சமய சன்மார்க்கம்


Author :Karthikeyanசமய சன்மார்க்கம்
வள்ளலாரின் உபதேச குறிப்புக்கள் :
1. சமய சன்மார்க்கம்
2. மத சன்மார்க்கம்
3. சுத்த சன்மார்க்கம்


சுத்த சன்மார்க்கத்தில் சாதகர்கள் , சாத்தியர்கள் என்று இரண்டு வகை காட்டுகின்றார். இவற்றை பற்றி வள்ளலார் கூறும் விளக்கம் :


சமய சன்மார்க்கம் :


இயற்க்கை உண்மை ஏக தேசமான சத்துவ குணத்தின் சம்பந்தம் உடைய மார்க்கமே சமய சன்மார்க்கம் .
1. கொல்லாமை
2. பொறுமை
3. சாந்தம்
4. அடக்கம்
5. இந்திரிய நிக்கிரகம்
6. ஜீவ காருண்யம்


ஆகிய ஆறும் தான் சமய சன்மார்க்கத்தின் இயல்பாகும் .
இது சத்துவ குணத்தின் வாச்சியார்த்தம் .
இவ்வண்ணம் வாசியானுபவம் பெற்று , சொருப அனுபாவம் ஆகிய சாதனமே சமய சன்மார்க்கம்


வள்ளலார் கூறும் சமய சன்மார்க்கம் எது என்பதை ஒரு முறை மேலே படித்து கொள்ள வேண்டும் .


சுத்த சன்மார்க்கிகள் என்று சொல்லி கொள்பவர்கள் மற்ற சமய தெய்வங்களை வழிபாடு செய்வோரையும் ,தீரு நீறு , நாமம் முதலிய சமய சின்னங்களை விடாமல் அணிந்து கொள்வோரையும்,சமய சன்மார்க்கிகள் என்று கூறுவதோடு மட்டும் நில்லாமல் ,எந்த சமய தேவரையும் வழிபடாது , வள்ளலார் உருவ சிலையையோ அல்லது அவரது படத்தையோ மட்டும் வணங்க்வோரை கூட சமய சன்மார்க்கிகள் என்று கூறுகிறார்கள்.


மத சன்மார்க்கம் தொடரும் ....,
REFERENCE : வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்கம(மு. பாலசுப்பிரமணியன்)


சமய தேவரை வழிபாடு செய்பவர்கள் சன்மார்க்க சங்கத்தை சார்ந்து விட்டால் மட்டும் ,வடலூர் வருவதால் மட்டும் , சன்மார்க்கிகள் ஆகவோ அல்லது சமய சன்மார்க்கிகள் ஆகவோ முடியாது. அவர்கள் சமயம் சார்ந்தவர்களே .ஏனெனில் , சமயங்களில் கூறபட்டுள்ள தெய்வங்கள் கற்பனையே என்கிற விவரம் அறியாமலும் , அவற்றை இன்னமும் நம்புவதாலும் , அவற்றை வழிபாடு செய்யாது விட்டால் தம்மை என்ன செய்து விடுமோ , என்ற பயத்தாலும் அவற்றை விடாது வைத்து கொண்டு இருக்கிறார்கள் .


பத்தோடு பதினொன்று என்பது போல் , அவற்றோடு வள்ளலாரையும் வைத்து இருப்பார்கள் . அவர்களை சமய சன்மார்க்கிகள் என்பது சரியானது அல்ல . வள்ளலார் கூற்றுபடி சரியான திருவருள் விளளக்கம் பெறாதவர்களே ஆவார் .


4726.
தெய்வங்கள் பலபல சிந்தை செய்வாரும்
சேர்கதி பலபல செப்புகின்றாரும்
பொய்வந்த கலை பல புகன்றிடுவாரும்
பொய்ச் சம யாதியை மெச்சுகின்றாரும்
மெய்வந்த திருவருள் விளக்கம் ஒன்றில்லார்
மேல் விளைவறிகிலர் வீண் கழிக்கின்றார்
எய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர்
எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந்வள்ளலாரின் அளவு கோலின் படி , மேற குறித்தவர்களை அதாவது பலபல தெய்வங்களை சிந்திபோரும் , கதிகள் பலபல உண்டு என்போரும் ,பொய்யாக சொல்லப்பட்டுள்ள கதைகளையும் ,புராணங்களையும் நடந்த வரலாறு போல புகன்றிடுவாரும் , பொய்யான சமயங்களை போற்றுகின்றோரும் ,இறைவழி வந்த உண்மையான திருவருள் விளக்கம் பெறாத,உண்மை அறிவு விளக்கம் பெற வேண்டிய கூட்டத்தில் சேர்க்க பட வேண்டுமே யொழியே,எக்காரணம் கொண்டும் அவர்கள் சமய சன்மார்க்கிகள் அல்லர் . தெய்வ வழிபாடை வைத்து சமய சன்மார்க்கி என்று கூறாது


கொல்லாமை ,
பொறுமை,
சாந்தம் ,
அடக்கம் ,
இந்திரிய நிக்கிரகம் ,
ஜீவ காருண்யம் ஆகிய ஆறு குணங்களையும் யார் சொருப அனுபவமாக பெறுகின்றார்களோ அவர்களை மட்டும் சமய சன்மார்க்கிகள் " என்று வள்ளலார் கூறுவதை உற்று நோக்கி , இனியாவது யாரை "சமய சன்மார்க்கிகள் என்று கூற வேண்டும் என்பதை அறிந்து கொள்வோம்


CONCLUSION :

கொல்லாமை ,பொறுமை,சாந்தம் , அடக்கம், இந்திரிய நிக்கிரகம் ,ஜீவ காருண்யம் ஆகிய ஆறு குணங்களையும் யார் சொருப அனுபவமாக
பெறுகின்றார்களோ அவர்களை மட்டும் சமய சன்மார்க்கிகள் " என்று வள்ளலார் கூறுகிரார் .


இதில் எந்த குணத்தையும் எண்ணி பார்க்காத நாம்,
வள்ளலார் சிலையை வைத்து வழிபடாததாலும்,
பிரசாதம் வைகாததாலும், தீப ஆராதனை செய்யாததாலும் ,
மட்டுமே சுத்த சன்மார்க்கிகள் ஆகிவிட முடியுமா ? என்று அமர்ந்து
பொறுமையாக சிந்தித்தால் , நாமில் யாருமே "சமய சன்மார்க்கிகள் "
சொல்லி கொள்ள லாயக்கு அற்றவர்கள் என்று வேறு யாரும் கூற வேண்டாம். நம்முடைய மனம் நன்கு கூறும் .

Kindly click here to ask your clarification/comments about this article