உண்மைப் பொதுநெறி ---


Author :MRS. APJ. ARUL


உண்மைப் பொதுநெறி
சுத்த சன்மார்க்கம்
“சத்திய
ஞானாசாரம்”
ளவள்ளலார் சொல்லியது
ஆசிரியை
A.P.J. அருள்
வெளியீடு
கருணை சபை-சாலை அறக்கட்டளை,
மதுரை
முன்னுரை :-
அன்பர்கúள,
இந்த “உண்மைப் பொது நெறி - ஞானாசாரம் “ நூல் நல்ல விசாரணைக்காக கருணை சபை-சாலை அறக்கட்டளை வெளியிடுவதை பயனாக கருதுகிறோம்.
உரைநடைப்பகுதி, உபதேசக்குறிப்பில் பக்கம் 410ல் திருக்கதவு திருகாப்பிடுவதற்கு முந்தின இரவில் வள்ளலார் சொல்லியது யாதெனில் ;
“இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும் சன்மார்க்க ஒழுக்கம் இன்னதென்று தெரிந்து கொள்ளவில்லை “
யாதெனில்;” இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளளைகக் கொள்ளளைதீர்கள்; எல்லாப் பற்றுக்களுக்கும் காரணமான ஆசாரவகைகளை விட்டுத் தலைவனையே தொழுவீர்கள்”
வள்ளலார் பேருஉபதேசத்தில் “இரண்டரை வருஷமாக நான் சொல்லிக் கொண்டு வந்தேன். இனிச் சொல்பவர்கள் சில நாள் தடைப்பட்டியிருப்பார்கள்” .... மேலும்
“உண்மைச் சொல்ல வந்தனனே என்று உண்மைச் சொல்ல புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை....”என்று சொல்லியிருப்பதை நாம் உற்று கவனித்தல் வேண்டும்.
வள்ளலாரின் தனி நெறியை உள்ளது உள்ளபடியே தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக ஒரு நூல் அவசியம் என்பதை கருத்தில் கருதி அறக்கட்டளையால் இந்நூல் வெளிவந்துள்ளது. அவை அத்தியாயம், குறிப்புகளளைக இந்நூலில் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. எவ்விதத்திலும் வள்ளலரால் கைவிடப்பட்ட சமய, மதம், அதன் ஆசாரக் குறிப்புகள், செய்திகள் எவையும் இடைசெருகல் செய்யாது முடிந்தவரையில் சிறப்புடன் வெளிவந்துள்ளது. உலகத்தார்க்கு வள்ளலார் கண்ட சுத்த சன்மார்க்கத்தின் உண்மைப்பொது நெறியை ஆசிரியை ஏ.பி.ஜெ.அருள் உள்ளது உள்ளபடியே தந்துள்ளளைர்கள் படித்து நல்லவிசாரணை செய்யவிழைகிறோம்.
இங்ஙனம்
கருணை சபை-சாலை அறக்கட்டளை, மதுரை
(பதிவு எண் 4/2009)
அத்தியாயம்
பக்கம்
அத்தியாயம் அ : கடவுள் 4
அத்தியாயம் ஆ : கடவுள் நிலை 5
அத்தியாயம் இ : கடவுள் நிலையறிதல் 6
அத்தியாயம் ஈ : தயவு(கருணை)விருத்தி 7
அத்தியாயம் உ : சன்மார்க்கங்கள் 8
அத்தியாயம் ஊ : சுத்த சன்மார்க்கம் 11
அத்தியாயம் எ : சாகாக்கல்வி 13
அத்தியாயம் ஏ : நன்முயற்ச்சி 14
அத்தியாயம் ஐ : விதிகள், கட்டளைகள் 15
அத்தியாயம் ஒ : வள்ளலார் 16
அத்தியாயம் ஓ : பெருங்கருணை 18
அத்தியாயம் ஓள : அறிவும், காட்சியும் 19
அத்தியாயம் ஃ : அகஅனுபவஉண்மை 20நூலுக்கு ஆதாரம்
வடலூர் தெய்வநிலைய உரைநடைப்பகுதி 2008ம் ஆண்டு வெளியீடு


சுருக்கம் விரிவு
உப.கு : உபதேசக் குறிப்புகள்
ச.வி. : சத்திய விண்ணப்பங்கள்
பேரு : பேருபதேசம்
அறி / விதி : அறிவிப்புகள் / விதிகள்

கடவுள்
அத்தியாயம் - அ குறிப்புகள் 1 - 7

அ:1 (ச.வி) : எல்லா அண்டங்களையும், எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும், எல்லாப் பொருள்களையும், மற்றையெல்லாவற்றையும் தோற்றுவித்தும், விளக்கச் செய்வித்தும், துரிசு நீக்குவித்தும், பக்குவம் வருவித்தும், பலன் தருவித்தும், எங்கும் பூரணராகி விளங்குகின்ற “ஓர் உண்மைக் கடவுள்” உண்டென்றும் அக்கடவுளை உண்மையன்பாற் கருத்திற் கருதி வழிபாடு செய்யின் (செய்தல் வேண்டும்).
அ:2 (ச.வி) : அக்கடவுள் திருவருள் நமது கருத்தின் கண் வெளிப்பட்டு விளங்குமென்றும், அத்திருவருள் விளக்கத்தால் மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் தவிர்த்து எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்திலும் எவ்வளவுந் தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வை யடைதல் கூடுமென்றும் (கூடும்). அ:3 (ச.வி) : எங்கள் அறிவில் தேவரீர் திருவருளளைல் உண்மைப்பட உணர்த்தியருளப் பெற்றோம்.
அ:4 (ச.வி): சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக்கடவுள் ஒருவரே “
அ:5 (அறி) : இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள், மூர்த்திகள், கடவுளர், தேவர், அடியார், யோகி, ஞானி முதலானவர்களில் ஒருவரல்ல. (இவர்கள்) தங்கள் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதி
அ:6 (ச.வி) : எல்லாப் பொருள் கட்கும் எல்லாக் குணங்களுட்கும் எல்லாச் செயல்கட்கும் எல்லாப் பயனகட்கும். எல்லா வனுபவங்கட்கும், மற்றெல்லாவற்றிற்கும் உருவ, சொரூப,சுபாவ முதலிய இலக்கணங்கள் அனைத்தும் தாமேயாகியும் தாமல்லராகியும் தாக்கியுந் தாக்கற்றும் அகத்தும் அகப்புறத்தும் புறத்தும் புறப்புறத்தும் நீக்கமின்றி நிறைந்து விளங்குகின்ற இயற்கை உண்மைக் கடவுளது இயற்கைத் திருவருட் சமூக (ம்).
அ:7(ச.வி) : ஞானசபை யென்பது ஆன்மப் பிரகாசம். அந்தப் பிரகாசதத்திற்குள் இருக்கும் பிரகாசம் கடவுள்.
கடவுள் நிலை
அத்தியாயம் ஆ குறிப்புகள் 1- 7
ஆ:1 (உப.கு) : இவை (கடவுள் நிலை) படிப்பால் அறியக்கூடாது. இவற்றை அனுபவத்தினாலறிக
ஆ:2 (உப.கு) : சுத்த சன்மார்க்கத்திற்கு உபாயவகைகளளைன அபரமார்க்கக் காட்சி கூடாது. பரமார்க்கமாகிய அக அனுபவே உண்மை.
ஆ:3 (உப.கு) : உபாய வகையை நம்புதல் கூடாது. உண்மையை நம்புதல் வேண்டும்.
ஆ:4 (உப.கு) :அகம், அகப்புறம், புறம், புறப்புறம் என்கின்ற நான்கிடத்திலும் கடவுள் பிரகாசம் உள்ளது.
ஆ:5 (உப.கு) : பக்குவான்மாக்களிடத்தில் கடவுளருள் வெளிப்பட்டால் சுத்தமாதி மூன்று தேகமும் அத்தருணமே வரும், பக்குவமில்லாதவர்களுக்கு அருள் செய்தால் வாழையினிடத்தில் அக்கினி காரியப்படுவது போலாம்.
ஆ:6 (உப.கு) : விந்து, பரவிந்து இரண்டையும் மறுக்க சுத்தவிந்து வந்தது போலும், சிவம், பரசிவம், இரண்டையும் மறுத்தது சுத்த சிவம் போலும்.
ஆ:7 (உப.கு) : சர்வசித்தியையுடைய (உண்மை) கடவுளுக்கு கோடி கோடிப்பங்கு இவர்கள் (சமய, மத கர்த்தாக்கள்) தாழ்ந்த தரத்திலிருக்கின்றார்கள்.
கடவுள் நிலையறிதல்
அத்தியாயம் - இ குறிப்புகள் 1- 8
இ:1 (உப.கு): திருவருள் நிலை அறிவது எப்படி யெனில், ஒழுக்கம் நிரம்பி, கருணையே வடிவாக நிற்கும் விசார சங்கல்ப முண்டானால், நாம் தாழுங் குணம் வரும். அத்தருணத்தில் திருவருட் சத்தி பதிந்து அறிவு விளங்கும். ஆதலால் இடைவிடாது கருணை நன்முயற்சியில் பழகல் வேண்டும்.
இ:2(உப.கு) : என்னை (வள்ளலாரை) யேறாநிலைமிசை யேற்றி விட்டது யாதெனில் தயவு தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது
இ:3(உப.கு) : அந்த தயவுக்கு (கருணைக்கு) ஒருமை வர வேண்டும் அந்த ஒருமையிருந்தால் தான் தயவு வரும் “தயவு வந்தால் தான் பெரியநிலை மேல் ஏறலாம்.
இ:4(உப.கு) : இப்போது என்னுடைய அறிவு அண்டாண்டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது. அது அந்த ஒருமையினாலேதான் வந்தது. நீங்களும் என்னைப் போல் ஒருமையுடனிருங்கள்.
இ:5(உப.கு) : நீங்கள் எல்லவரும் இப்படியே செய்தல் வேண்டும்.
இ:6(உப.கு) : ஒருமை யென்பது தனது அறிவு, ஒழுக்கம் ஒத்த இடத்தில், தானே கூடும். மற்ற இடத்தில், தன்னால் இதரர்களுக்கு இம்சை இல்லாது அவர்கள் செய்யினும் தான் சகித்து அடங்கி நிற்பது.
இ:7(உப.கு) : சங்கல்பத்தின் பொருளும் விரிவும் யாதெனில் விரிவாவது ஐந்து: நிர்விகல்பம், சவிகல்பம், சங்கல்பம், விகல்பம், கல்பம். இவற்றுள் நிர்வி கல்பமாவது கடவுளறிவு; மேற்படி அறிவின் வியாபகமே சவி கல்பம்; உள்ளழுந்தல், அதைச் சிந்தித்தல் சிந்தித்தலே விசாரித்தல் இம்மூன்றுமே சங்கல்ப விகல்ப கல்பம் ஆகும்.
இ:8(பேரு) :தயவு வருவதற்கு ஏதுவான உரிமையும் கூட இருக்க வேண்டும். (உரிமை : தகுதி, சுவாதீனம், பக்குவம்).
தயவு விருத்தி
அத்தியாயம் - ஈ குறிப்புகள் 1- 6
ஈ:1(உப.கு): தயவை விருத்தி செய்வதற்குத் தடையாயிருப்பன சமய ஏற்பாடு ஜாதியேற்பாடு முதலிய கட்டுப்பாட்டு ஆசாரங்கள்
ஈ:2(உப.கு) : அவையாவன ஜாதி ஆசாரம், குலாசாரம், ஆசிரம ஆசாரம், லோகாசாரம், தேசாசாரம், கிரியாசாரம், சமயாசாரம், மதாசாரம், மரபாசாரம்,கலாசாரம், சாதனாசாரம், அந்தாசாரம், சாஸ்திராசாரம் முதலிய ஆசாரங்கள்
ஈ:3(உப.கு) : ஆதலால் மேற்குறித்த ஆசாரங்கள் ஓழிந்து, சுத்த சன்மார்க்க சத்திய “ஞானாசாரத்தை“ வழங்கிப் பொதுநோக்கம் வந்தால், மேற்படி காருண்யம் (தயவு) விருத்தியாகிக் கடவுளருளைப் பெற்று, அனந்த சித்தி முத்திகளைப் பெறக்கூடுமே யல்லது, இல்லாவிடில் கூடாது.
ஈ:4(உப.கு) : கடவுúள இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடையாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள், என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும்.
ஈ:5(உப.கு) : இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளளைகக் கொள்ளளைதீர்கள் எல்லாப் பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டுத் தலைவனையே தொழுவீர்கள்.
ஈ:6(உப.கு) : சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடைகளளைகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கை விட்டவர்களும், காமம் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவரும், கொலை புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள்.
சன்மார்க்கங்கள்
அத்தியாயம் உ குறிப்புகள் 1- 19
உ:1 (உப.கு) : சமய சன்மார்க்கம் மத சன்மார்க்கம் ஆகிய இவற்றிற்குள் அடங்கிய சன்மார்க்கம் அனந்தம், அதில் சமய சன்மார்க்கம் 36, அதை விரிக்க ஆறுகோடியாம். இதுபோலவே மதத்திலும் 36. மேற்குறித்த சமயம் மதங்களிலும் ஏமசித்தி தேகசித்தி முதலியவை உண்டு. அவை சமய மதங்களில் சொல்லுகிற கர்த்தர், மூர்த்திகள், ஈசுவரன், பிரமம், சிவம் முதலிய தத்துவங்களின் காலப் பிரமாண பரியந்தம் இருப்பதே ஒழிய அதற்குமேல் இரா. (இல்லை)
உ:2 (உப.கு) : சமய மதங்களிலும் சமரசம் உண்டு. வேதாந்த சித்தாந்த சமரசம், யோகாந்த கலாந்த சமரசம், போதாந்த நாதாந்த சமரசம், இதற்கு அதீதம் ஷடாந்த சமரசம், இதற்கு அதீதம் சன்மார்க்க சமரசம். இதற்கு அதீதம் சுத்த சமரசம். ஆதலால் சுத்த சமரசத்தில் சன்மார்க்கத்தைச் சேர்க்கச் சுத்த சமரச சன்மார்க்கமாம். இவை பூர்வோத்தர நியாயப்படி, கடைதலைப் பூட்டாக, சமரச சுத்த சன்மார்க்க மென மருவின.
உ:3(உப.கு) : சுத்த சன்மார்க்கம் ஒன்றுக்கே “சாத்தியம்” கைகூடும். சாகாத நிலையைப் பெற்றுச் சர்வ சித்தி வல்லபமும் பெறக்கூடும். மற்றச் சமய மத மார்க்கங்கùளல்லாம் சுத்த சன்மார்க்கத்துக்குச் செல்லக் கீழ்ப்படிகளளைதலால், அவற்றில் “ஐக்கிய மென்பதேயில்லை”.
உ : 4(உப.கு) : சமயத்தில் நித்திய தேகம் கிடையாது. அவை சாதக மார்க்கமே அன்றிச் சாத்தியமல்ல
உ : 5(உப.கு) : சமய சன்மார்க்கமாவது; குணத்தினது லட்சியத்தை அனுசந்தானம் செய்வது குணம் என்பது சத்துவகுணம். இயற்கை உண்மை ஏகதேசமான சத்துவகுணத்தின் சம்பந்தமுடைய மார்க்கமே சமயசன்மார்க்கம் சத்துவ குண இயல்பாவது கொல்லாமை, பொறுமை, சாந்தம், அடக்கம், இந்திரிய நிக்கிரகம், ஜீவகாருண்யம்.
உ : 6 (உப.கு) : மத சன்மார்க்க்கதின் பொருள் நிர்குணலட்சியம் செய்வது நிர்குணமாவது பூர்வகுணமாகிய சத்துவத்தின் வாச்சியானுபவம் பெற்று லட்சியானுபவம் பெறுதல். எவை எனில் முதலாவது, தன்னடிமையாகப் பலரையும் பாவித்தல், இரண்டாவது புத்திரனாகப் பாவித்தல் மூன்றாவது சிநேகிதனைப் போலப் பாவித்தல், நான்காவது தன்னைப்போல பாவித்தல். இது ஜீவநியாயம்.
உ : 7(உப.கு) : மேற்படி சமயத்தில் அவ்வண்ணம் (உ - 5) வாச்சியானுபவம் பெற்றுக் சொரூபனுபவமாகிய சாதனமே சமய சன்மார்க்கம்.
உ : 8(உப.கு): மேற்படி மதத்தில் சத்துவகுண லட்சியார்த்தமாகி (உ 6) கடவுளுக்கு அடிமையாதல், புத்திரானாதல் சிநேகனாதல், கடவுúளதானாதல் இது சத்துவகுணம் லட்சியார்த்த மாகிய மத சன்மார்க்க முடிவு.
உ : 9 (உப.கு) : (மேற்படி) குண, நிர்குண வாச்சிய லட்சியார்த்தமாகிய சமய மதத்தின் அனுபவ மல்லாதது சுத்த சன்மார்க்கம். இம்மார்க்கத்திற்கு மேற்குறித்த மார்க்கங்கள் அல்லாதனவே யன்றி இல்லாதன வல்ல.
உ : 10 (பேரு) :அவையில் (சமய, மத மார்க்கங்களில்) ஒன்றிலாவது குமூஉக்குறி யன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங்கவியச் சொல்லாமல், மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள்.
உ:11 (பேரு) : பிண்ட லட்சணத்தை அண்டத்தில் காட்டினார்கள், யாதெனில், கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகதிபதி யென்றும் பெயரிட்டு,இடம், வாகனம், ஆயுதம், வடிவம், ரூபம் முதலியவையும் இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள். தெய்வத்துக்குக் கை, கால் முதலியன இருக்குமா? என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள்.
உ:12(உப.கு):அவைகளில் ஏகதேச கர்மசித்திகளைக் கற்பனைகளளைகச் சொல்லியிருக்கின்றார்கள். அதற்காக ஒவ்வொரு சித்திக்கும் பத்து வருஷம் எட்டு வருஷம் பிரயாசை எடுத்துக் கொண்டால், அற்ப சித்திகளை அடையலாம். அதற்காக அவற்றில் லட்சியம் வைத்தால், ஆண்டவரிடத்தில் வைத்துக் கொண்டிருக்கின்ற லட்சியம் போய்விடும். ஆண்டவரிடத்தில் வைத்த லட்சியம் போய்விட்டால் நீங்கள் அடையப் போகின்ற பெரிய பிரயோஜனம் போய்விடும்.
உ :13(பேரு) : சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குமூஉக் குறியாகக் குறித்திருக்கின்றதே அன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்கு காலமில்லை.
உ:14 (பேரு) : சமய லட்சியம் இப்போது என்னிடம் எப்படிப் போய்விட்டது பார்த்தீர்களளை ! அப்படி லட்சியம் வைத்ததற்குச் சாட்சிவேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கிற - திருவருட்பாவில் அடங்கி யிருக்கிற - ஸ்தோத்திரங்கúள போதும். அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும் சபைக்குக் கொண்டு வந்தால் அவைகúள சாட்சி சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போ திருந்த தென்றால், அப்போ எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.
உ : 15(பேரு) : இப்போது ஆண்டவர் என்னை ஏறா நிலைமேல் ஏற்றியிருக்கின்றார். எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது.
உ:16(பேரு) : நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லட்சியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லட்சியம் தூக்கி விடவில்லை.
உ : 17(பேரு) : கணபதி, சுப்பிரமணியசுவாமிகளும் (உட்பட அனைத்தும்) தத்துவங்கúள தவிர வேறல்ல புராணங்களினிருதயமெல்லாம் தத்துவ சம்மாரமே. இதன் உண்மை சுத்த சன்மார்க்கத்தில் விவரமாய் விளங்கும்.
உ:18(பேரு) : மேற்குறித்த சமய மத சன்மார்க்கங்களில் வகரவித்தை தகரவித்தையுள. அவை அவ்வச் சமயமத சன் மார்க்கங்களின் தலைமையாகிய கர்த்தா மூர்த்தி ஈசுவரன் பிரமம் சிவம் முதலிய தத்துவங்களின் காலப் பிரமாண பரியந்த மிருக்கும். அதற்குமே லிரா.
உ : 19(பேரு) : சுத்த சன்மார்க்கத்திற்கு சமய, மத, மார்க்கங்கள் யாவும் அநந்நியமாக விளங்கும் ஆனால் அந்நியமல்ல

சுத்த சன்மார்க்கம்
அத்தியாயம் - ஊ குறிப்புகள் 1- 12
ஊ:15(உப.கு) : துவைதமாக இருந்தால், அத்துவைதம் தானே ஆகும். எப்படி எனில், பார்க்கும் தான் கெடுவது அத்வைதம், பார்க்கப்படும் பொருளும் கெடுவது அதீதம். சத்தியம்
ஊ:2(உப.கு) : சுத்த சன்மார்க்கம் யாதெனில், சுத்தம் என்பது ஒன்று மல்லாதது. சன்மார்க்கம், சமய சன்மார்க்கம் இரண்டையும் மறுத்தது சுத்த சன்மார்க்கம். சுத்தம் என்பது சன்மார்க்க மென்னுஞ் சொல்லுக்குப்பூர்வம் வந்ததால், மேற்குறித்த சமய மதானுபவங்களைக் கடந்தது
ஊ:3(உப.கு): எவ்வகையிலும் உயர்வுடையது பாவனாதீத அதீதம், குணாதீத அதீதம், லட்சியாதீத அதீதம், வாச்சியாதீத அதீதம் ஆகிய சுத்த சன்மார்க்கம்
ஊ:4(உப.கு):சுத்த சன்மார்க்கத்துக்குப் படி மூன்று ஷடாந்தங்களின் பொதுவாகிய ஷடாந்த சன்மார்க்கம் 1. சமரச சன்மார்க்கம் 1, சுத்த சன்மார்க்கம் 1, ஆக 3 (சிற்சபை - 1, பொற்சபை 1, சுத்த ஞானசபை 1, ஆக 3 படிகள்)
ஊ:5(உப.கு) : சுத்த சன்மார்க்கத்தின் முடிபு சாகாத கல்வியைத் தெரிவிப்பதேயன்றிவேறில்லை.சாகின்றவன் சன்மாளைக்க நிலையைப் பெற்றவனல்லன். சாகாதவனே சன்மார்க்கி
ஊ :6(அறி) : எல்லாச் சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாகி விளங்கஞ் சுத்த சன்மார்க்கம்
ஊ :7(ச.வி): சுத்த சன்மார்க்க முக்கிய லட்சிய மாகிய ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும், எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்க செய்வித்தருளல் வேண்டும்.
ஊ:8(உப.கு) : குணநிர்க்குண வாச்சிய லட்சியார்த்தமாகிய சமய மதத்தின் அனுபவ மல்லாதது சுத்த சன்மார்க்கம்.
ஊ9(உப.கு) : சுத்த சன்மார்க்கத்திற்கு மேற்குறித்த மார்க்கங்கள் அல்லாதனவே யன்றி இல்லாதன வல்ல.
ஊ:10(உப.கு): ஆன்மாவுக்கு அருள் எப்படி அநந்நியமோ அதுபோல் சுத்த சன்மார்க்கத்துக்கு பூர்வத்தில் சொன்ன சன்மார்க்கங்கள் அநந்நியமாக விளங்கும்.
ஊ:11(உப.கு): இங்கு மற்றவைகளை (தத்துவசித்திக் கற்பனைகளளைகிய சமய மத மார்க்கங்களை மற்றும் அதன் கட்டுபாட்டு ஆசாரங்களை) உன்னி அவலமடைந்து நில்லாமல், சர்வசித்தியுடைய கடவுள் ஒருவருண்டென்று, அவரை உண்மை அன்பால் வழிபாடு செய்து, பூரண சித்தியை பெற வேண்டுவது சுத்த சன்மார்க்கம் கொள்கை.
ஊ:12(உப.கு): மேலும், தனித்தலைவன் லட்சியந் தவிர அநித்திய சடதுக்காதிகளைப் பொருட்படுத்தி உபாசனாதி மார்க்கமாய் வழிபடுவது கொள்கை அல்ல, உபாசனை முதலியவற்றால் வழிபடுதலும் மேற் குறித்த தலைவனைக் குறித்ததே தவிர வேறில்லை.
சாகாக்கல்வி
அத்தியாயம் - எ குறிப்புகள் 1- 6
எ : 1(உப. கு) : சுத்தசன்மார்க்கத்துக்கு அனுபவ ஸ்தானங்கள் கண்டத்துக்கு மேல்.
எ : 2(உப. கு) : சுத்த சன்மார்க்கத்துக்கு முடிவு சாகா கல்வியை தெரிவிப்பதேயன்றி வேறில்லை
எ : 3(உப. கு) : சாகாத்தலை, வேகாக்கால், போகப்புனல் இம்மூன்றும் சாகாத கல்வியைத் தெரிவிக்கும். இவை இரண்டு புறத்திலுமுள. உபாய வகையை நம்புதல் கூடாது. உண்மையை நம்புதல் வேண்டும்.
எ : 4(உப. கு) : இவைகள் (சாகாத்தலை, வேகாக்கால், போகப்புனல் மூன்றும்) யோக அனுபவங்கúள என்று அறிய வேண்டும் தேவர் குறளில் முதல் அதிகாரத்தில் சாகாத கல்வியைக் குறித்துச் சொல்லியிருக்கின்றது
எ : 5(உப. கு): சாகாத்தலை ஆகாசம், வேகாக்கால் வாயு, போகப்புனல் அக்கனி ஆகும். அக அனுபவமே உண்மை
எ : 6(உப. கு) : பத்து ஆள்சுமை ஒரு வண்டிப்பாரம், நானூறு வண்டிச் சுமை ஒரு சூல்வண்டிப் பாரம் சூல்வண்டி ஆயிரங்கொண்ட நூல்களை ஒரு ஜென்மத்தில் ஒருவன் அதிதீவிர ஜீவமுயற்சியால் படிக்கச் சிறிய உபாசனை சகாயத்தால் பெற முடியும். அப்படிப்பட்டவன் ஆயிரம் ஜென்மம் எடுத்துப் படிக்கும் கலை அறிவை, ஒருவன் அருள் முன்னிடாக சுத்தசிவ நோக்கத்தால் அறியத் தொடங்கினால், ஒரு கணத்தில் படித்துக் கொள்ளலாம். இது சத்தியம்
நன்முயற்சி
அத்தியாயம் - ஏ குறிப்புகள் 1- 10
ஏ : 1(உப. கு) : ஆண்டவர் அருள் அடைவதற்கு நாம் இடைவிடாது, கருணை நன்முயற்சியில் பழகுதல் வேண்டும்.
ஏ : 2(உப. கு) : “ கருணை “ என்பது எல்லாயிர்களிடத்தும் தயவும் ஆண்டவரிடத்தில் அன்புமே.
ஏ : 3(உப. கு) : தயவுக்கு ஒருமை வரவேண்டும் ஒருமை என்பது தனது அறிவு, ஒழுக்கம் ஒத்த இடத்தில் தானே கூடும்
ஏ : 4 (அறி) : நற்குண ஓழுக்கங்கள் (அவையாவன) நல்லறிவு, கடவுள், பக்தி, உயிரிரக்கம், பொது நோக்கம், திரிகரண அடக்கம்
ஏ : 5 (அறி) : நற்செய்கை ஒழுக்கங்கள். அவையாவன : உண்மையுரைத்தல், இன்சொல்லாடல், உயிர்க்குபகரித்தல்
ஏ : 6 (அறி) : சுபகுணங்கள் (அவையாவன) உண்மையறிவு, உண்மையன்பு, உண்மையிரக்கம்
ஏ : 7 (அறி) : அமுதக்காற்று இவ்வண்டத்தில் இரவில் அருணோதயந் தொடங்கி உதய பரியந்தம் வியாபகமாய் இருக்கின்றது. அக்காலத்தில் ஜீவர்கள் நன்முயற்சியிலிருப்பது விசேஷநலம்.
ஏ : 8 (அறி) : நன்முயற்சியாகிய ஜீவகாருண்ய மயமாய்ப் பரிச்சியஞ் செய்தால் துரிசு நீங்கும். இங்கு துரிசு என்பது இவ்வண்டத்தில் விஷக்காற்று வியாபகமாய் இருப்பதினால் ஏற்படுகின்ற அஞ்ஞானம்
ஏ : 9 (அறி) : ஒருவன் பிரார்த்தனை செய்வதில் அவனுக்காக மட்டும் செய்வது சரியல்ல. இந்த உலகமெல்லாம் வாழும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும்.
ஏ : 10 (உப.கு) : சாதனங்கள் ஒன்றும் வேண்டாம் காலம் தாழ்த்தாது எல்லா உயிரையும் தன்னுயிரைப் போலப் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும் இதுவே சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய சாதனம்.
விதிகள் - கட்டளைகள்
அத்தியாயம் - ஐ குறிப்புகள் 1- 8
ஐ : 1 (விதி) : இன்று தொடங்கி (18-7-1872) சபைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை யென்றும், சாலைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை யென்றும், சங்கத்திற்கு சமரச சுத்த சன்மார்க்க சத்தியச் சங்க மென்றும் திருப்பெயர் வழங்குதல் வேண்டும்
ஐ : 2 (விதி) : இனி கொஞ்சகாலம் எல்லோரும் ஆண்டவர் இப்போது தீப முன்னிலையில் விளங்குகின்றபடியால் உங்களுடைய காலத்தை வீணிற் கழிக்காமல், நினைந்து நினைந்து என்னும் தொடக்கமுடைய 28 பாசுர மடங்கிய - பாடலிற் கண்டபடி தெய்வபாவனையை இந்தத் தீபத்திற் செய்யுங்கள். நானிப்போது இந்த உடம்பிலிருக்கின்றேன். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன்.
ஐ:3(விதி): விளக்கு வைக்கும்போதும் தூசு துடைக்கும்போதும் நம்மவர்களில் நேர்ந்தவர்கள் புறத்தில் நின்று பரிசுத்தராய் மெல்லெனத் துதிசெய்தல் வேண்டும்.
ஐ : 4(விதி) : சாலையிலிருக்கிறவர்கள் எல்லாம் (சுத்த) சன்மார்க்கத்திற்கு ஒத்து வாயடங்கி மனமடங்கி இருக்க வேண்டும்
ஐ : 5(விதி): வேதம், ஆகமம், புராணம் இதிகாசம் முதலிய கலைகள், எதினினும் லட்சியம் வைக்க வேண்டாம் இதுபோல் சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம்.
ஐ : 6(விதி): ஆண்டவர் ஒருவர் உள்ளளைர் என்றும், அவர் பொதுப்பட உலகத்திலுள்ளளைர் யாவரும் சன்மார்க்கப் பெரும்பயன் பெற்று நித்திய வாழ்வு வாழ்தற்பொருட்டு வெளிப்படக் காரியப்படுகின்றனர் என்றும் அதுகாலையில் நாமும் ஆன்மலாபத்தைப் பெற்றுக் கொள்ளுவோம் எனவும் நம்பி இங்கே வாசிக்கும் யாவரும் வழிபாடு விஷயத்தில் ஒரு தடையும் சொல்லாது ஒத்து இருத்தல் அவசியம்
ஐ : 7(பேரு): நமது ஆண்டவர் கட்டளையிட்டது யாதெனில் நமக்கு முன் சாதனம் கருணை யானதினாலே, ஆண்டவர் முதற்சாதனமாக “அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி” என்னும் திருமந்திரத்தை வெளிப்படையாக எடுத்துக் கொண்டார்.
ஐ : 8(விதி): ஆகார விசயத்தில் அதிக்கிரமம், அக்கிரமம், அஜாக்கிரதை அசாதாரணம் இப்படிப்படட உணவுகளை நீக்கி, சுத்த சத்துவ ஆகாரங்களைப் புசித்து ஆயுள் விருத்தி செய்து கொள்வது சுத்தசன்மார்க்க ஏற்பாடு.
வள்ளலார்
அத்தியாயம் ஒ குறிப்புகள் 1- 11
ஓ:1(ச.வி): தேவரீர் திருவருட் சுதந்தரத்தை என்னிடத்தே வைத்தருளி, மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகùளல்லாவற்றையும் தவிர்த்து, இத்தேகத்தையே நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வில் என்னை வாழ்வித்தல் வேண்டும்
ஓ:2(பேரு): தெய்வத்தைத் தெரிந்து கொள்ளளைது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வமெனச் சுற்றுகின்றார்கள், ஐயோ! நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்த கொள்ளளைததினாலே யல்லவா நம்மைச சுற்றுகின்றார்கள்! என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப்பட்டுக் கொண்டே இருந்தேன். இருக்கின்றேன். இருப்பேன்.
ஓ:3(பேரு): இராத்திரிகூட “ நான் இல்லாமல் இந்த ஜனங்கள் க்ஷணநேரம் இருக்க மாட்டர்கúள என்று ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன். அது இங்கே இருக்கின்ற ஜனங்கள் மட்டில் மாத்திரம் மல்ல. உலகத்திலிருக்கின்ற எல்லா ஜனங்களையும் குறித்தே விண்ணப்பித்துக் கொண்டேன். ஏன் அப்படி ஆண்டவரிடத்தில் விண்ணபித்துக் கொண்டேன். என்றால், எல்லவரும் சகோதரர்களளைதலாலும், இயற்கை யுண்மை யேகதேசங்க ளளைதலாலும், நான் அங்ஙனம் ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை வைத்துக் கொண்டிருக்கின்றேன்.
ஓ:4(பேரு) : இரண்டரை வருஷமாக (ஏப்ரல் 1871 - அக்டோபர் 1873) நான் சொல்லிக் கொண்டு வந்தேன். இனிச் சொல்பவர்கள் சில நாள் தடைப்பட்டிருப்பார்கள். நீங்கள் இது வரைக்கும் இருந்தது போல் இராதீர்கள். இது கடைசி வார்த்தை.
ஓ:5(பேரு): நீங்கள் எல்லவரும் என்போல் ஐயம், திரிபு, மயக்கம் இன்றி அடைய என்னுள்úள எழுந்து பொங்கி ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமையைப் பற்றிக் குறிப்பித்தேன் குறிப்பிக்கின்றேன் குறிப்பிப்பேன்.
ஓ:6(பேரு): நீங்கள் எல்லவரும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள், இப்போது நான் சொல்லிவந்த பிரகாரம் ஐளைக்கிரதையுடன் உண்மையறிவாய் விசாரம் செய்து கொண்டிருங்கள். அவசியம் இதற்குக் காரணமான தயவிருக்க வேண்டியது அந்தத் தயவு வருவதற்கு ஏதுவான உரிமையும் கூட இருக்க வேண்டும். இப்படி இருந்து கொண்டிருந்தால் ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மையையும் பெற்றுக் கொள்வீர்கள். இது சத்தியம், சத்தியம், சத்தியம் இஃது ஆண்டவர் கட்டளை.
ஓ:7(பேரு): உண்மைச் சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை.
ஓ:8(பேரு): அறிவு வந்த கால முதல் அறிந்து அறியாத அற்புத அறிவுகளையும், அடைந்து அறியாத அற்புத குணங்களையும், கேட்டு அறியாத அற்புதக் கேள்விகளையும், செய்து அறியாத அற்புதச் செயல்களையும், கண்டு அறியாத அற்புதக் காட்சிகளையும், அனுபவித் தறியாத அற்புத அனுபவங்களையும், இது தருணந் தொடங்கிக் கிடைக்கப் பெறுகின்றேன் என்றுணருகின்ற ஓர் சத்திய வுணர்ச்சியாற் பெருங்களிப்புடையேனாகி இருக்கின்றேன்.
ஓ:9(பேரு): இத்தேகத்தைப் பெற்ற எல்லாச் ஜீவர்களுக்கும் எனக்கறிவித்த விண்ணமேஅறிவித்து.அவரவர்களையும் உரிமையுடையவர்களளைக்கி வாழ்வித்தல் வேண்டும்.
ஓ:10(பேரு): நீவீர்களும் அவ்வாறு பெற்றுப் பெருங்களிப்பு அடைதல் வேண்டும் என்று எனக்குள்úள நின்று நிறைந்து எழுந்து வெளிப்பட்ட எனது சுத்த சன்மார்க்க லக்ஷிமாகிய ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமைப் பேராசைப் பற்றியே இதனைத் தெரிவிக்கின்றேன்.
ஓ:11(பேரு): திருக்கதவுதிருக்காப் பிடுவதற்கு முந்தின இரவில்:(வள்ளலார் சொல்லியது) இதுகாறும் என்னோடு நீங்கள் பழகியும் சன்மார்க்க ஒழுக்கம் இன்ன தென்று தெரிந்து கொள்ளவில்லை. யாதெனில் இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளளைகக்கொள்ளளைதீர்கள் எல்லாப் பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டுத் தலைவனையே தொழுவீர்கள் என்ற திருவார்த்தை யதனால் தலைவனைத் தொழுவதே தொழிலாக வுடையது கடமை.
பெருங்கருணை
அத்தியாயம் - ஓ குறிப்புகள் 1- 15
ஓ:1(ச.வி): இயற்கை உண்மையரென்றும், இயற்கை அறிவினரென்றும், இயற்கை இன்பின ரென்றும், நிர்க்குணரென்றும், சிற்குணரென்றும், நித்தியரென்றும், சத்தியரென்றும், ஏக ரென்றும், அநேக ரென்றும், ஆதிய ரென்றும், அனாதிய ரென்றும், அமல ரென்றும், அருட்பெருஞ்ஜோதிய ரென்றும், அற்புத ரென்றும், நிரதிசய ரென்றும், எல்லாமானவ ரென்றும், எல்லா முடையவரென்றும் எல்லாம் வல்லவ ரென்றும், குறிக்கப்படுவதல் முதலிய அளவு கடந்த திருக்குறிப்புத் திருவார்த்தைகளளைற் சுத்தசன்மார்க்க ஞானிகள் துதித்தும், நினைத்தும், உணர்ந்தும், புணர்ந்தும் அனுபவிக்க விளங்குகின்ற தனித் தலைமைப் பெரும் பதியாகிய பெருங் கருணைக் கடவுúள.
ஓ:2(ச.வி): அந்த சுதந்தரப் பொருளை (தேக, போக, ஜீவ சுதந்தரங்கள் -உடல், பொருள் ஆவி என்னும் மூன்றையும்) அறியாமையால் யான் எனது என்று கொண்டதோர் சுதந்திரம் தேவரீர் பெருங்கருணைச் சந்நிதி முன்னே சமர்ப்பித்தேன்.
ஓ:3(ச.வி) : தேவரீரது திருவருட் பெருங்கருனையை என்னென்று கருதுவேன் ! எங்ஙனந் துதிப்பேன் ! தேவரீர் பெருங்கருணை ஆட்சிக்கு வந்தனம் ! வந்தனம் !
அறிவு - காட்சி
அத்தியாயம் - ஒள குறிப்புகள் 1 - 6
ஓள-1 (உப.கு): நெற்றியில் ஆன்ம விளக்கம் உள்ளது. ஆதனாலதற்குப் பிந்துஸ்தான மென்றம், அறிவென்றும், பாலமென்றும், முச்சுடரென்றும், முச்சந்தி யென்றும், முப்பாழென்றும், நெற்றிக் கண் என்றும், கபாடஸ்தான மென்றும், சபாத்துவார மென்றும், மகம்மேரு வென்றும் புருவமத்திய மூலமென்றும் சிற்சபை யென்றும் பெயராம்
ஓள -2(உப.கு) : ஒரு பொருளினது நாம ரூப குண குற்றங்களை விசாரியாமல் அந்தப் பொருளைக் காணுதல் இந்திரிய அறிவு, இந்திரியக்காட்சி. அதன் நாம ரூபத்தையும் குண குற்றங்களையும் விசாரித்தறிதல் கரணமாகிய மனஅறிவு, கரணக்காட்சி. அதன் பிரயோஜனத்தை யறிதல் ஜீவஅறிவு, ஜீவக்காட்சி அந்தப் பொருளினது உண்மையை அறிதல் ஆன்ம அறிவு, ஆன்மக்காட்சி.
ஓள -3 (உப. கு): எதையும் (உண்மையை) தானாக அறிதல் ஆன்ம காட்சி / ஆன்ம அறிவு. இதற்கு தோன்றுமறிவு 1, தோற்றுவிக்குமறிவு 1, பதியறிவு 1 ஆக 3.
ஓள -4(உப. கு) : ஞானசபை யென்பது ஆன்மப் பிரகாசம், அந்தப் பிரகாசத்திற்குள் இருக்கும் பிரகாசம் கடவுள், அந்த உள்ùளளைளியின் அசைவே நடனம், இவற்றைத்தான் சித்தசபை அல்லது ஞானசபை என்றும், நடராஜர் என்றும், நடனம் என்றும் சொல்லுகின்றது. பிண்டத்தில் ஆன்மாகாசம் பொற்சபை ஆகும்.
ஓள -5 (உப. கு) : கடவுளறிவு எல்லா வஸ்துக்களையும் தெரிந்து அனுபவிக்கச் செய்கின்ற சூரியப் பிரகாசம் போன்ற “கடவுளறிவே” “அனுபவ ஞானம்”.
ஓள -6 (உப. கு) : ஞானமென்பது மூன்று வகைப்படும் அவை உபாயஞானம் உண்மை ஞானம், அனுபவஞானம், இவற்றின் தாத்பரியம், நஷத்திரப்பிரகாசம் போல் தோன்றிய ஜீவ அறிவே உபாயஞானம் , சந்திரப்பிரகாசம் போல் தோன்றி அறியும் ஆன்ம அறிவே உண்மை ஞானம், எல்லா வஸ்துக்களையும் தெரிந்து அனுபவிக்கச் செய்கின்ற சூரியப் பிரகாசம் போன்ற கடவுளறிவே அனுபவஞானம்,
அக அனுபவ உண்மை
அத்தியாயம் - ஃ குறிப்புகள் 1 முதல் 12
ஃ-1 (உப.கு) : ஆகாசம் அனாதி, அதுபோல் அதற்குக் காரணமான பரமாகாச சொருபராகிய கடவுள் அனாதி. அனாதியாகிய ஆகாசத்தில் காற்றும் அனாதி. அனாதியான வெளியில் காற்று எப்படி அனாதியோ, அப்படிக் கடவுளிடத்தில் அருட்சத்தி அனாதியாய் இருக்கின்றது. ஆகாயத்தில் அணுக்கள் நீக்கமற நிரம்பி இருக்கின்றன. இது போல் கடவுள் சமூகத்தில் ஆன்மாகாசத்தில் அணுக்கள் சந்தானமயமாய் நிரம்பி இருக்கின்றன. அந்த அணுக்களுக்கு ஆன்மா என்றே பெயர்.
ஃ2(உப.கு) : பூதாகாயத்திலிருக்கும் சாதாரண அசாராண அணுக்கள் எழுவகையாயப் பிரியும், அவையாவன, வாலணு, திரவவணு, குருவணு, லகுவணு, அணு, பரமாணு, விபுவணு, மேற்படி அணுக்கள் அனந்தவண்ண பேதமாய் இருக்கும். இவற்றில் காரியவணு, காரிய காரணவணு, காரணவணுஎன மூன்று வகையாய், பக்குவ, அபக்குவ, பக்குவாபக்குவமென நிற்கும், யாவையெனில் பக்குவ ஆன்மா, அபக்குவ ஆன்மா, பக்குவாபக்குவ ஆன்மா என மூவகைப்படும். ஆகாயத்திலிருக்கும் அணுக்கள் மூன்று விதமானதற்குக் காரணம் அங்குள்ள காற்றேயாம். அதுபோல் ஆன்மாக்கள் மூவிதமானதற்குக் காரணம் கடவுள் சமுகத்திலுள்ள அருட்சத்தியேயாம்
ஃ-3(உப.கு) : மூவகையான ஆன்மாக்களுக்கு - அருட்சத்தியின் சமுகத்தில் தோன்றிய இச்சை, ஞானம், கிரியை யென்னும் பேதத்தால்ஆன்மாக்களுக்குத் தேகம் மூன்றுள யாவையெனில் கர்ம தேகம், பிரணவதேகம், ஞானதேகம் , என மூன்று விதம்.
ஃ-4(உப.கு) : பெரிய புராணத்தில் 63 நாயன்மார்களை அனுஷ்டித்தால் அது ஒவ்வொரு சித்தினைக் கொடுக்கும். சைவபுராணம், விஷ்னு புராணம், .... புரணங்களி ருதயமெல்லாம் தத்துவசம்மாரமே இதன் உண்மை சுத்த சன்மார்க்கத்தில் விவரமாய் வெளியாகும்
ஃ-5(உப.கு) : தத்துவமென்பது தத் +த்வம் = தத்துவம் தத் - அது அது என்பது சிவம் த்வம் - அதன் தன்மை ஆதலால் சிவத்தின் தன்மை (சம்மாரம் - அழியக்கூடியவை - அநித்தியம்).
ஃ-6(உப.கு) : கடவுள் ஏகம் அனேக மென்பதற்குத் தாத்பரியம் சமயத்தில் சிவம் ஏகம், பிரமாதிகளனேகம்; மதத்தில் பிரமம் ஏகம், பரவிந்து பரநாதம் முதலியவை அனேகம், சமயாதீதத்தில் சொல்லிய பிரமம் முதல் சுத்தப் பிரமம் வரையிலும் ஏகம், அதைத் பெற்றவர்கúளனேகம், சாதாரண பாகத்தில் கடவுள் ஏகம், ஜீவர்கள் அனேகம் சுத்த சன்மார்க்கத்தில் “கடவுள்” ஏகம் கடவுளருளளைல் சுத்தமாதி மூன்று தேகங்களைப் பெற்ற ஞானிகளனேகம்.
ஃ-7 (உப.கு) : சுத்த சன்மார்க்க லக்ஷிய அனுபவ விருப்ப முடையவர்களுக்கு நனவினும் மண்ணாசை, கனவினும் பெண்ணாசை, சுழுத்தியினும் பொன்னாசை முதலிய மூன்றுங் கூடாது.
ஃ-8 (உப.கு) : கடவுள் ஒன்றல இரண்டல ஒன்றுமிரண்டுமானார் என்பதற்குத் தாத்பரியம் ஒன்றல - கடவுளளைனவர் ஒன்றாகிய ஞானதேகசியும் அல்ல. இரண்டல - சுத்தப் பிரணவதேகியும் அல்ல. ஒன்றுமிரண்டுமானார். கடவுளளைனவர் தன்னருளைப் பெற்ற சுத்த ஞானிக்கு ஞானதேகத்தையும் சுத்தப் பிரணவதேகத்தையுங் கொடுக்க முதற் கருவியாக இருக்கின்றார். இதை அனுபவத்தால் குருமுகத்தில் உணர்க.
ஃ-9 (உப.கு) : பேரின்பப் பெருவாழ்வில் என்னை அடைவிப்பதற்கு திருவுளங்கொண்டு, அருட்பெருஞ் ஜோதியராகிய, நான் எவ்விதத்தும் அறிதற்கரிய உண்மைப் பேரறிவை அறிவித்தும், நான் எவ்விதத்தும் காண்பதற்கரிய உண்மைப் பெருங்காட்சிகளைக் காட்டுவித்தும் , நான் எவ்விதத்தும் செய்தற்கரிய உண்மைப் பெருஞ் செயல்களைச் செய்வித்தும், நான் எவ்விதத்தும் அடைதற்கரிய உண்மைப் பெரு நன்மைகளை அடைவித்தும், நான் எவ்விதத்தும் அனுபவித்த ற்கரிய உண்மைப் பேரனுபவங்களை அனுபவித்தும் எனது அகத்தினும் புறத்தினும் இடைவிடாது காத்தருளி யெனது உள்ளத்திலிருந்து உயிரிற் கலந்து பெருந்தயவால் திருநடஞ் செய்தருளுகின்றீர். இங்ஙனஞ் செய்தருள்கின்ற தேவரீரது திருவருட் பெருங்கருணைத் திறத்தை என்னென்று கருதி என்னென்று துதிப்பேன்.
ஃ-10 (உப.கு) : சுத்தசன்மார்க்கத்துக்கு அனுபவஸ்தானங்கள் கண்டத்துக்கு மேல்.
ஃ-11 (உப.கு) : திரையோதச நிலைகள்
1. பூத நிலை 2. கரணநிலை
3. பிரகிருதி 4. மோகினி
5. அசுத்தமாயாநிலை 6. அசுத்தமகாமாய நிலை
7. சுத்தமாயாநிலை 8. சுத்த மகாமாயா நிலை
9. சர்வ மகாமாயாநிலை 10. குண்டலி நிலை
11. பிரணவ நிலை 12. பரிக்கிரக நிலை
13. திருவருள் நிலை
ஆக 13 இதற்கு அதீதத்தில் சுத்த சிவ நிலை இவைபடிப்பால் அறியக்கூடாது.
ஃ12 (உப.கு) : ஞானயோக அனுபவ நிலைகள்
1. படிகமேடை 2. ஆயிரத்தெட்டுக்கமலஇதழ்
3. ஓங்காரபீடம் 4. குண்டலிவட்டம்
5. ஜோதிஸ்தம்பம் 6. சுத்த நடனம்
இவற்றை அனுபவத்தினாலறிக. இஃது நிராதார லட்சணம்

திருக்கதவுதிருக்காப் பிடுவதற்கு முந்தின இரவில்
வள்ளலார் சொல்லியது
இதுகாறும் என்னோடு நீங்கள் பழகியும் சன்மார்க்க ஒழுக்கம் இன்ன தென்று தெரிந்து கொள்ளவில்லை. யாதெனில் இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளளைகக் கொள்ளளைதீர்கள் எல்லாப் பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டுத் தலைவனையே தொழுவீர்கள்
திருஅருட்பிரகாச வள்ளலார்
“சத்திய ஞானாசாரம்”
v எங்கும் பூரணராகி விளங்குகின்ற ஓர் உண்மைக்கடவுள் உண்டென்றும், அக்கடவுளை உண்மையன்பால் கருத்தில் கருதி வழிபாடு செய்தல் வேண்டும். அக அனுபவமே உண்மை.
v அக்கடவுளின் அருள், தயவு என்னும் கருணையால் கிடைக்கும். கருணை என்பது எல்லா உயிர்களிடத்தும் தயவும், ஆண்டவரிடத்தில் அன்புமே.
v தயவுக்கு ஒருமை வரவேண்டும். தனது அறிவு ஒழுக்கம் ஒத்த இடத்தில் தானே தோன்றுவது ஒருமையாகும்.
v தயவு விருத்திக்கு தடையாக இருக்கும் சமய, சாதி ஏற்பாடு முதலிய கட்டுப்பாட்டு ஆசாரங்களை விட்டொழித்து, சத்திய ஞானாசாரத்தை பெற்று “பொதுநோக்கம்” வருதல் வேண்டும்.
v உண்மையறிவு, உண்மையன்பு, உண்மையிரக்கம் முதலிய சுபகுணங்களைப் பெற்று நற்செய்கையுடையராய் இருத்தல் வேண்டும்.
v தனித்தலைமைப்பதியாகிய “பெருங்கருணை” கடவுளின் அருளளைல் மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகள் நீங்கும்.
உலகில் காணும் சமய, மத, மார்க்கங்களில் லட்சியம் வையாதீர்கள். எல்லாவற்றிற்கும் உண்மைப் பொதுநெறியாக விளங்கும் சுத்த சன்மார்க்கமே உயர்வுடையது.
Kindly click here to ask your clarification/comments about this article