உங்களுக்கு தெரியுமா ?


Author :apj.arul


உங்களுக்கு தெரியுமா ?
விலங்கு யோனி வர்க்கங்ளுக்கும் மனித தேகத்திற்கும் நடுவே நாம் எடுத்த பிறவிகள் இரண்டு என்கிறார் வள்ளலார். (சத்திய சிறு விண்ணப்பம்)
1. தேவ யோனி வர்க்கங்கள்
2. நரக யோனி வர்க்கங்கள்
பைசாசர், பூதர், இராக்கதர், அசுரர், சுரர் முதலியவர்கள் தேவயோனி ஆவார்கள்.
இவர்கள் அலைப்படுதல், அகப்படுதல், அகங்கரித்தல், அதிகரித்தல், மறந்து நிற்றல், நினைந்து நிற்றல், மயக்குறுதல், திகைப்புறுதல், போரிடுதல், கொலைப்படுதல், முதலிய பல்வேறு அவத்தைகளால் இறக்கிறார்கள்.
காட்டகத்தார், கரவு செய்வார், கொலை செய்வார் முதலியவர்கள் நரக யோனியாவர்கள்.
இவர்கள் பயப்படல், சிறைப்படல், சிதைபடல், முதலிய அவத்தைகளால் இறக்கிறார்கள்.
மனிததேகம் ஒன்றே உண்மையறிந்து அழியாப் பெருவாழ்வைப் பெறுதற்குரிய உயரறிவுடைய தேகமாகும்.

அன்பர்களே இங்கு நாம் தேவர்களா? நரகர்களா? மனிதர்களா?
-ஏபிஜே.அருள்

Kindly click here to ask your clarification/comments about this article