அங்கையில் புண்போல் உலகவாழ் வனைத்தும் அழிதரக் கண்டுநெஞ் சயர்ந்தே பங்கமுற் றலைவ தன்றிநின் கமல பாதத்தைப் பற்றிலேன் அந்தோ இங்கெனை நிகரும் ஏழையார் எனக்குள் இன்னருள் எவ்வணம் அருள்வாய் மங்கையோர் புடைகொள் வள்ளலே அழியா வளங்கொளும் ஒற்றியூர் வாழ்வே