வள்ளற்பெருமான் எவற்றில் லட்சியம் வைக்க வேண்டாம் என்றார்?


Author :APJ. ARUL


சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கப் பாடல்கள் :
சுத்த சன்மார்க்க அடிப்படையில் அமையப்பெற்ற பாடல்கûள ஆறாவது திருமுறை என்றும் “திருவருட்பா” ஸ்தோத்திரப் பாடல்கள் என்றும் அழையாமல், சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கப் பாடல்கள் என்றழைப்பதே சாலச்சிறந்தது.
ஆதாரம் : வள்ளற் பெருமான் அருளிய “பேருபதேசம்” 22.10.1873
அ. “.... சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம், முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழுஉக் குறியாகக் குறித்திருக்கின்றதே அன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்கு காலமில்லை. ஆதலால் அவற்றில் லட்சியம் வைக்க வேண்டாம் ....”
ஆ. “... இவைகளுக்கெல்லாம் சாட்சி நானேயிருக்கின்றேன். நான் முதலில் சைவ சமயத்தில் லட்சியம் வைத்துக் கொண்டியிருந்தது இவ்வளவு என்று அளவு சொல்லமுடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும், வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்கும் தெரியும். அந்த லட்சியம் இப்போது எப்படி போய்விட்டது. பார்த்தீர்களளை! அப்படி லட்சியம் வைத்ததற்குச் சாட்சிவேறே வேண்டியதில்லை. நான் இயற்றிய ’திருவருட்பா’ வில் அடங்கியிருக்கிற ஸ்தோத்திரங்கúள போதும். அந்த ஸ்தோத்திரங்கûளயும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்கûளயும் சபைக்குக் கொண்டு வந்தால், அவைகúள சாட்சி சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போது இருந்தது என்றால் அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.”
இ. இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேல் ஏற்றியிருக்கின்றார். எல்லாவற்றையும் விட்டுவிட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களளைனால் என்னைப் போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களளை? பெற்றுக் கொள்ளவில்லை. நான் அப்படி அந்த சமயத்தில் வைத்திருந்த லட்சியமே என்னை இந்த நிலையில் துளைக்கி விட்டதென்றாலோ, அந்த லட்சியம் துளைக்கி விடவில்லை. .... என்னை ஏறாநிலைமிசையேற்றிவிட்டது. யாதெனில் தயவு, தயவு என்னும் கருணைதான் என்னைத் துளைக்கிவிட்டது. நிற்க
Ø வள்ளற்பெருமான் எவற்றில் லட்சியம் வைக்க வேண்டாம் என்றார்?
சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும் ....
Ø எந்தச் சமயத்தில் அவர்கள் லட்சியம் வைத்திருந்தார்கள்?
சைவ சமயத்தில்
Ø அதற்குச் சாட்சியாக எதைக் குறிப்பிட்டார்கள்?
தான் இயற்றிய ‘திருவருட்பா’ ஸ்தோத்திரப் பாடல்கள்
Ø திருவருட்பா-வில் என்ன சொல்லியிருந்தார்கள்?
சைவ சமய ஸ்தோத்திரங்கள்
Ø மேற்படி ‘திருவருட்பா’ இயற்றியதற்குக் காரணம் என்ன என்று வள்ளலார் குறிப்பிட்டார்கள்?
அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போது இருந்தது என்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.
Ø வள்ளலாரை ஏறாதநிலைமேல் ஏற்றிவிட்டது எதனால்?
‘திருவருட்பா’ உட்பட சைவ சமயத்தையே விட்டுவிட்டதினாலே பெரிய லாபத்தைப் பெற்றேன் என்கிறார்கள்.
Ø இதன்மூலம், சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தார்கள் செய்ய வேண்டியது என்ன?
வள்ளலார் இயற்றிய ‘திருவருட்பா’ ஸ்தோத்திரங்கûள (சைவ சமய ஸ்தோத்திரங்கள்) விட்டுவிட வேண்டும். அவற்றின் மீது லட்சியம் வைக்க கூடாது.
நிற்க
Ø ‘திருவருட்பா’ ஸ்தோத்திரப்பாடல்கள் அடங்கிய 1 முதல் 4 திருமுறைகள் வரை வெளியிட்ட வருடம் 1867
Ø மேற்படி சைவ சமய ஸ்தோத்திரப்பாடல்களுக்கு ‘திருவருட்பா’ என்று பெயரிடப்பட்டது
Ø உலகத்தார் அனைவருக்கும் பொதுவாக அமைந்த மார்க்கத்தின் பெயர் “சமரச சுத்த சன்மார்க்கம்”, வள்ளலார் சத்திய வழியை கண்ட வருடம் ஏப்ரல் 1871.
Ø 30.01.1874 க்கு பின்பும் தொழுவூரர் வேலாயுத முதலியரால் செய்யப்பட்ட செயல்கள் என்ன?
· 1880ல் ஐந்தாம் திருமுறை வெளியீடு, மேற்படி ஐந்தாம் திருமுறையில்
‘திருவருட்பா’ சமய ஸ்தோத்திரப் பாடல்கள் ........
பிள்ûளயார் திருப்பதிகங்கள் நான்கு (4)
ஒற்றியூர் வழிபாட்டுக் காலத்திய திருத்தணிகைப் பதிகங்கள்-47 கந்த கோட்டப் பதிகங்கள் உட்பட சமய ஸ்தோத்திரங்கள் அடங்கியது.
· மீண்டும் 1882 ல் ஐந்தாம் திருமுறையின் இரண்டாம் பதிப்பு
· 1887 ல்1 முதல் 4 ஆம் திருமுறையின் இரண்டாம் பதிப்பு
- நிற்க -
ஆக, தொழுவூர் வேலாயுதம் அவர்கள் சமயப்பற்றிலிருந்து விடுபடாமல் இருந்தார்கள் என்றும் ‘சுத்த சன்மார்க்கத்தை அனுஷ்டிக்கவில்லை’ அல்லது புரிந்திருக்கவில்லை என்பதே நிருபணமாகிறது.
Ø சுத்த சன்மார்க்கம் வெளிப்பட்ட பின்பும் நான்கு திருமுறைகளின் இரண்டாம் பதிப்பு 1887-ல் மற்றும் “ஐந்தாம் திருமுறை” (1880 மற்றும் 1882)யையும் வெளியிட்ட செயல் “சமரச சுத்த சன்மார்க்க தனிநெறியை மூடி மறைத்திடச் செய்த முதல் செயல்”
- நிற்க -
இங்கு வள்ளற்பெருமான் சொல்லியவைகள் மீண்டும் நினைவில் கொள்வோம்
“இரண்டரை வருஷமாக நான் சொல்லிக்கொண்டு வந்தேன். இனிச் சொல்பவர்கள் சில நாள் தடைபட்டியிருப்பார்கள். நீங்கள் இதுவரைக்கும் இருந்தது போல் இராதீர்கள். இது கடைசி வார்த்தை. மேலும் ...”சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப்புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை ...”
“திருவருட்பா”-வில் அடங்கிய ஸ்தோத்திரப்பாடல்கள் மீது லட்சியம் வையாதீர்கள் என்றும் அவைகûள கைவிட்டீர்களளைனால் என்னைப் போல் ஏறாதநிலைமிசை ஏறுவீர்கள் என்பதே வள்ளற்பெருமானின் சத்திய வாக்கியம், கட்டûளயாகும்.
வள்ளற்பெருமான் தனது “சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை வழிபாட்டு விதி 18.07.1872”-ல்
“இன்று தொடங்கி சபைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை என்றும், சாலைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை என்றும், சங்கத்திற்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கமென்றும் திருப்பெயர் வழங்குதல் வேண்டும்.” என்றார்கள்.
1871 முதல் 1874 வரை வள்ளற் பெருமானால் அருளப்பட்ட பாடல்கûள “சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கப் பாடல்கள்” என்று அழைக்காமல், சமய திருமுறைகளளைவன 1 முதல் 4 & 5 ஆகியவைகûள தொடர்ந்து ஆறாம் திருமுறை என்றும் அதன் பாடல்கûள - திருவருட்பா ஸ்தோத்திரங்கள்” என்று அழைக்கத் தேவையில்லை/ அழைக்கக் கூடாது. இது உலகத்தார்களிடத்திலும், சுத்த சன்மார் க்கத்தை அறிய விரும்பிவரும் அன்பர்களிடத்திலும் குழப்பத்தையே ஏற்படுத்தும். காரணம் வள்ளற் பெருமான் கூறுகையில் எனது சமயப் பற்றினை நான் இயற்றிய “திருவருட்பா ஸ்தோத்திரங்களில்” காணலாம் என்று குறிப்பிட்டுள்ளளைர்கள் (அன்று வெளிவந்திருந்தது 1 முதல் 4 திருமுறைகள்). எனவே சுத்த சன்மார்க்க சத்திய அடிப்படையில் அமையப்பெற்ற பாடல்கûள ஆறாம் திருமுறை என்றும், “திருவருட்பாப் பாடல்கள்” என்றும் பெயரிட்டு அழைக்காமல், “சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க நெறிப் பாடல்கள் அல்லது” சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கப் பாடல்கள் என்றே அழைத்திடுவோம் / அழைத்திடக்கூடும்.
By APJ.ARUL for KARUNAI SABAI SALAI TRUST,MADURAI

Kindly click here to ask your clarification/comments about this article