கோழி,மீன், ஆட்டினை தின்னலாகுமோ !- -By APJ.ARUL


Author :apj.arul


சத்து நிறைந்த பாலை
தந்து காக்கும் ஆட்டினை
கத்த கத்த அதனையே
நாமும் அறுத்து தின்னலாகுமோ !
கூவி நம்மை எழுப்பிவிடும்
கோழி நல்ல பறவையாம்
ஆவி போக அதனையே
நாமும் அறுத்து தின்னலாகுமோ !
தாகம் தீர்க்கும் தண்ணீரில்
தங்கியிருக்கும் அழுக்கினை
போக வைக்கும் மீன்கûளயே
நாமும் பிடித்து தின்னலாகுமோ !
போதும் பாவம் என்றே சொல்லி
புனித சைவம் கொள்வோமே ! --apj. arul

Kindly click here to ask your clarification/comments about this article