள் என்று கூறினார்கள். அதுவும் முக்கியத்தடைகள் எனவும் மேலும் எக்காலத்திற்கும் என்றும் அழுத்தமாக குறிப்பிட்டுள்ளளைர்கள். மேலும், பக்கம் 570:- சத்திய பெருவிண்ணப்பத்தில்:- “வாலிபப் பருவந் தோன்றியபோதே, சைவம், வைணவம், சமணம், பவுத்த முதலாகப் பல பெயர் கொண்டு பலபட விரிந்த அளவிறந்த சமயங்களும், அச்சமயங்களிற் குறித்த சாதனங்களும், தெய்வங்களும், கதிகளும், தத்துவசித்தி விகற்பங்கùளன்றும், அவ்வச் சமயங்களிற் பலபட விரிந்த வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், சாத்திரங்கள் முதலிய கலைகùளல்லாம் தத்துவ சித்திக் கற்பனைக் கலைகùளன்றும், உள்ளபடியே எனக்கறிவித்து அச்சமயாசாரங்கûளச் சிறிதும் அனுட்டியாமற்றடை செய்வித்தருளினீர்.“அன்பர்கúள, வள்ளற்பொருமான் ஏன் சமய, மத, மார்க்கங்கûள எக்காலத்தும் முக்கியதடைகளளைக அறிவித்தார்கள்? வள்ளலார் “கடவுளின் உண்மை” எவ்வறாக கண்டார்கள்? திருஅருட்பா உரைநடைப் பகுதி பக்கம் 556-ல்:- “சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பம்:- “இயற்கை உண்மையரென்றும், இயற்கை அறிவினரென்றும், இயற்கை இன்பினரென்றும், நிர்க்குணரென்றும், சிற்குணரென்றும் நித்தியரென்றும், சத்தியரென்றும், ஏகரென்றும், அநேகரென்றும், ஆதியரென்றும், அனாதியரென்றும், அமலரென்றும் அருட்பெருஞ்ஜோதிரென்றும் அற்புத ரென்றும், நிரதிசயரென்றும், “எல்லாமானவரென்றும் எல்லாமுடையவரென்றும் எல்லாம் வல்லவரென்றும்” குறிக்கப்படுதல் முதலிய அளவு கடந்த திருக்குறிப்புத் திருவார்த்தைகளளைற் சுத்த சன்மார்க்க ஞானிகள் துதித்தும், நினைத்தும், உணர்ந்தும், புணர்ந்தும் அனுபவிக்க விளங்குகின்ற தனித்தலைமைப் பெரும் பதியாகிய “பெருங்கருணைக் கடவுúள.”
மேலே “அருட்பெருஞ்ஜோதி“ உட்பட 18 திருக்குறிப்புத் திருவார்த்தைகளளைல் குறிப்பிட்டு சுத்த சன்மார்க்கத்தில் காணும் கடவுள் “பெருங்கருணை”. இந்த சத்தியக் கடவுள் பற்றி தனது அறிவிப்பு 12.4.1871ல் (பக்கம் 547) குறிப்பிடுகையில்:- “இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள், மூர்த்திகள், கடவுளர், தேவர், அடியார், யோகி, ஞானி முதலானவர்களில் ஒருவரல்ல. இப்படி சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும், எல்லாத்தேவர்களும், எல்லாக்கடவுளரும், எல்லாத் தலைவர்களும், எல்லா யோகிகளும், எல்லா ஞானிகளும் தங்கள் தங்கள் அனுபவங்கûளக் குறித்து எதிர்பாக்கின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதி.” என்கிறார்கள். வள்ளற்பெருமான் சத்திய அறிவால் அறியப்படட உண்மைக் கடவுள் “ஒருவரே”. ஆதாரம்:- சபை விளம்பரம் நாள் 25.11.1872:- “ஆண்டவர் ஒருவர் உள்ளளைர் என்றும், அவர் பொதுப்பட உலகத்திலுள்ளளைர் யாவரும் சுத்த சன்மார்க்கப் பெரும்பயன் பெற்று நித்திய வாழ்வு வாழ்தற்பொருட்டு வெளிப்படக் காரியப்படுகின்றார்”.
அந்த, “ஒருவராகிய” உண்மைக் கடவுள்.
எல்லா அண்டங்கûளயும்,
எல்லா உலகங்கûளயும்,
எல்லா உயிர்கûளயும்,
எல்லா பொருள்கûளயும்,
மற்றை எல்லாவற்றையும்
தோற்றுவித்து, விளக்கம் செய்வித்து, துரிசு நீக்குவித்து பக்குவம் வருவித்து, பலன் தருவித்து விளங்குகிறார். ஆக, மேற்படி எல்லா அண்டங்கள், உலகங்கள், உயிர்கள், பொருள்கள் மற்றை அனைத்தும் இல்லா நிலையில், தோற்றுவிப்பதற்கு முன் இருந்த, இருக்கின்ற, இருக்கக் கூடிய, மெய்ப் பொருúள “கடவுள்” ஆகும். சத்திய அறிவால் அறியப்படுகின்ற இக்கடவுள் (ஒருவரே) அகம்புற முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்து, சுத்த மெய்யறிவென்னும் பூரணப்பொது வெளியில் அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார்.”
வள்ளலார் பேருபதேசத்தில் மேலும் குறிப்பிடுகையில்; தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங்கவியச் சொல்லாமல், மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள். அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல், பிண்ட லட்சணத்தை அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில் கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதியென்றும் பெயரிட்டு, இடம், வாகனம், ஆயுதம், வடிவம், ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பதுபோல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள். தெய்வத்துக்குக் கை, கால் முதலியன இருக்குமா? என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள். உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்கùளன்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது, அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள். ஆனால் ஆதியிலே கடவுளின் உண்மையை மறைத்தவன் ஒர் வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை அவைகளில் ஏகதேச கர்மசித்திகûளக் கற்பனைகளளைகச் சொல்லியிருக்கின்றார்கள். அதற்காக ஒவ்வொரு சித்திக்கும் பத்து வருஷம் எட்டு வருஷம் பிரயாசை எடுத்துக் கொண்டால் அற்ப சித்திகûள அடையலாம். அதற்காக அவற்றில் லட்சியம் வைத்தால், ஆண்டவரிடத்தில் வைத்துக் கொண்டிருக்கின்ற லட்சியம் போய்விடும். ஆண்டவரிடத்தில் வைத்த லட்சியம் போய் விட்டால் நீங்கள் அடையப்போகின்ற பெரிய பிரயோஜனம்போய்விடும். அல்லது, அதில் முயற்சி செய்து அவ்வளவு காலம் உழைத்து அற்பப்பிரயோஜனத்தைத் தெரிந்து கொண்டு, அதனால் ஒரு லாபத்தை ஏகதேசம் அடைந்தால், முக்கிய லாபம் போய்விடும் ஆகையால், அவைகளில் லட்சியம் வைக்காமல், ஆண்டவரிடத்திலேயே லட்சியம் வைக்க வேண்டியது.
இதுபோல், சைவம், வைணவம், முதலிய சமயங்களிலும், வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குமூஉக் குறியாகக் குறித்திருக்கின்றதே அன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்கு காலமில்லை. ஆதலால் அவற்றில் லட்சியம் வைக்கவேண்டாம். ஏனெனில், அவைகளிலும் அவ்வச்சமய மதங்களிலும் அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமேயல்லது. ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானு பவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது. ஏனெனில் நமக்குக் காலமில்லை. மேலும், இவைகளுக்கு எல்லாம் சாஷி நானேயிருக்கின்றேன். நான் முதலில் சைவ சமயத்தில் லட்சியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவு வென்று அளவு சொல்லமுடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும், வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்கும் தெரியும். அந்த லட்சியம் இப்போது எப்படிப் போய்விட்டது. பார்த்தீர்களளை அப்படி லட்சியம் வைத்ததற்குச் சாஷிவேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கிற திருவருட்பாலில் அடங்கியிருக்கிற ஸ்தோததிரங்கúள போதும்.அந்த ஸ்தோத்திரங்கûளயும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்கûளயும் சபைக்குக் கொண்டு வந்தால், அவைகúள சாஷி சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்த தென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.
இப்போது ஆண்டவர் என்னை ஏறாதநிலைமேல் ஏற்றயிருக்கின்றார். எல்லாவற்ûயும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களளைனால், என்னைப் போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களளை? பெற்றுக் கொள்ளவில்லை. நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லட்சியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலே, அந்த லட்சியம் தூக்கி விடவில்லை.
என்னை யேறாநிலைமிசை யேற்றி விட்டது யாதெனில் தயவு தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது.
அந்தத் தயவுக்கு ஒருமை வரவேண்டும். அந்த ஒருமை இருந்தால் தான் தயவு வரும். தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம். இப்போது என்னுடைய அறிவு அண்டாண்டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது. அது அந்த ஒருமையினாலேதான் வந்தது. நீங்களும் என்னைப் போல் ஒருமையுடனிருங்கள்” என்கிறார் வள்ளற்பெருமான்.
ஆக, கடவுளின் உண்மையை குழித்தோண்டி புதைத்துவிட்டு- சூதுவினால் தோன்றியதே வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கற்பனைகள். அவை உண்மை உரைக்காது தெய்வத்தை புறங்கவிய கூறவில்லை. அவை தத்துவ சித்திவிகற்பங்களளைகிய சமயங்களின் தோற்றங்கள் என்கிறார் வள்ளலார்..
அருட்பெருவெளியில் எங்கும் பூரணராகி அகத்தும் புறத்தும் நீக்கமற நிறைந்திருக்கும் பெருஞ்ஜோதியாகிய கடவுள் “பெருங்கருணை”. அருள் அனுவில் அருளளைல் தோன்றுவித்த தோன்றிய உயிர்களிடத்தில் தெய்வஅம்சமாகிய கருணையும் இருக்கும். ஒழுக்கம், அறிவினால் இடைவிடாது நன்முயற்ச்சியில் கருணை சுத்தமாதி மூன்று தேகங்கûள பெறலாம் (ஆதாரம் பக் 394).
இந்நிலையில், ஒருவராகிய பெருங்கருணைக் கடவுûள ஒன்றாகவும் இரண்டாகவும் காண்பது எந்நிலையில் சரியாகும்.? எங்கும் நீக்கமற நிறைத்திருக்கும் இத்திருவருûள ஒரு குறிப்பிட்ட பெயரிட்டு இடம், வாகனம், ஆயுதம், வடிவம், ரூபம் முதலியவையும் அமைக்கின்ற சமய, மத, மார்க்கங்கûள பொய் என்றுதானே கூறவேண்டும்.
மேலும், தன் சமய, மத, மார்க்கங்கûள அனுஷ்ட்டிக்காதவர்கûள /எதிரானவர்கûள கொல்லச் சொல்வதும், பிறர் உயிர்கûள தன்னுயிராக பாவிக்கச் சொல்லாத மார்க்கங்கûளயும் பொய் என்றுதானே கூறமுடியும். மேலும் வள்ளற் பெருமான் கூறுகையில் அவைகளில் ஏகதேச கர்மசித்திகûளக் கற்பனைகளளைகச் சொல்லியிருக்கின்றார்கள். அதற்காக ஒவ்வொரு சித்திக்கும் பத்து வருஷம், எட்டு வருஷம் பிரயாசை எடுத்துக் கொண்டால் அற்ப சித்தகûள அடையலாம் அதற்காக அவற்றில் லட்சியம் வைத்தால் ஆண்டவரிடத்தில் லட்சியம் போய்விடும் என்கிறார்.... ஆகையால், அவைகளில் லட்சியம் வைக்காமல், ஆண்டவரிடத்திலேயே லட்சியம் வைக்க வேண்டியது என்கிறார் வள்ளலார்.
முடிவுரை
அன்பர்கúள,
சுத்தசன்மார்க்கத்திற்கு எக்காலத்தும் முக்கியத் தடைகளளைவன உலகில் காணும் சமய, மத மார்க்கங்கள் என்று வள்ள பெருமான் குறிப்பிட்டாலும், சத்திய ஞான சபை விளம்பரம் 25.11.1872-ல்
“எல்லா சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப்பொது நெறியாகி விளங்குவது சுத்த சன்மார்க்கம் ஆகும்” என்கிறார் பெருமான்.
ஆம்,
வள்ளற்பெருமான் கடவுளின் அருûள பெறுவதற்கான சத்தியவழியை (சுத்தசன்மார்க்கத்தை) கண்டார்கள் அந்த சுத்த சன்மார்க்கத்தில் திருவருள் நிலையறிவது எப்படி எனில் என வள்ளலர் கூறுகையில் (பக்கம் 438ல்)
“ஒழுக்கம் நிரம்பி, கருணையே வடிவாக நிற்கும் ‘விசார சங்கல்பம்’ உண்டானால், நாம் தாழுங்குணம் வரும். அத்தருணத்தில் திருவருட் சக்தி பதிந்து அறிவு விளங்கும். ஆதலால், இடைவிடாது கருணை நன்முயற்சியில் பழகல் வேண்டும்.”
“ஒழுக்கம் நிரம்பி சங்கல்பம் உண்டானால் தான் கடவுளின் உண்மை வெளிப்படும்” என்கிறார்கள். கடவுளின் அருûள பெறுவதற்கு கருணையே சாதனம் என்கிறார். அக்கருணைக்கு ஒருமை வேண்டும். ஒருமை என்பது “தனது அறிவு ஒழுக்கம் ஒத்த இடத்தில், தானே கூடும்; மற்ற இடத்தில், தன்னால் இதரர்களுக்கு இம்சை இல்லாது அவர்கள் செய்யினும் தான் சகித்து அடங்கி நிற்பது.”
ஒழுக்கம் நிரப்பிக் கொள்ளுதலே பெருநெறியாக, சத்திய வழியாக வள்ளலாரால் கண்டறியப்பட்டது. இது “உண்மை பொதுநெறி” என்று அனைவராலும் ஒப்புக் கொள்ளக் கூடியதே.
சமரச சுத்தசன்மார்க்க சத்திய சங்கத்தில் “ஒழுக்கம் பயிலுதலே” உள்ளது. சுத்த சன்மார்க்கி என்பவர் ஒழுக்கம் நிரம்பியவர் மற்றும் சத்திய அறிவு பெற்றவர் ஆவார். அதற்கு இடைவிடாது கருணை நன்முயற்சி பழகல் வேண்டும் என்கிறார் வள்ளலார். அதன் விபரம் கடவுள் நிலையும், ஒழுக்கமும் என்ற நுளைல் பாகம்-2ல் காணுங்கள்.
அன்பர்கúள !
கால்பாதங்கள் தொட்டு வணங்கி வேண்டுவது “வள்ளலாரின் தனிநெறியை” மறுப்பதற்கோ, சாராமல் இருப்பதற்கோ உரிமையுண்டு. ஆனால் அத்தனிநெறியை திரித்து கூறுவது மிகப்பெரிய பாவம் மற்றும் சட்டப்படி குற்றமும் ஆகும். சுத்தமாதி மூன்று தேகங்கûளப் பெற்ற ஞானி “வள்ளலார்”. உலகில் எல்லா அறிஞர்கள், விஞ்ஞானிகள், தத்துவ மேதைகள், அவரவர்களின் முடிவான இறுதியாக சொல்லிய கருத்துக்கûள, அறிவிப்புகûள, போதனைகûள மட்டுமே எடுத்துக் கொண்டிருக்கும் போது வள்ளலாரின் முடிவான நெறியை, இறுதியாகச் சொல்லிய உண்மையை உள்ளபடியே வெளிப்படுத்தாமலும் அல்லது மறைத்து திரித்துக் கூறுவது அறியாமையிலா? அல்லது அறிந்தும் செய்யும் சூதுவினாலா? இதற்கு பதில் உங்களின் ஒழுக்கத்திற்கும் அறிவிற்கும் விட்டுவிடுகிறேன்.Kindly click here to ask your clarification/comments about this article

sutha sanmarga venudukol kavi i want
Written By:P Sakthivel