வள்ளலாரின் “தனிநெறி”- வெளிப்பட்ட காலம் ஏப்ரல் 1871 --APJ. ARUL


Author :APJ. ARUL


வள்ளலாரின் “தனிநெறி”- வெளிப்பட்ட காலம் ஏப்ரல் 1871
இதுவரை வெளிவராத ஒரு சத்திய ஆய்வு அன்பர்களின் மேலான பார்வைக்கு .... அன்புடன் சமர்பிப்பவர் - அடஒ. அதமக வள்ளற்பெருமானின் “தனிநெறி” வெளிப்பட்ட காலத்தை அவர்தம் “சத்திய வாக்கியப்படியே” காணக்கூடியதாக உள்ளது.
ஆதாரம் : பேருபதேசத்தில் : “இரண்டரை வருஷமாக நான் சொல்லிக்கொண்டு வந்தேன். இனிச் சொல்பவர்கள் சில நாள் தடைப்பட்டியிருப்பார்கள். நீங்கள் இதுவரைக்கும் இருந்தது போல் இராதீர்கள். இது கடைசி வார்த்தை. மேலும் ...“சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப்புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை...” என்கிறார் வள்ளற் பெருமான்.
Ø கேள்வி : வள்ளற் பெருமான் அவர்கள் எதை இரண்டரை வருஷமாக” (2 வருடம் 6 மாதம்) சொல்லிக் கொண்டு வந்தார்கள்?
பதில் : வள்ளற் பெருமானால் அறியப்பட்ட “தனிநெறி” யாகிய சுத்த சன்மார்க்கம் அதன் சத்திய வழி
Ø கேள்வி : சமரச சுத்த சன்மார்க்கக் காலம் எவ்வாறு கணக்கிடப்படலாம்.
பதில் : வள்ளற் பெருமானின் “சத்திய வாக்கியம்”மூலம்
Ø கேள்வி : “சத்திய வாக்கியம்” என்றால் என்ன?
பதில் : உண்மை கணக்கீடு / உண்மை மேற்கோள்.
Ø கேள்வி : வள்ளற் பெருமான் அவர்கள் “சத்திய வாக்கியமாக” சொல்லப்பட்ட இடங்கள் சில கூறுக.
பதில் : சமரச சுத்த சன்மார்க்க சத்தியப் பெரு விண்ணப்பத்தில் உள்ளன.
1. “....எல்லாமாகிய இயற்கையின்பக் கடவுúள! தந்தையென்பவனது சுக்கிலப்பையின்கண், யான் வந்தமைந்த கணப்போது தொடங்கி தாயென்பவளது சோணிதப் பையின்கண் சென்றடைந்த கணப்போதிற்கு முன் கணப்போது வரையுமாக, என்னாலொருவாறு அளவிடப்பட்ட ஒரு கோடியே ஒன்பது லட்சத்து அறுபதாயிரம் (1,09,60,000) கணப்போது பரியந்தம் ....”
2. “... அருட்பெருஞ்ஜோதித் தனித்தலைமைக் கடவுúள! தாயென்பவளது சோணிதப் பையின்கண் யான் வந்தமைந்த கணப்போது தொடங்கி இவ்வுலகில் தோன்றிய கணப்போதிற்கு முன் கணப்போது வரையுமாக, என்னாலொருவாறு அளவிடப்பட்ட ஆறு கோடி நாற்பத்தெட்டு லட்சக்கணப்போது பரியந்தம் ... (6,48,00,000)
மற்றும் 3. “... பேருபதேசத்தில் இரண்டரை வருஷமாக நான் சொல்லிக் கொண்டு வந்தேன்” .... (2 வருடம் 6 மாதங்கள்) இங்ஙனமாக வள்ளற்பெருமான் கால கணக்கீடாக பல இடங்களில் கூறியுள்ளளைர்கள். ஆண்டவரின் வார்த்தைகள் சத்தியமாகும். (உண்மையாகும்).
ஆக, வள்ளலாரின் தனிநெறி - சுத்த சன்மார்க்கம் - சத்திய வழி வெளிப்பட்ட காலம்

மாதம் வருடம்
வள்ளற் பெருமான் அருளிய பேருபதேசம் 10 1873
(அக்டோபர் 1873)
கழிக்க: இரண்டரை வருசமாக சமரச சுத்த
சன்மார்க்க தத்துவம் சொல்லி வந்தது 6 2
(2 வருடம் 6 மாதம்)
தனிநெறி வெளிபட்ட காலம் 4 1871 (ஏப்ரல் 1871 முதல்)
மேற்படி காலத்தை மேலும் உறுதிபடுத்த ஆதாரம் :
ஏப்ரல் 1871 லிருந்து வள்ளற் பெருமானால் அருளப்பட்ட அனைத்துமே “சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க” தனிநெறியின் அடிப்படையிலேயே உள்ளது.
ஏப்ரல் 1871 லிருந்து வள்ளற்பெருமானால் அருளப்பட்டவைகள் :
சமரச சுத்த சன்மார்க்க பெரும்பதி வருகை 1871 ஏப்ரல் மாதம்
சமரச சுத்த சன்மார்க்க பாடசாலை 1872
சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை விளம்பரம் 1872
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சாலையிலுள்ளளைர்க்கு
இட்ட ஒழுக்கக்கட்டûள 1872
சமரச சுத்த சன்மார்க்க சத்தியப் பிரார்த்தனை 1872
சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை வழிபாட்டு விதி 1872
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தார் பழக்க விதி 1872
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க “சித்திவளளைக விளம்பரம்”1873
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க சித்திவளளைக
வழிபாட்டு விதி 1873
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தார்க்கு இட்ட இறுதிக்கட்டûள 1874 மற்றும்
அருட்பெருஞ்ஜோதி அகவல் 1872; சமரச சுத்த சன்மார்க்க சத்திய விண்ணப்பங்கள் மற்றும் சமரச சுத்த சன்மார்க்க உபதேசக் குறிப்புகள். (ஏப்ரல் 1871 - ஜனவரி 1874)
ஆதாரம் : ஏப்ரல் 1871ல் “சுத்த சன்மார்க்க தனிநெறி” வெளிப்பட்டவுடன் முதல் அறிவிப்பு “சுத்த சன்மார்க்கப் பெரும்பதி வருகை”. சுத்த சன்மார்க்கத்தில் பெருமானால் கண்டறியப்பட்ட “கடவுள்” யார் என்று இங்கு குறிப்பிட்டுக் கூறுகிறார்கள்.
அஃது; “இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள், மூர்த்திகள், கடவுளர், தேவர், அடியார், யோகி, ஞானி முதலானவர்களில் ஒருவரல்ல. இப்படிச் சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும், எல்லாத்தேவர்களும், எல்லாக் கடவுளரும், எல்லாத் தலைவர்களும், எல்லா யோகிகளும், எல்லா ஞானிகளும் தங்கள் தங்கள் அனுபவங்கûளக் குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதி. இது உண்மையாயின் அந்தப் பதியின் அருûள நான் பெறுவேன், பெறுகின்றேன், பெற்றேன். என்னை யடுத்த தாங்களும் பெறுதற்கு யாதாரு தடையு மில்லை. பெறுவீர்கள், பெறுகின்றீர்கள், பெற்றீர்கள், அஞ்சவேண்டாம்.”
மேலும்,குறிப்பிடுகையில் “பலவகைப்பட்ட சமய பேதங்களும், சாத்திரபேதங்களும், ஜாதிபேதங்களும், ஆசாரபேதங்களும் போய், சுத்தசன்மார்க்கப் பெருநெறி யொழுக்கம் விளங்கும். அது கடவுள் சம்மதம்.
இது 29 மாதத்திற்குமேல்.” (இங்கு ஒரு சத்திய கணக்கீடு தருகிறார்கள்)
அன்பர்கúள, இங்கு “29 மாதத்திற்கு மேல்”, என்பது சத்திய வாக்கியமாகும். 29 மாதத்திற்குமேல் என்பது 2 வருடம் 5 மாதத்திற்கு மேல் ஆகும். ஆம் மேற்படி 29 மாதத்திற்கு பின்பே, நம் வள்ளற்பெருமான் சத்தியமிக்க “பேருபதேசம்” அருளியது 22.10.1873 மற்றும் சுத்த சன்மார்க்க உண்மைப்படியே “சுத்த பிரணவ ஞான தேகத்தோடு” வெளிப்பட்டது 30.01.1874 ஆகும்.
வள்ளற்பெருமான் கூறுகையில் சமயத்தில் வைத்திருந்த லட்சியமே என்னை இந்த நிலையில் துளைக்கி விட்டதென்றாலே, அந்த லட்சியம் துளைக்கி விடவில்லை” என்கிறார்கள்.
மேலும், நீங்களும் விட்டுவீட்டீர்களளைனால் என்னைப் போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்” என்கிறார்கள். எனவே “வள்ளற் பெருமான் தனிநெறியை” யே முன்னிலைப் படுத்துவதே சிறப்பாகும். அதுவே சரியாகும். ஆக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் முதன்மையான மற்றும் முக்கிய பகுதிகளளைக விளங்குபவைகள் ஏப்ரல் 1871 க்குப் பின்பு சுத்த சன்மார்க்க தனிநெறி அடிப்படையில் வெளியானவைகள் மட்டுமே. சுத்த சன்மார்க்கம் வெளிப்பட்ட ஆண்டு, வள்ளற் பெருமானால் கண்டறியப்பட்ட கடவுளின் உண்மை ஏப்ரல் 1871 என்பதை வள்ளற்பெருமானின் சத்திய வாக்கியம் மூலம் அறிந்திடுவோம். வள்ளற்பெருமானின் இந்த தனிநெறியே (சுத்த சன்மார்க்கம்) சத்தியமாக உள்ளது. இந்த நெறியின் அடிப்படையிலேயே கடவுûள சத்தியமாக காணமுடியும். இது போல் உலகில் யாரும், எந்த மார்க்கமும், இல்லை.

Kindly click here to ask your clarification/comments about this article

kadaul entral enna? aandavar enbathu yaar? iravan enbathu yaar? theivam enbathu yaar?
Written By:vaishnavan
It is great pleasure to know vallalar S inner mind through this 1871-1874 debts in his life caste less society forming is best to bring global population to one force sathyanarayanan 8/1 Kasthuri ba street chennai-15 24346793 campingplot 30 Mahalakshmi buildings D-3rd cross st Dr Chandra sekar avenue second main raoad Thuraipakkam chennai-97 vallar vazhi vazhvom .
Written By:Sathyanarayanan.S.R
Global followers can share their messages about vallalar Sathyam -1948
Written By:Sathyanarayanan S.R