வள்ளலார் "ஆசை" யோடுயிருந்தாரா?


Author :apj.arul


வள்ளலார் "ஆசை" யோடுயிருந்தாரா?
*************** ********* ***************************
உலகின் எத்தனையோ மார்க்கங்கள் தோன்றியுள்ளன. அதன் தலைவர்கள், கர்த்தர், தூதர், கடவுளர் எவர் ஒருவரும் பெற்றிடாத அல்லது அறிவித்திடாத ஒன்று உள்ளது என்றால் அது "சாகா கல்வியே".
மனித உடம்பை அழியா உடம்பாக இறைவன் மாற்றி கொடுக்கிறார்.
வள்ளலாருக்கு இறைவன் அழியா உடம்பை அருளினார்.
இத்தேகத்தை மனிதராகிய எல்லாரும் பெறக்கூடியதாகவே உள்ளது.
எல்லாரும் இப்போரின்ப வாழ்வை பெறவேண்டும் என்பதே வள்ளலாரின் முடிபு, விருப்பம், மற்றும் அவர் மார்க்க நெறியாக உள்ளது.
நிற்க!
இறைவன் வள்ளலாருக்கு இந்த அழியா உடம்பை எங்ஙனம் கொடுத்தார்? என்பதை நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.
அதற்கு அவரின் ஆசையே காரணமாகும்.
தன் ஆசையை நிறைவேற்ற இடைவிடாது நன்முயற்சியில் இறங்கினார்.
அவர் ஆசை எதுவெனில்;
நம் நம்முடைய நிலை எப்படிப்பட்டது?
நம்மை காக்கும் தெய்வத்தின் நிலை எப்படிப்பட்டது?.
என்று அறியும் ஆசையோடு இருந்தார்.
அண்டங்கள் குறித்து அறிய நாம் வள்ளலாரைப் போல் ஆசை படவேண்டும்.
நம் வள்ளலார் அண்டப்பரப்பின் திறங்கள் அனைத்தும் அறிய ஆசைப்பட்டார்கள்.
அன்பர்களே நாமும் வள்ளலாரைப்போல் ஆசைப்படவேண்டும்.
வள்ளலாரின் ஆசையை தெரிந்து கொண்ட இறைவன் அவரின் உண்மை அறிவைதூண்டிவிட்டு ஆசைப்பட்டபடியே அண்டங்கள் அனைத்து திறத்தையும் தெரிவித்து, அவை காணும் கண்களை வள்ளலாருக்கு எய்தினார் இறைவன். வள்ளலாருக்கு முழு உண்மையும் ஆண்டவரால் தெரிவிக்கப்பட்டது.
ஆக
நன் முயற்சியால்மட்டுமே வள்ளலாரால் அழியா உடம்பை பெறமுடிந்ததே தவிர வேறு வழியில் அல்ல.
அவரின் நன்முயற்சிக்கு காரணம் அவர் ஆசையோடு இருந்ததே
நாமும் அண்டப்பரப்பின் திறங்கள் அனைத்தும் அறிய வேண்டி ஆசையோடு இருப்போம்.
ஆண்டவர் வருவார் நம் அறிவை தூண்டுவார்
இது சத்தியம். – APJ.Arul

Kindly click here to ask your clarification/comments about this article