இது வள்ளலார் சொல்லிய உண்மை: (to-day 4 nos Q & A):


Author :apj.arul


இது வள்ளலார் சொல்லிய உண்மை: (to-day 4 nos Q & A):
இந்த உண்மை "ஆதாரத்துடனே வெளியிடப்படுகிறது. இதில் நம்பிக்கை வைப்பது அல்லது வைக்காதது அவரவர் உரிமை. ஆனால் வள்ளலார் மார்க்கத்தை சார்ந்தவர் என கூறுவபவர்கள் & நம்பிக்கை வைப்பவர்கள் பதிவு செய்ய வேண்டுகிறேன். இது நாம் வள்ளலாருக்கு செய்யும் மிக பெரிய ஒன்றாகும்.
அன்புடன்
ஏபிஜெ.அருள், Madurai Email: apjarul1@gmail
1. நாம் வணங்க வேண்டிய கடவுள்:
“எங்கும் பூரணராகி விளங்குகின்ற ஓர் உண்மைக்கடவுள் உண்டென்றும், அக்கடவுளை உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபாடு செய்தல் வேண்டும்”.
2) “நாம் வணங்கும்” கடவுள் என்ன
செய்கிறார் எனக் கருத வேண்டும்?
எல்லா அண்டங்களையும்,
எல்லா உலகங்களையும்,
எல்லா உயிர்களையும்,
எல்லாப் பொருள்களையும்,
மற்ற எல்லாவற்றையும்,
தோற்றுவித்தும்,
விளக்கம் செய்வித்தும்,
துரிசு நீக்குவித்தும்,
பக்குவம் வருவித்தும்,
பலன் தருவித்ததும்மாக உள்ளார்.
3) கடவுளை நாம் எங்ஙனம்
வழிபாடு செய்ய வேண்டும்?
கருத்தில் கருதியுள்ள உண்மைக் கடவுளை நாம் வழிபாடு செய்யும் முறை நான்காக உள்ளது. அவையாவன;
1) துதித்தும்
2) நினைந்தும்
3) உணர்ந்தும்
4) புணர்ந்தும்,
அனுபவிக்க வேண்டும் என்கிறார் வள்ளலார்.
­­­­­­­
4) கடவுளிடத்தில் நாம் வேண்ட வேண்டியது என்ன?
** “கடவுள் திருவருள்” நமது கருத்தின்கண் வெளிப்பட்டு விளங்க வேண்டும் என்றும்,
** தேவரீர் திருவருளால் நம் அறிவில் “உண்மை”யை உணர்த்தியருள வேண்டும் என்றும், உண்மை கடவுளிடத்தில் நாம் வேண்ட வேண்டும்.

Kindly click here to ask your clarification/comments about this article

Sathiyam sathiyam sathiyam ..
Written By:Manikandan