அண்டமெலாம் கண்ணாகக் கொளினும் காண்டற் கணுத்துணையும் கூடாவென் றனந்த வேதம் விண்டலறி ஓலமிட்டுப் புலம்ப மோன வெளிக்குள்வெளி யாய்நிறைந்து விளங்கும் ஒன்றே கண்டவடி வாய்அகண்ட மயமாய் எங்கும் கலந்துநின்ற பெருங்கருணைக் கடவு ளேஎம் சண்டவினைத் தொடக்கறச்சின் மயத்தைக் காட்டும் சற்குருவே சிவகுருவே சாந்தத் தேவே
அண்டமெலாம் கண்டவரே ஆடவா ரீர் அகண்டபரி பூரணரே ஆடவா ரீர் பண்டமெலாம் படைத்தவரே ஆடவா ரீர் பற்றொடுவீ டில்லவரே ஆடவா ரீர் கொண்டெனைவந் தாண்டவரே ஆடவா ரீர் கூத்தாட வல்லவரே ஆடவா ரீர் எண்தகுபொற் சபையுடையீர் ஆடவா ரீர் என்னுடைய நாயகரே ஆடவா ரீர் ஆடவா ரீர்