அன்னையினும் பெரிதினிய கருணை ஊட்டும் ஆரமுதே என்னுறவே அரசே இந்த மன்னுலகில் அடியேனை என்னே துன்ப வலையிலகப் படஇயற்றி மறைந்தாய் அந்தோ பொன்னைமதித் திடுகின்றோர் மருங்கே சூழ்ந்து போனகமும் பொய்யுறவும் பொருந்தல் ஆற்றேன் என்னைஉளங் கொள்ளுதியோ கொள்கி லாயோ என்செய்வேன் என்செய்வேன் என்செய் வேனே