சுத்த சன்மார்க்கமே சிறந்தது -


Author :KARUNAI SABAI SALAI TRUST, MADURAI


அன்பர்கúள,
சுத்தமாதி மூன்று தேகங்களேப் பெற்ற "வள்ளலார்" என்னும் ஞானியைப் பற்றியும் "கடவுளின் அருளேப்" பெறுவதற்கு அவர்களளைல் கண்டு தெரிந்து வெளிப்படுத்திய சத்தியப் பொது வழியான "சுத்த சன்மார்க்கத்தினை" தெரிந்து கொள்வதற்கு முன் ஒரு சத்திய விசாரணை. மேற்படி விசாரணைக்கு வள்ளலாரின் குறிப்புகள், பாடல்கள், விண்ணப்பங்கள் ஆதாரமாக வைக்கப்படுகிறது மற்றும் நிலையத்தால் வெளியிடப்பட்ட 2008ம் ஆண்டு உரைநடைப் பகுதிபுத்தகமும் .
வள்ளலார் தனது பேருஉபதேசத்தில் பக்கம் 475ல்
"உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை
சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை"
என்றும், பக்கம் 473ல்
"இரண்டரை வருஷமாக நான் சொல்லிக் கொண்டு வந்தேன் ..."
என்ற சத்திய வாக்கியங்களின் பொருளே நாம் தெரிந்தாக வேண்டும்.
வள்ளலார் பேருபதேசம் ஆற்றிய நாள் அக்டோபர் 1873 அதிலிருந்து அவர்தம் சத்திய வாக்கியப்படி 2 1/2 வருடம் கழித்தால் வருவது ஏப்ரல் 1871.
ஆக, வள்ளலார் ஒரு சத்திய வழியாக சுத்த சன்மார்க்கத்தை கண்டறிந்த நாள் ஏப்ரல் 1871 ஆகும். அதற்கு ஆதாரம், அந்த ஏப்ரல் 1871ல் வெளியிட்ட "பெரும்பதி வருகை" என்கின்ற அறிக்கை ஆகும். (பக்கம் 547). அதில் இதன் உண்மை 29 மாதத்திற்கு மேல் என சத்திய குறியீடு உள்ளது. 29 மாதம் என்பது 2 வருடம் 5 மாதம் ஆகும். எனவே ஏப்ரல் 1871க்கு பிறகே சுத்த சன்மார்க்கத்தை சத்தியமாக அறியக்கூடும்.
மேலும் மிக முக்கியமாக (பக்கம் 410-ல்) :- திருகதவு திருகாப்பிட்டு கொண்ட முந்தின இரவில் வள்ளலார் முடிவாக சொல்லியது யாதெனில்
"இது காறும் என்னொடு நீங்கள் பழகியும் சுத்த சன்மார்க்க ஒழுக்கம்
இன்னதென்று தெரிந்து கொள்ளவில்லை."
யாதெனில்;
"இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளளைகக் கொள்ளளைதீர்கள்; எல்லாப் பற்றுகளுக்கும் காரணமான "ஆசார" வகைகளே விட்டு "தலைவனையே தொழுவீர்கள்"
அன்பர்கúள இனி நாம் மேற்படி சுத்த சன்மார்க்க ஒழுக்கக் கடமை அடிப்படையிலேயே நல்ல விசாரணை செய்வோம்.
வந்தனம்.
-அன்புடன் அடஒ. அதமக
சுத்த சன்மார்க்கத்தின் உண்மைப் பொதுநெறி

சுத்த சன்மார்க்கம் யாதெனில் - சுத்தம் என்பது ஒன்றுமல்லாதது. சுத்தம் என்பது சன்மார்க்கம் என்ற சொல்லுக்குப் பூர்வம் வந்ததால், உலகின் சமய, மத அனுபவங்களேக் கடந்தது.

சுத்த சன்மார்க்கத்தில் முக்கிய சாதனம் இடைவிடாது "கருணை" நன்முயற்சியில் பழகல் (அன்பர்கúள பக்கம் 438-ல்)
"கருணை என்பது எல்லாயிர்களிடத்தும் தயவும், ஆண்டவரிடத்தில் அன்புமே
தயவு, அருள், கருணை என்பவை ஒரு பொருளேயே குறிக்கும்
"தயவு"க்கு ஒருமை வர வேண்டும். அந்த ஒருமை இருந்தால் தான் 'தயவு' வரும் (பக்கம் 470)
பக்கம் 547 -ல் ஒருமை என்பது தனது அறிவு ஒழுக்கம் ஒத்த இடத்தில், தானே கூடும்.
ஒழுக்கம், அவையாவன (பக்கம் 547)
நற்குண ஒழுக்கங்கள் - நல்லறிவு, கடவுள், பக்தி, உயிரிரக்கம், பொது நோக்கம், திரிகரண அடக்கம்
நற்செய்கை ஒழுக்கங்கள் - உண்மையுரைத்தல், இன்சொல்லாடல், உயிர்க்கு உபகரித்தல்
சுபகுணம் - உண்மையறிவு, உண்மையன்பு, உண்மையிரக்கம் என்பவையாகும்
ஆக, பக்கம் 438ன்படி கடவுள் நிலையறிவது எப்படியெனில் (பக்கம் 438) "ஒழுக்கம் நிரம்பி, கருணையே வடிவாக நிற்கும் விசார சங்கல்பம் உண்டானால் நாம் தாழும்குணம் வரும். அத்தருணத்தில் திருவட்சத்தி பதிந்து அறிவு விளங்கும்"
சங்கல்பம் விரிவு ஐந்து 1) கடவுளறிவு 2) கடவுள் வியாபகம் 3) உள்ளழுந்துதல் 4) அதை சிந்தித்தல் 5) சிந்தித்தலை விசாரித்தல் பக்கம் 392ல்
"ஆண்டவரிடத்தில் அன்பும்" என்பதில் ஆண்டவர் யார்? சுத்த சன்மார்க்கத்தில் வழிபாடு ஆண்டவர் யார் எனில் பக்கம் 559
"எங்கும் பூரணராகி விளங்குகின்ற ஓர் உண்மைக் கடவுள் உண்டென்றும், அக்கடவுளே உண்மையன்பாற் கருத்தில் கருதி வழிபாடு செய்தல் (கூடும்)"
அன்பு என்பது, (பக்கம் 418)
ஆன்மநெகிழ்ச்சி; ஆன்மவுருக்கம் ஆகும்
ஜீவகாருண்யம் உண்டானால் அருள் உண்டாகும்.
அருள் உண்டானால் அன்புண்டாகும்.
பக்கம் 420ல் "ஜீவ காருண்யம்" உண்டாவதற்கு வழி யாதெனில் கடவுளுடைய பெருமையும், தரத்தையும் நம்முடைய சிறுமையும், தரத்தையும் ஊன்றி விசாரித்தல்
பக்கம் 419ல் ஜீவகாருண்ய விருத்திக்கு ‘பொது நோக்கம்’ வருதல் வேண்டும்
கட்டுப்பாட்டு ஆசாரங்கள் ஒழிந்தால் தான் பொது நோக்கம் வரும்.
பக்கம் 418ல் கட்டுப்பாட்டு ஆசாரங்கள், அவையாவன:
சாதி, குல, ஆசிரம, லோக, தேச, கிரியா, சமய, மத, மரபு, கலா, சாதன, அந்த, சாஸ்திர ஆசாரங்கள் ஆகும்.
பக்கம் 418ல் மேற்படி கட்டுப்பாட்டு ஆசாரங்கள் சமயங்களிலும் மதங்களிலும் மற்றும் மார்க்கங்களிலும் உள்ளன. ஆகவே தயவை விருத்தி பண்ண ஆசாரங்கள் தடையாக உள்ளதால் சுத்த சன்மார்க்கத்திற்கு எக்காலத்தும் முக்கியத் தடைகள் - மேற்படி சமய, மத, மார்க்கங்கள் ஆகும்.
ஆனால் , சுத்த சன்மார்க்க நெறி எல்லா சமயங்களுக்கும் எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொதுநெறியாகி விளங்கும்.
அன்பர்கúள சுத்த சன்மார்க்கத்தில் "கடவுள் உண்மை", அக அனுபவமே
மேலும் அறிந்த கொள்ளக் கூடியவை:-
பக்கம் 561ன்படி சமய, மத மார்க்கங்களின் ஆசார சங்கற்ப விகற்பங்கள் மற்றும் வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்கள் அனைத்தும் நம் மனதில் பற்றக் கூடாது.
பக்கம் 408ன்படி விந்து, நாதம், சிவ, ஓம், சத்து, சித்து, ஆனந்தம், ஜோதி, சிவயவசி, சிவாயநம, நமசிவாய, நாராயணாயநம உள்ளிட்ட சமய, மத மந்திர தந்திர குறியீடுகளுடன் ஜபித்தல், தியானித்தல், அர்ச்சித்தல், உபாசித்தல், சமாதி செய்தல், சுவாசத்தை அடக்குதல், விரதமிருத்தல் போன்றவை கூடாது. காரணம் அவை பலனின்மை. சுத்தசன்மார்க்கத்தின் ஒரே ஆசாரம் ஞான ஆசாரமாகிய “பொது நோக்கம் வருதல்” வேண்டும்.
பக்கம் 409ன்படி சுத்த சன்மார்க்கத்தின் கீழ்ப்படிகளளைக உள்ள மேற்படி சமய, மத, மார்க்கங்களில் ஐக்கியம் என்பதே இல்லை. (பக்கம் 409)
பக்கம் 411ன்படி சமய, மத, மார்க்கங்களே முற்றும் பற்றறக் கைவிடல் வேண்டும். அதில் லட்சியம் வைத்தல் கூடாது.
காமம், குரோதம், கொலை, புலை கூடாது.
பக்கம் 402ல் என்று மிக தெளிவாக சொல்கிறார் வள்ளலார். மேற்படி சமய, மத, மார்க்கங்கள் சுத்த சன்மார்க்கத்திற்கு அநந்நியமாக விளங்குகிறது. ஆனால் அந்நியமல்ல. அல்லாதனவே அன்றி இல்லாதன வல்ல (பக்கம் 402)
கடவுளறிவு - என்பது என்ன?

எல்லா வஸ்துக்களேயும் தெரிந்து அனுபவிக்கச் செய்கின்ற சூரியப் பிரகாசம் போன்ற கடவுளறிவே அனுபஞானம்.
ஒரு வஸ்துவை அதன்
நாம ரூபமின்றி காண்பது இந்திரிய அறிவு
கூடமாக ( அவை :- நாமம், ரூபம், குணம், குற்றம்) அறிதல் கரண அறிவு
இன்னதென்று (பிரயோசனம்) தெரிதல் ஜீவ அறிவு
எதையும் தானாக (உண்மையாக ) அறிதல் ஆன்ம அறிவு

ஆன்மாக்கள் (பக்கம் 353 முதல் 355)

ஆன்மா அணுக்கúள. அவை அநாதியாய் உள்ள ஆன்மாகசத்தில் நிரம்பியிருக்கும் தயையென்பது ஆன்மா. ஆன்மாவுக்கு இயற்கைக் குணம் தயை. ஆகாசம் அனாதி. அதுபோல் அதற்குக் காரணமான பரமாகாச சொரூபராகிய கடவுள் அனாதி. அனாதியாகிய ஆகாசத்தில் காற்றும் அனாதி. அனாதியான வெளியில் காற்று எப்படி அனாதியோ, அப்படிக் கடவுளிடத்தில் அருட்சத்தி அனாதியாய் இருக்கின்றது. ஆகாயத்தில் அணுக்கள் நீக்கமற நிரம்பியிருக்கின்றன. இதுபோல் கடவுள் சமூகத்தில் ஆன்மாகாசத்தில் அணுக்கள் சந்தானமயமாய் நிரம்பி இருக்கின்றன. அந்த அணுக்களுக்கு ஆன்மா என்றே பெயர்.
பூதாகாயத்திலிருக்கும் சாதாரண அசாதாரண அணுக்கள் எழுவகையாய்ப் பிரியும். அவையாவன: வாலணு, திரவவணு, குருவணு, லகுவணு, அணு, பரமாணு, விபுவணு. மேற்படி அணுக்கள் அனந்தவண்ண பேதமாய் இருக்கும். இவற்றில் காரியவணு, காரிய காரணவணு, காரணவணு என மூன்று வகையாய், பக்குவ, அபக்குவ, பக்குவாபக்குவமென நிற்கும். இவைபோல் ஆன்மாகாயமான கடவுள் சமூகத்தில் ஆன்மாக்களும் மூவகையாய் நிற்கும். யாவையெனில் பக்குவ ஆன்மா, அபக்குவ ஆன்மா, பக்குவாபக்குவ ஆன்மா என மூவகைப்படும். ஆகாயத்திலிருக்கும் அணுக்கள் மூன்று விதமானதற்குக் காரணம் அங்குள்ள காற்றேயாம். அதுபோல் ஆன்மாக்கள் மூவிதமானதற்குக் காரணம் கடவுள் சமூகத்திலுள்ள அருட்சத்தியேயாம்.
அப்படி மூவகையான ஆன்மாக்களுக்கு அருட்சத்தியின் சமூகத்தில் தோன்றிய இச்சை, ஞானம், கிரியை யென்னும் பேதத்தால் ஆன்மாக்களுக்குத் தேகம் மூன்றுள. யாவையெனில்: கர்மதேகம், பிரணவதேகம், ஞானதேகம் என மூன்று விதம் ஆகும்..................... இஃது ரகசியம் சுத்த சன்மார்க்கத்தில் விளங்கும்.
ஆதலால் அன்பர்கúள,
(பக்கம் 405) சாதனங்கள் ஒன்றும் வேண்டாம். ஏதாவது ஓர் சாதனம் சொல்லக்கேட்டு அதன்படி நடந்தால் சிறு ஒளி உண்டாம். அதைக் கண்டு பல்லிளித்து இறுமாந்து கெட நேரிடும். ஆதலால், காலந் தாழ்த்தாது எல்லா உயிரையும் தன்னுயிரைப் போலப் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே சாதனம். இந்தக் குணம் வந்தவன் எவனோ அவன் தான் இறந்தவரை எழுப்புகின்றவன்; அவனே ஆண்டவனு மாவான்.
(பக்கம் 405) சமாதிப் பழக்கம் பழக்கமல்ல
சகஜப் பழக்கமே பழக்கம்
இடைவிடாது "கருணை" நன்முயற்சியில் பழகல் வேண்டும்
ஆக, எவ்வகையிலும் சுத்தசன்மார்க்கமே உயர்வுடையது.
பக்கம் 404ன்படி சுத்த சன்மார்க்கமானது
பாவனாதீத அதீதம் - எவ்விதத்தும் எண்ணுதற்கரியது.
குணாதீத அதீதம் - குணம் கடந்தது
லட்சியாதீத அதீதம் - கொண்டியிருக்கும் அனுபவங்களே கடந்தது
வாச்சியாதீத அதீதம் - சொல்லுக்குரிய பொருளே கடந்தது.
சுத்த சன்மார்க்கி என்பவர்
அக அனுபவத்தில் உண்மையறிந்த சாத்தியர்கள்
மேற்படி சாத்தியர்கúள சுத்ததேகிகள் மற்றும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையாளர்கள்.
நாம் :
வள்ளலார் கட்டளேயிட்டபடியே கட்டுப்பாட்டு ஆசாரங்களே ஒழித்து சுத்த சன்மார்க்க ஞானாசாரமாகிய பொதுநோக்கம் உடையவர்கள். இடைவிடாது "கருணை" நன்முயற்சியில் பழகுபவர்கள்.
வெளியீடு: by APJ.ARUL For:
கருணை சபை-சாலை
உத்தங்குடி, மதுரை

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Kindly click here to ask your clarification/comments about this article