அன்புள்ள ஆசிரியர் (ஜுனியர் விகடன்) அவர்களுக்கு,--- From Karunai sabai salai Trust, Madurai.


Author :APJ. ARUL


அன்புள்ள ஆசிரியர் (ஜுனியர் விகடன்) அவர்களுக்கு,
வணக்கம்,
தங்கள் இதழ் 05.5.2010-ல் வெளிவந்த "வள்ளலாருக்கு ஒரு வெற்றி மாலை " கட்டுரைக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். ஜுனியர் விகடன் "பணி" ஜீவர்களின் விடியலுக்கு என்பது எனது எண்ணம்.
மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு, வள்ளலாரின் முடிவான நெறியை உள்ளது உள்ளபடி தெரிவித்திட வேண்டிய கடமையில் நாங்கள் உள்ளேளைம். கடந்த 135வருடங்களுக்கும் மேலாக வள்ளலாரின் நிலையங்களில் நடைப்பெற்று வந்த முரண்பாடான செயலுக்கு எந்தொரு தீர்க்கமான நடவடிக்கையையும் இந்து சமய அறநிலையமோ அல்லது எவருமோ எடுக்காமல் அறியாமையில் வேடிக்கை பார்த்து வந்தனர். தன்னை வெளிப்படுத்தி கொள்ளாத எங்கள் சங்க அன்பரின் சீரிய முயற்ச்சியால் வழக்கு தொடுக்கப்பட்டு முரணான நடவடிக்கைகள் தடுக்கப்பட்டது. பிறர் குற்றம் விசாரியாதிருத்தல் என்ற ஓழுக்கத்தின் அடிப்படையில் இவற்றை மேலும் விவரிக்காமல், வள்ளலாரின் முடிவான நெறியை ஆதாரங்களுடன் தங்களுக்கு தெரியப்படுத்த விழைகிறோம். இக்கடிதம் தங்களுக்கு எழுதக்காரணம் தங்கள் பிரசுரித்த கட்டுரையில் வள்ளலாரை சமய அடையாள திருநீரு கோலத்துடன் வெளியிட்டது மற்றும் கட்டுரை முடிவில் "வள்ளலாரின் சமாதியில் மீண்டும் ஒரு வெற்றி மாலை" என குறிப்பிட்டதே.
வள்ளலார் தனது சத்திய சிறு விண்ணப்பத்தில் சொல்லியது;( உரைநடைப்பகுதி, நிலையத்தார் வெளியீடு பக்கம் 560-ல்)
"எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புத கடவுளே! இது தொடங்கி எக்காலத்தும் சுத்தசன்மார்க்கத்தின் முக்கியத் தடையாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம் ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனத்திற் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும் " அள்ல்ங்ழ் பஹம்ண்ப் கங்ஷ்ண்ஸ்ரீர்ம், " மேலே சொன்ன ஆசார சங்கற்ப விகற்பங்களும் என்பது சாஸ்திரப்படியான மனோ நிச்சயத்தில் மற்றும் மனோ வேறுபாட்டில் அமையும் எல்லாவித கருத்து, நோக்கம், திட்டம், அடையாளம், கற்பனை, விருப்பம், உள்ளிட்ட எவையும் எங்கள் மனதில் பற்றக் கூடாது என்கிறார்கள்.
மேலும், உலகாசார சங்கற்ப விகற்பங்களும் மனதில் பற்றக்கூடாது என்பதே வள்ளலாரின் தனி வழி.
வழி என்பது மார்க்கம் மேலும் பக்கம் 481-ல்
தயவை விருத்தி செய்வதற்கு தடையாக இருப்பவன சமய ஏற்பாடு ஜாதி ஏற்பாடு முதலிய கட்டுப்பாட்டு ஆசாரங்கள். ஆதலால் ஆசாரங்கûள விட்டொழித்து பொது நோக்கம் வந்தாலொழிய காருண்ணியம் விருத்தி ஆகிக் கடவுள் அருûளப் பெற்று அனந்த சித்தி வல்லபங்கûளப் பெறமுடியாது. பக்கம் 411-ல்
சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடைகளளைகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்கûள முற்றும் பற்றறக் கைவிட்டவர்களே இம் மார்க்கத்திற்கு உரியவர்கள் என்கிறார் வள்ளலார். மிகவும் முக்கியமாக வள்ளலார் உருவத்திற்கு எந்தொரு புகைப்படமும் ஆதாரமாக கிடையாது.
அன்பர்கள் எடுத்த புகைப்படத்தில் வள்ளலாரின் உருவம் புதியவில்லை. வெறும் நெகட்டிவாகவே இருந்தது இதுவே வரலாற்று உண்மை அன்பர்களின் குறிப்பினால் வரையப்பட்டு கிடைக்கப்பட்ட வள்ளலாரின் உருவத்திற்கு அவர்தம் தனி நெறிக்கு முரணாகவும் அவரால் கைவிடப்பட்ட சைவ சமய அடையாள குறியீடான "விபூதி கோலத்தில்" வெளியிடுவது சரியா?
மேலும், இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட "தபால் தலை" யிலும் வள்ளலாரை திருநீறு கோலத்தில் சித்திரிக்கப்பட்டதை எதிர்த்தும் மேதகு மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டு இந்திய தபால் துறைக்கு ஒரு உத்திரவு பெறப்பட்டது. என்பதையும் தெரியப்படுத்த கடமைபட்டுள்ளேளைம்.
அடுத்து தங்களிடம் இரண்டாவதாக சமர்பிப்பது; வள்ளலார் தன் மார்க்கத்தின் முடிபு எதுவென பக்கம் 411-ல் சொல்கிறார்கள் என் மார்க்கத்தின் முடிபு "சாகா கல்வியை " தெரிவிப்பது அன்றி வேறில்லை. இந்த கல்வியை தெரிவிக்கும் மூன்று உண்மைகûள அனுபவத்தினால் பெறக்கூடும் என்றும் அவ்வனுபவம் சத்திய அறிவில் தெரியும் என்றும், அவ்வறிவு பெறுவதற்கு ஒழுக்கம் நிரப்புதல் வேண்டும் என்பதே வள்ளலார் கண்ட உண்மையாகும்.
இவ்வொழுக்கம் நிரம்ப வேண்டுமானால் என்ன வேண்டும் என வள்ளலார் திருக்கதவு திருகாப்பிடுவதற்கு முந்தின இரவில் ( 30.01.1874) சொல்லியது ; இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும் சன்மார்க்க ஒழுக்கம் இன்னதென்று தெரிந்து கொள்ளவில்லை. யாதெனில் இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளளைக கொள்ளளைதீர்கள் எல்லாப் பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகûள விட்டுத் தலைவனையே தொழுவீர்கள் என்கிறார்கள்.
மேலும் பக்கம் 579ல் (சத்திய விண்ணப்பத்தில்) தேவரீர் திருவருட் சுதந்தரத்தை என்னிடத்தே வைத்தருளி மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைக் ùளல்லாவற்றையும் தவிர்த்து இத்தேகத்தையே நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வில் என்னை வாழ்வித்தல் வேண்டும். இத்தேகத்தைப் பெற்ற எல்லா ஜீவர்களுக்கும் எனக்கறிவித்த வண்ணமே அறிவித்து, அவரவர்கûளயும் உரிமையுடைவர்களளைக்கி வாழ்வித்தல் வேண்டும் என்கிறர்கள்.
வள்ளலார் தன் மார்க்கத்தின் முடிவான பயன் மரணமில்லா பெரு வாழ்வு பெற்று சுத்தமாதி மூன்று தேகங்கûள பெற்ற ஞானி ஆனார்கள் என்பதே சத்தியம். இவ்வாழ்வு போல் எல்லாரும் பெறக்கூடும் என்பதே சுத்த சன்மார்க்கத்து சாத்தியர்களின் நம்பிக்கை. மேலும் 1878 ஆம் ஆண்டில் வெளியான ஒ.ஏ.கார்ஸ்டின் ஐஇந தென்னாற்காடு மாவட்ட ஆட்சித்தலைவரால் வெளியிட்ட தென்னார்க்காடு மாவட்ட அரசு ஆணையில் கீழ்வருமாறு உள்ளது.
…("தன்) அறையை கொஞ்ச காலம் திறக்க வேண்டாம் என்று (வள்ளலார்) கட்டûள இட்டார்". அதன்பிறகு அங்கு அவ்வறையில் அவர் காணப்படவில்லை. அவ்வறை இன்றுவரை பூட்டியுள்ளது. அவர் தன்னுடைய ஆண்டவராகிய அருட்பெருஞ் ஜோதியுடன் அற்புதமாக கலந்து விட்டார் என்றும் பக்குவப்பட்ட காலத்தில் மீண்டும் அன்பர்களுக்கு வெளிப்பட்டு அருள்புரிவார் என்றும் சொல்லப்படுகிறது... (ஓப்பம் ஒ.ஏ. கார்ஸ்டின் 1878)
இந்நிலையில்,
கட்டுரையின் முடிவில் வள்ளலாரின் சமாதி என்று குறிப்பிடுவது எந்நிலையில் சரியாகும் ?
வள்ளலாரின் சத்திய நெறியும், அவர்தம் பெற்ற மரணமில்ல பெருவாழ்வையும் உலகத்தார்க்கு உள்ளது உள்ளபடி அறிவிக்கும்விதமாக எங்களின் இந்த விளக்கத்தினை பிரசுரிக்க தாழ்மையுடன் வேண்டுகிறோம்.
வள்ளலார் மார்க்கத்தில் கடவுள் நிலையறிவது எப்படியெனில் என அவரே நேரிடையாக பக்கம் 438 - ல் சொல்லியது யாதெனில்
ஒழுக்கம் நிரம்பி கருணையே வடிவாக நிற்கும் விசார சங்கல்பம் உண்டானால் நாம் தாழும் குணம் வரும் அத்தருணத்தில் திருவருள் சத்தி பதிந்து அறிவு விளங்கும் ஆதலால் இடைவிடாது கருணை நன்முயற்ச்சியில் பழகல் வேண்டும். மேலும் பக்கம் 550 - ல்
எல்லா சமயங்களுக்கும் எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாகி சுத்த சன்மார்க்கம் விளங்கும் என்கிறார்கள் வள்ளலார் எனவே வள்ளலாரை ஒரு குறிப்பிட்ட சமய அடையாளத்துடன் வெளிப்படுத்துவதும் அவர் சமாதி அடைந்தார் என்று கூறுவது எங்கள் மார்க்கத்தாரின் நம்பிக்கைக்கு முரணாக அமைந்து இருப்பதால் தங்களிடம் எங்களின் மறுப்பினை சமர்பிக்கின்றோம்.
வணக்கம் --- Submitted by M/s Karunai Sabai Salai Trust, Madurai.


Kindly click here to ask your clarification/comments about this article