அகங்காரம் எனும்பொல்லா அடவாதிப் பயலே அடுக்கடுக்காய் எடுக்கின்றாய் அடுத்துமுடுக் கின்றாய் செகங்காணத் தலைகாலும் தெரியாமல் அலைந்து திரிகின்றாய் நின்செபந்தான் சிறிதும்நட வாது இகங்காண அடங்குகநீ அடங்காயேல் கணத்தே இருந்தஇடம் தெரியாதே எரிந்திடச்செய் திடுவேன் சுகங்காண என்றனைநீ அறியாயோ நான்தான் சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றபிள்ளை காணே