சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் எக்காலத்தும் முக்கியத் தடைகள் எவை எவை?-apj. arul


Author :APJ. ARUL


சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் எக்காலத்தும் முக்கியத் தடைகள் எவை எவை?
ஆதாரம் : சமரச சுத்த சன்மார்க்க சத்திய சிறு விண்ணப்பத்திலிருந்து
“எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுúள, இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடையாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள், என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்தில் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும் ....”
ஆசாரம் - சாஸ்திர முறைப்படி ஒழுகை சாஸ்திர வழக்கம்
சங்கற்பம் - மனோ நிச்சயம் / கருத்து
விகற்பம் - மன மாறுபாடு
ஆக, சமசர சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தினர்களுக்கு வள்ளற்பெருமானால் அறிவிக்கப்பட்ட முக்கிய தடைகள்: உலகில் காணும் சமய மத மார்க்கங்களில் மனோ நிச்சயம் மற்றும் மன மாறுபாடு அடிப்படையிலான
“சாஸ்திரப்படியான” தொன்று தொட்டுவரும் பழக்கம்
வழக்கமாகச் செய்யும் சமயமத மார்க்கச் செயல்
பழக்க மரபு / முறை (மள்ஹஞ்ங்)
மனோ நிச்சயத்தில் / மனோ வேறுபாட்டில் அமையும் எல்லாவித கருத்து,நோக்கம், திட்டம் , உருவங்கள், அடையாளம் , உணர்ச்சி ,
வேறுபாடான பல வகைகள் , மாறுபாடு,வேற்றுமை , கற்பனை, விருப்பம்,
ஆகிய மேலே சொல்லப்பட்ட அனைத்தும் எங்கள் (சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தார்களின்) மனதில் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும் என்கிறார்கள். மற்றும்,
உலகாசாரம்-உலக வழக்கம் “உலகாசார முறைப்படியான” வருணம், ஆசிரமம் ஆகிய சங்கற்ப விகற்பங்களளைவன:-
வருணம் - சமய, மத, மார்க்கங்களின் காணப்படுகின்ற நிறம், சாதி (இங்கு காணும் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற நால்வகைப்பட்ட சாதிகள்) குலம், துதி, மாதிரி (நற்ஹ்ப்ங்) மற்றும்
ஆசிரமம் - சமய, மத, மார்க்க வாழ்க்கை நிலைகளளைவன பிரமசரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம்,சன்னியாசம்
மேற்படியான, வருணம் ஆசிரமத்தில் காணும் மனோ நிச்சய கருத்தின் அடிப்படையிலும் மன மாறுபாடு அடிப்படையிலும் காணப்படுகின்ற அனைத்து உலக வழக்கமும் எங்கள் மனதில் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும்.
வள்ளற் பெருமான் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகளளைவன உலகில் காணும் சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்று சொல்லியதோடு விடாமல் அதனுடைய ஆசாரம், உலகாசாரம் ஆகியவற்றை எவை எவை என்று தெளிவு படச் சொல்லி, அவைகளில் லட்சியம் வைக்க கூடாது என்று சொல்லியுள்ளளைர்கள்.
மேலும், வள்ளற் பெருமான் சுத்த சன்மார்க்க உபதேசக் குறிப்பில் குறிப்பிட்டது யாதெனில் :-
பரிபாசை அங், சிங், வங், பங், அம், விந்து, நாதம், சிவ, வசி, ஓம், அரி, அர, சத்து, சித்து, ஆனந்தம், பரிபூரணம், ஜோதி, சிவயவசி, சிவாயநம, நமசிவாய, ஆ, ஈ, ஊ, ஐ, நாராயணாய நம, சிவோகம், சோகம் முதலியவாகச் சமய மதங்களில் குறிக்கப்பட்ட மந்திர தந்திர ரகசிய வாசக வாக்கிய வசன அக்ஷர தத்தவ பவுதிகள் முதலியவையும் பரிபாû‘யாம். மேற்குறித்த வண்ணம் ஜபித்தும், தியானித்தும், அர்ச்சித்தும், உபாசித்தும், சமாதி செய்தும், சுவாசத்தை அடக்கியும், விரதமிருந்தும், இவை போன்ற வேறு வகைத் தொழிற்பட்டும் பிரயாசை எடுப்பது வியர்த்தம் (வியர்த்தம் = பொருளிண்மை மற்றும் பயனின்மை ) பரிபாசை = மரபு முறையான குறியீடுகள் - போலியானவைகள்)
சுத்த சன்மார்க்கத்தில் நாம் ஒழுக்கங்கûள நிரப்பிக் கொள்ளும் தருணத்தில் இவை அனைத்தும் (சமய, மத மார்க்கங்கள் மற்றும் அவற்றின் மந்திரம், சடங்கு உட்பட அனைத்தும்) கற்பனைகள் என்று அறியவரும்.
BY APJ. ARUL FOR KARUNAI SABAI SALAI TRUST, MADURAI

Kindly click here to ask your clarification/comments about this article