அடிக்கடி நுண்மை விழைந்துபோய் அவைகள் அடுக்கிய இடந்தொறும் அலைந்தே தடிக்கடி நாய்போல் நுகர்ந்துவாய் சுவைத்துத் தவம்புரிந் தான்என நடித்தேன் பொடிக்கடி நாசித் துளையிலே புகுத்திப் பொங்கினேன் அய்யகோ எனது முடிக்கடி புனைய முயன்றிலேன் அறிவில் மூடனேன் என்செய்வேன் எந்தாய்