"மரணமில்லா பெருவாழ்வு" வேணுமா, வேண்டாமா?


Author :APJ. Arul Karunai sabai salai, Madurai


நல்ல விசாரணை - APJ. ARUL
1) வேணுமா, வேண்டாமா?
திரு அருட்பிரகாச வள்ளலார் யார்? மற்றும்
அவர் கண்ட சுத்த சன்மார்க்கம்
அவர் காட்டிய வழி (மார்க்கம்) என்ன சொல்கிறது?
வள்ளலாரையும் அவர்தம் சுத்தசன்மார்க்கத்தையும் கருத்தில் கொண்டு, அவர் மற்றும் அவரின் மார்க்கத்தின் வழி நடப்பதற்கு நமது அறிவு விரும்புகிறது என்றப் பிறகு வள்ளலாரின் "கட்டளைப்படியே" நடக்க வேண்டும்.
அன்பர்களே!
"மரணமில்லா பெருவாழ்வு"
வேணுமா, வேண்டாமா?
உலகில் எந்தொரு சமய, மத மார்க்கங்களிலும் இந்த பெரும்பயனைப் பற்றி தெரிவிக்கவில்லை. பிறவாநிலைப் பற்றி சொல்லப்பட்டுள்ளதே அன்றி "சாகா நிலைப்" பற்றிச் சொல்லவில்லை.
ஆக, சாகாநிலைப்பற்றி அறிவிக்கும் மார்க்கம் சுத்த சன்மார்க்கம் ஒன்றே. இந்த பேரின்ப பெருவாழ்வு வேணும் என்றால் இவ்வாழ்வை பெற்ற வள்ளலார் என்னச் சொல்கிறாரோ அதன்படியே நடக்க வேண்டும்.
நிற்க! கவனிக்க! ஏற்க!
இக்கட்டுரை வள்ளலாரின் சத்திய வாக்கியங்களின்படியே அமைகிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
"ஆசாரங்களை ஒழித்து"...எனத் தெளிவாக சொல்கிறார்கள். (ஆதாரம் உரைநடைப்பகுதி) மற்றும்
"பொது நோக்கம்" வருவித்தல்
இந்த "இரு முக்கிய செய்கைகளை" தான் வள்ளலார் நம்மை செய்ய சொல்கிறார்கள். எதற்காக இந்த "இரு செய்கைகளை” செய்யச் சொல்கிறார்கள்.
"கருணை" விருத்திக்காகவே.
இந்த "கருணை"யே உண்மை இறைவனின் அருளை பெற்றுத் தரும்.
நிற்க!
அன்பர்களே,
நல்ல செயல்களை செய்யதான் எல்லாரும் விரும்புவோம். ஆனால் ஏற்படுகின்ற தடையால் நல்ல காரியங்களை செய்ய முடியாமல் போகிறது. அதே போல் தான்,
"கருணை" விருத்திச் செய்வதற்கும் தடைகள் நமக்கு ஏற்படுகிறது என்கிறார் நம் வள்ளலார் அது எதுவெனில்;
சாதி சமய கட்டுப்பாட்டு ஆசாரங்களே!
அன்பர்களே!
நாம்,
இங்கு நாம் என்றால் வள்ளலாரையும் அவர்தம் சுத்தசன்மார்க்கத்தையும் விரும்பி ஏற்று உள்ளவர்கள். பொதுவாக நம்மிடம் "சாதி" ஆசாரம் இல்லாமல் இருக்கிறோம் (?) ஆனால் சமய ஆசாரம்? கொண்டிருக்கிறோமே
"சமயங்களின் மீது லட்சியம் வையாதீர்கள்" இது வள்ளலாரின் கட்டளை.
"சமயங்களில் காட்டப்பட்டுள்ள கடவுளர், தேவர் அனைவரும் தத்துவ சம்மாரங்களே" இது வள்ளலாரின் வாக்கியம்.
"இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாடுக் கர்த்தர்கள், மூர்த்திகள், கடவுளர், தேவர், அடியார், யோகி, ஞானி முதலானவர்களில் ஒருவரல்ல.
"புராணம் இதிகாசகம்" எதிலும் லட்சியம் கூடாது.
"இதுவரை எவரும் உண்மை உரைக்கவில்லை"
"எல்லாரும் செத்து ஒழிந்தினரே"
ஆக,
"மரணமில்லா பெருவாழ்வு" வேண்டும் என விருப்பம் உள்ளவர்கள் வள்ளலார் என்னச் செய்யச் சொல்லி கட்டளையிட்டாரோ அதன்படி நடக்க வேண்டும்.
மரணமில்லா பெருவாழ்வு வேணுமா, வேண்டாமா?
"உண்மை கடவுளின் நிலை குறித்த நல்ல விசாரணை செய்வோம். மற்ற எந்தொரு சமய, மத மார்க்க கர்த்தர், கடவுளர், தேவர், யோகி, ஞானி முதலியோர்களின் கொள்கை, நூல்கள், ஆசாரங்கள், முதலியவற்றின் மீது வள்ளலார் கட்டளையிட்டபடி லட்சியம் நமக்கு (வள்ளலார் வழி அன்பர்கள்க்கு) எதிலும் வேண்டாம்.
-நல்ல விசாரணை தொடரும். APJ.ARUL
(திருமதி.ஏபிஜெ அவர்களே!
மற்ற சமய, மத, மார்க்கங்களின் கொள்கைமீது, அவற்றின் புனிதநூல்கள் பற்றி ஏன் விசாரணை கூடாது?) s
Yes , will make good enquiry about this.--- APJ.ARUL

Kindly click here to ask your clarification/comments about this article