ஓர் பணிவான வேண்டுகோள்:


Author : இ.இராமலட்சுமி


ஓர் பணிவான வேண்டுகோள்:
மதிப்பிற்குரிய தலைவருக்கு ஓர் பணிவான வேண்டுகோள்:
மதிப்பிற்குரிய தலைவர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்:
மதிப்பிற்குரிய பெரியோர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்:
மதிப்பிற்குரிய சான்றோர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்
என்னுடைய கோரிக்கையின் முழுவிவரம்:
“இந்திய அரசமைப்பு சட்டம் உறுப்பு எண் 51(A)
இந்திய குடிமக்களுக்குகுரிய அடிப்படை கடமைகளில் ஏழாவது (g) கடமையாக உள்ளது யாதெனில்-
...உயிரினங்களிடம் பரிவு காட்டிடல் வேண்டும்” –
இதனடிப்படையில் மதுரை கருணை சபை சாலை நிறுவநர் இ.இராமலட்சுமி ஆகிய நான் அரசிடம் வைத்துள்ள கோரிக்கையானது;
“ பொதுப்பணத்தில், அரசு செலவில் நடைபெறும் அரசு விழா மற்றும் அரசு துறை சார்ந்த கூட்டங்களில் சைவ வகை உணவுகளே இடம் பெற வேண்டும்” என்பதே.
அதாவது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் குடிமக்களுக்கு கடமையாக அறிவுறுத்தப்பட்ட “உயிரினங்களிடம் பரிவு காட்டிடல் வேண்டும்” என்பதை முதலில் அரசாங்கமும் மற்றும் இந்திய அரசமைப்பு சட்ட உறுப்புகளின் அடிப்படையில் அமைந்துள்ள அனைத்து நிர்வாகங்களும் கருத்தில் கொண்டு இந்திய குடிமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
“பொதுப்பணத்தில், அரசு செலவில் நடைபெறும் அரசு விழா மற்றும் அரசு துறை சார்ந்த கூட்டங்களில் ‘அசைவ உணவு’ பரிமாறப்படுவதை மேதகு மத்திய, மாநில அரசாங்கம் உடனே நிறுத்த வேண்டுகிறேன்.
எந்த ஒருவர் தனிப்பட்ட உணவு பழகத்திலும் நான் தலையிடவில்லை மற்றும் எந்தொருவரின் தனிப்பட்ட உரிமைக்கும் இது எதிரானது அல்ல.
மேலும், பள்ளி,கல்லுரி பாடபுத்தகங்களில் அரசமைப்பில் சொல்லப்பட்ட “எல்லா உயிரினங்களிடமும் பரிவு காட்டிடல் வேண்டும்” என்ற தயவு நெறி குறித்து கல்வி ஏற்படுத்த வேண்டும். இதுவே எங்கள் கோரிக்கை.
அதாவது “இந்திய அரசமைப்பு சட்டம் 51A(g)க்கு அரசாங்கமே மதிப்பு கொடுக்காதபட்சத்தில் எங்ஙனம் அது குடிமக்களுக்கு கடமையாகும்?.
மேலும் 51A(g)...உயிரினங்களிடம் பரிவு காட்டிடல் வேண்டும்” இந்த புனிதமான சத்திய வாக்கியம் இந்திய அரசமைப்பு சட்டத்தில் இருப்பது மிகச்சிறப்பானதாகும்.
மதுரை கருணை சபை சாலை நிறுவநர் - திருமதி இராமலட்சுமி இளங்கோ ஆகிய நான் தங்களிடம் பணிவோடு, மிகத்தாழ்மையுடன் வேண்டுவது யாதெனில் – மேலே சொல்லப்பட்ட எனது கோரிக்கையை கடந்த நான்கு வருடங்களாக மத்திய/மாநில அரசிடம் தொடர்ந்து வைக்கின்றேன் மற்றும் நீதிமன்றம் மூலமாகவும் தொடர்ந்து போராடிவருகிறேன். தங்களின் ஆதரவு இருந்தால் என்னுடைய கோரிக்கை உடனே நிறைவேறும் என்பதை தெரிந்துகொண்டுள்ளேன்.
எல்லா உயிர்களிடத்திலும் “பரிவு காட்டுதல் வேண்டும்” என்பது நமது இந்திய அரசமைப்பு சட்ட சரத்தாக அமைந்துள்ளது, அதனடிப்படையிலேயே எனது கோரிக்கையை வைத்துள்ளேன். எனது கோரிக்கைக்கு தாங்கள் முழு ஆதரவு தர வேண்டுகிறேன்.
எல்லா உயிர்களையும் விரும்பும்போது குறைந்தபட்சம் மனிதன் மனிதனையாவது விரும்புகிற அந்த நல்ல செயல்கள் நடைபெறுவது சத்தியம் சத்தியம். தங்களின் ஆதரவை அன்புடன் வேண்டுகிறேன்.
உண்மை பொது நெறியாக விளங்குகின்ற திருக்குறளில் எல்லோராலும் ஒத்துக்கொள்ளப்பட்டு, பாராட்டப்படுகின்ற அதிகாரங்கள் “கொல்லாமை”, “புலால் உண்ணாமை” ஆனால் அரசு விழாவில், கூட்டங்களில் மற்றும் பொது விழாக்களில் இவ்விரு அதிகாரங்களும்(20 குறள்கள்) தள்ளப்பட்டு 1330 குறளில் 1310 குறளுக்கே இங்கு விழாக்கள் எடுக்கப்படுகின்றன. இது மிகவும் வேதனையாக உள்ளது. அரசு விழாவில், கூட்டங்களில் மட்டுமே நான் இதை நடைமுறைபடுத்த சொல்லுகிறேன், எந்த ஒருவர் தனிப்பட்ட உணவு பழகத்திலும் நான் தலையிடவில்லை. அதற்காக அவர்களிடம் நான் கருணையில்லை என்று சொல்லவில்லை. எவரொருவர் கருணை என்றால் என்ன?,அன்பு என்றால் என்ன?, தயவு என்றால் என்ன?, இரக்கம் என்றால் என்ன?, ஜீவகாருண்யம் என்றால் என்ன?, என்று விசாரிக்க முற்படுகின்றர்களோ அன்று அனைவருமே “எல்லா உயிர்களிடமும் பரிவு காட்டுவார்கள், எந்த உயிருக்கும் துன்பத்தை கொடுக்க முன்வரமாட்டார்கள் என்பது இயற்கையினுடைய அமைப்பாக உள்ளது. உயிர்களிடத்திலே இரக்கம் காட்டுங்கள் என்று நாங்கள் சொல்லுகிறோம் என்றால், அந்த இரக்கம் சம்பந்தபட்ட அனைத்து உண்மைகளையும் நாங்கள் அறிந்ததினாலேயே. இன்றைய காலச்சக்கரத்தில் எல்லா உயிர்களைப் பற்றி சிந்திப்பதற்கோ, எல்லா உயிரையும் தம்முயிர் போல் பாவிக்க காலச்சக்கரத்திலே காலநேரங்கள் இல்லாமல் உள்ளது. அது மாற்றப்படவேண்டும். கருணை, தயவு பற்றி பாடபுத்தகங்களில் வைக்கும்போது கருணையினுடைய உண்மையும், அன்பினுடைய உண்மையும், இரக்கதினுடைய உண்மையும் வெளிப்படும் என்பது திண்ணம்.
எங்களுடைய தொடர் முழக்கத்திற்கு தலைவர்கள் சான்றோர்கள் பெரியோர்கள் இது வரை ஆதரவு தராமல் இருகிறார்கள். அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரிடமும் நாங்கள் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் உயிர் இரக்கத்தின் அடிப்படையிலும், சட்டத்தின் அடிப்படையிலும் தான் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
எல்லா உயிரையும் தம்முயிர் போல் பாவிக்கின்ற உணர்வை வருவித்துக்கொள்ளவேண்டும்
– என்பது வள்ளலாரின் சத்திய வாக்கியம்
குறிப்பு:
“அரசு விழாக்களில் சைவ உணவு வகைகளே இடம்பெறுகின்றன என்று தமிழ் வளர்ச்சி கழகத்தால் என்னுடைய கோரிக்கை ஏற்கப்பட்டது Vide Na.Ka..No 1704/2013/Tamil Dept. Dated 12/03/2013.
But no G.o or circular is issued in this regard till date.
மேதகு மத்திய அரசு Joint Secretary, Home Dept –ல் என்னுடைய கோரிக்கை நிலுவையில் உள்ளது File No: DARPG/P/2014/014108 Dated 21/08/2014.
தலைவர்களின் ஆதரவை வேண்டுகிறோம்
பெரியோர், சான்றோர்களின் ஆதரவை வேண்டுகிறோம்.
 இ.இராமலட்சுமி

Kindly click here to ask your clarification/comments about this article