உண்மைக் கடவுள்


Author :APJ ARUL1)நாம் வணங்க வேண்டிய கடவுள்:
“எங்கும் பூரணராகி விளங்குகின்ற ஓர் உண்மைக்கடவுள் உண்டென்றும், அக்கடவுளை உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபாடு செய்தல் வேண்டும்”.
2) “நாம் வணங்கும்” கடவுள் என்ன
செய்கிறார் எனக் கருத வேண்டும்?
எல்லா அண்டங்களையும்,
எல்லா உலகங்களையும்,
எல்லா உயிர்களையும்,
எல்லாப் பொருள்களையும்,
மற்ற எல்லாவற்றையும்,
தோற்றுவித்தும்,
விளக்கம் செய்வித்தும்,
துரிசு நீக்குவித்தும்,
பக்குவம் வருவித்தும்,
பலன் தருவித்ததும்மாக உள்ளார்.
3) கடவுளை நாம் எங்ஙனம்
வழிபாடு செய்ய வேண்டும்?
கருத்தில் கருதியுள்ள உண்மைக் கடவுளை நாம் வழிபாடு செய்யும் முறை நான்காக உள்ளது. அவையாவன;
1) துதித்தும்
2) நினைந்தும்
3) உணர்ந்தும்
4) புணர்ந்தும்,
அனுபவிக்க வேண்டும் என்கிறார் வள்ளலார்.
­­­­­­­----
4) கடவுளிடத்தில் நாம் வேண்ட வேண்டியது என்ன?
--“கடவுள் திருவருள்” நமது கருத்தின்கண் வெளிப்பட்டு விளங்க வேண்டும் என்றும்,
--தேவரீர் திருவருளால் நம் அறிவில் “உண்மை”யை உணர்த்தியருள வேண்டும் என்றும், உண்மை கடவுளிடத்தில் நாம் வேண்ட வேண்டும்.
5) இங்கு நாம் உணர வேண்டிய
“அந்த உண்மை” என்ன-?
அந்த உண்மை;
நம் நம்முடைய நிலை எப்படிப்பட்டது?
நமக்கு மேல் நம்மை அதிஷ்டிக்கின்ற தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது?
என்ற உண்மையை உணரவேண்டும்.

Kindly click here to ask your clarification/comments about this article