அடுத்துநான் உன்னைக் கலந்தனு பவிக்க ஆசைமேற் பொங்கிய தென்றாள் தடுத்திட முடியா தினிச்சிறு பொழுதும் தலைவனே தாழ்த்திடேல் என்றாள் தொடுத்துல குள்ளார் தூற்றுதல் வாயால் சொலமுடி யாதெனக் கென்றாள் மடுத்தவெந் துயர்தீர்த் தெடுத்தருள் என்றாள் வரத்தினால் நான்பெற்ற மகளே