அங்கே அடியர் தமக்கெல்லாம் அருளார் அமுதம் அளித்தையோ இங்கே சிறியேன் ஒருவனுக்கும் இடர்தான் அளிக்க இசைந்தாயேல் செங்கேழ் இதழிச் சடைக்கனியே சிவமே அடிமைச் சிறுநாயேன் எங்கே புகுவேன் என்செய்வேன் எவர்என் முகம்பார்த் திடுவாரே செங்கேழ் வண்ணத் தனிக்கனியே - முதற்பதிப்பு, பொ சு; பி இரா பாடம்
அங்கே உன்றன் அன்பர்கள் எல்லாம் அமர்கின்றார் இங்கே நீதான் என்னள வின்னும் இரங்காயேல் எங்கே போகேன் யாரொடு நோகேன் எதுசெய்கேன் செங்கேழ் வேணித் திங்கள் அணிந்தருள் சிவனேயோ